Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:43:25 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9758
#KOTW9758
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 7, 2012
DCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: டிச.10 சென்னை நிகழ்ச்சி குறித்து சென்னை மண்ணடி ஜும்ஆ பள்ளிகளில் அறிவிப்பு செய்யப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3051 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலையின் அத்துமீறலுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில், இம்மாதம் 10ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் - காயலர்களை திரளாக அழைத்துச் சென்று மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கோரி, சென்னை - மண்ணடியிலுள்ள ஜும்ஆ பள்ளிகளில் இன்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,

“டி.சி.டபிள்யு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விதிமீறல்கள், விரிவாக்கத் திட்டம் குறித்த அச்சங்கள் ஆகியன குறித்து எடுத்துக் கூற, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிலையத்தில் காயலர்கள் பெருந்திரளாகச் சென்று மனு அளிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.”

என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தின் அடிப்படையில், இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 10ஆம் தேதி - திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு, காயலர்களை பெருந்திரளாக அழைத்துச் சென்று கோரிக்கை மனுவை அளிப்பதென, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், சென்னையிலுள்ள காயலர்கள் உட்பட - வர வாய்ப்புள்ள அனைத்து காயலர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, உரிமைக்காக குரல் கொடுக்க வருமாறு KEPA சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை - மண்ணடி அங்கப்பன் தெருவிலுள்ள மஸ்ஜிதே மஃமூர் பள்ளியில், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையின்போது இந்நிகழ்ச்சி குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ஜும்ஆ உரையாற்றிய பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் காரீ முஹம்மத் இல்யாஸ் காஸிமீ, இப்பிரச்சினை காயல்பட்டினம் மக்களுக்கானதுதான் என்றாலும், அவர்களுக்காக இணைந்து குரல் கொடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்ற அடிப்படையில், அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

அதுபோல, சென்னை - மண்ணடி அங்கப்பன் தெருவிலுள்ள மஸ்ஜிதுல் அஷ்ரஃப் பள்ளியிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின், அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் இதுகுறித்து அறிவிப்புச் செய்து, அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.


இவ்வாறு, KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
K.A.சுலைமான் லெப்பை
பிஸ்மி சைக்கிள் மார்ட்
மண்ணடி - சென்னை

மற்றும்

M.W.ஹாமித் ரிஃபாய்
சென்னை


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [07 December 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24416

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்லதோர் அருமையான அறிவிப்பு .....இது போன்று சென்னை பெரிய மேட் .... T.NAGAR ...ஜும்மா பள்ளியில் கூட அறிவிப்பு செய்து இருக்கலாமே. நம் ஊர் மக்கள் இங்கும் அதிகமாகவே இருப்பதால். அவசியமானதும் கூட .

தங்களின் விழிப்புணர்வு பாரட்டுக்குரியது .....தமிழக அரசு அதிகாரிகளின் பார்வையை நம் ஊர் பக்கம் திருப்புவது சரியாய் செயல் பாடு.

தங்களின் எல்லா முயற்ச்சிக்கும் வல்ல நாயன் ..வெற்றியாக்கி தருவானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abu Rushda (Dubai) [07 December 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24417

God bless the young musketeers from KEPA who call the shots against the monster. They are in the firing line with courage and determination which got no parallel in recent kayal history.

Different kind of Kayalyts, with full of energy and dynamism. Amazing guys…..GOD bless you all.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வெல் டன்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [08 December 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24422

அருமையான யோசனை! சென்னையிலுள்ள முக்கிய பள்ளிவாயில்களிலும் அறிவிக்கப்பட வேண்டும். போற போக்கை பார்த்தா இது ஒரு சர்வதேச இஷ்யூ ஆகிடும் போலிருக்கே...? வெல் டன் ஜாப்...! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by zafarullah (sandalcity) [08 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24425

விடா முயற்சி வெற்றிக்கான முதல்படி.இன்ஷாஅல்லாஹ் இம்முயற்சியில் கிடைக்கும் வெற்றி பிற்காலங்களில் வரும் நம்சந்ததிக்கு நாம் அளிக்கும் பெரும் பரிசளிப்பாகும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved