Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:55:52 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9754
#KOTW9754
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 7, 2012
DCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து KEPA பொதுக்குழுவில் கலந்தாலோசனை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2444 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்கான KEPAவின் பொதுக்குழுக் கூட்டம் 02.12.2012 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPAவின் பொதுக்குழுக் கூட்டம், 02.12.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணியளவில், காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவிலுள்ள ஆயிஷா மன்ஸிலில் நடைபெற்றது.

KEPA துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா அறிமுக உரையாற்றினார்.



பின்னர், DCWவின் விதிமீறல்களுக்கெதிராக நடத்தி முடிக்கப்பட்ட போராட்டங்கள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வருமாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - புதிய தலைவர் தேர்வு:
KEPAவின் தலைவராக இருந்து வரும் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் அவர்கள் - தனது சொந்த அலுவல்கள் காரணமாக தொடர்ந்து பொறுப்பிலிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதால், அமைப்பின் புதிய தலைவராக ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா அவர்களை இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது. அத்துடன், செயற்குழுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.

தீர்மானம் 2 - போராட்டத்தை ஆதரித்தோருக்கு நன்றி:
KEPA ஒருங்கிணைப்பில் கடந்த 29.11.2012 வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் இறையருளால் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் ஒத்துழைப்பளித்த நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக் கமிட்டியினர், அரசியல் சர்வகட்சியினர், வணிகர் சங்கத்தினர், நகர்மன்ற அங்கத்தினர், வேன் - கார் - ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர், அமைப்பு சாரா வணிக நிறுவனத்தினர், அமைப்பு சாரா ஓட்டுநர்கள், உள்ளூர் கேபிள் டி.வி நிறுவனத்தினர், உள்ளூர் இணையதளத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 3 - வரவு-செலவு கணக்கறிக்கை:
KEPA துவக்கப்பட்டது முதல் இன்று வரையிலான வரவு - செலவு கணக்குகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

தீர்மானம் 4 - மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் தீர்மானம் சமர்ப்பிப்பு:
29.11.2012 அன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும், 05.12.2012 அன்று நேரில் சமர்ப்பிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 5 - நகர்மன்ற அங்கத்தினருடன் சந்திப்பு:
29.11.2012 அன்று இரவு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, DCW தொழிற்சாலை தொடர்பாக காயல்பட்டினம் நகர்மன்றம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கும் பொருட்டு, நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் - உறுப்பினர்கள் அடங்கிய நகர்மன்ற அங்கத்தினரை KEPA குழுவினர் விரைவில் சந்தித்துப் பேசுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6 - சென்னை பயண ஏற்பாடு:
DCW ஆலையின் விதிமீறல்கள் மீது நடவடிக்கை கோரியும், அதன் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், சென்னை வாழ் காயலர்களையும், இதர காயலர்களையும் ஒன்று திரட்டி சென்னை - கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளிப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், காயல்பட்டினத்திலிருந்து சென்னை செல்வோருக்கான பயண ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பை அமைப்பின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ மற்றும் ஏ.எஸ்.புகாரீ ஆகியோரிடம் இக்கூட்டம் ஒப்படைக்கிறது.


இவ்வாறு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by suaidiya buhari (chennai) [07 December 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24407

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த மனு கொடுக்கும் பொழுது பெண்களும் கலந்து கொள்ளலாமா? என்பதை நியூஸ் ஆக வெளி இடவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [07 December 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24415

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களின் தீர்மானங்கள் யாவும் சரியானதே .... போராட்டத்தை மேலும் தீவீர படுத்தி நம்முடைய கோரிக்கையை தமிழக அரசு ஏற்கும் வரை ...ஒவ்வொரு கட்டமாக நாம் போரட வேணும்.

நம் தமிழக அரசு அதிகாரிகளின் பார்வை தற்போது நம் ஊர் மக்களின் பக்கம் திரும்பியதே நம் போராட்டதின் வெற்றியின் அறிகுறிதான்.

எல்லா வற்றுக்கும் நாம் >>KEPA << அமைப்பினர் அனைவர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டு உள்ளோம் .

தங்களின் சென்னை சென்று மனு கொடுக்கின்ற.செயல் திட்டமும் கண்டிப்பாகவே பாராட்டு கூறியது தான்.தாங்கள் மீடியாவின் முழுமையான ஒத்துழைப்பையும் நாடுவதும் நல்லதும் ...அவசியமானதும் கூட..........

நம் ஊர் சென்னை வாழ் காயல் மக்கள் யாவர்களும் தயவு செய்து >>KEPA <<அமைப்புடன் சென்று இந்த செயல் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேணும். என்பதும் நம் அனைவரின் எதிர் பார்ப்பு.....

தாங்கள் நம் நகர் மன்ற தலைவி / நம் நகர் மன்ற உறுப்பினர்கள் யாவர்களையும் சந்திப்பதும் சரியானதோர் செயல் தான் ....கண்டிப்பாகவே இவர்களின் முழுமையான சப்போட்டும் தங்களின் >>KEPA << அமைப்புக்கு தேவைதான்.....

தங்களின் பரந்த மன பான்மையை நாம் நினைத்து பெருமை படுகிறோம்.

இது போன்று தங்களின் குழுவினர்கள் நம் ஊரின் முக்கியமான அமைப்பான >>ஐக்கிய பேரவை << தலைவர்களையும் + அதன் அங்கத்தினர்கள் யாவர்களையும் சந்திப்பதும் நல்லது தானே ....நம் போராட்டத்துக்கு யாவர்களின் முழு சப்போடும் அவசியம் தேவை தானே ......

வல்ல இறைவன் தங்களின் போராட்டதில் முழு வெற்றியை தந்து அருள்வானாகவும் ஆமீன்.

புதியதாக பதவி பொறுப்பு ஏற்று உள்ள. ஜனாப். ஹாஜி S.M.M..ஸதக்கத்துல்லாஹ் காக்கா அவர்களுக்கு வாழ்த்து கூறி. காக்கா அவர்களின் துணையுடன் நம் ஊர் மக்கள் அனைவர்களின் நலன் பாதுகாக அவர்களின் முயற்ச்சி வெற்றி அடையவும்.துவா செய்வோமாக. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by MOHAMMED LEBBAI MS (DXB) [07 December 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24419

ஊர் நலனை முக்கியாமாக கொண்டு தன்னலம் பாராது ஓயாது உழைத்திடும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,,, நாளைய சந்ததிகள் நிச்சயமாக உங்களுக்காக துவா செய்யும்,,,, எல்லாம் வல்ல நாயன் ஈருலகிலும் உங்களுக்கு வெற்றியே தருவானாக,,ஆமீன்,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இது ஊடகங்களின் காலம்!!
posted by Salai.Mohamed Mohideen (USA) [08 December 2012]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 24426

DCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான KEPA வின் தொடர் போராட்டங்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நம் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை தருகின்றது. இதற்க்காக தனது பொருள் மற்றும் உடல் உழைப்பை அளித்துவரும் அனைவரின் மீதும் இறைவனின் அருள் உண்டாவட்டுமாக!! DCW வின் ஜால்ரா கூட்டங்கள், உங்கள் முயற்ச்சிகளை தடுக்கவும், குலைக்கவும், அரசியல் பண்ணி சிண்டு முடிஞ்சி விடவும், ஊடகங்கள் / நோட்டிஷ் வாயிலாக உங்கள் மீது களங்கம் விளைவிக்கவும் வதந்திகளை பரப்பவும் முன்வருவார்கள்... எதையும் பொருட்படுத்தாது உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடரவும்.

நம் ஊர் மக்களுக்காக நாளைய நம் தலைமுறையினருக்காக ... இப்பிரச்சனை இன்று வீரியத்துடன் 'Do or Die' என்ற முழுவீச்சுடன் களம் கண்டுள்ளதற்கக்கு மிக முக்கிய காரணம், பெரியவர்கள் வழிகாட்டுதலுடன் 'இளைஞர் பட்டாளம்' முன்னிலை படுத்தபட்டது (பொறுப்பை திணிக்கபட்டது ) தான். இது போன்ற ஒரு அப்ரோச் / 'டீம்' எப்பொழுதும் நமதூருக்கு மிகப்பெரிய பலமே !!

இத்தனை வருடமாக நமது எல்லைக்குள் இருக்கும் DCW பற்றி எதுவும் தெரியாமல் / விழிப்புணர்வே இல்லாமல் இருந்த நமக்கு, DCW பற்றி இன்றைக்கு இவ்வளவு விபரம் நமக்கு தெரிகிறதென்றால் (தொடர் கட்டுரைகள் / அது தொடர்பான பல செய்தி சேகரித்து தருதல் மூலம்) அல்லது விழிப்புணர்வு அடைந்திருக்கிறோமென்றால் அதற்க்கு காரணம் நமது இணையதளம் தான் என்றால் அது மிகையாகாது !!

பிழைப்புக்காக / பொழுதுபோக்குக்காக ஒரே சினிமா, அரசியல், பொழுதுபோக்கு, சிண்டு முடிந்து விடுதல், கட்டுக்கதைகள் என்று இணையதளங்கள் களம் காணும் இக்காலகட்டத்தில்.. நமதூர் இணைய தளங்கள் இவ்விடயத்தில் (DCW) ஆற்றிய சேவையை நிச்சயம் நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஏதோ கடமைக்காக இப்போராட்ட விடயங்களை வெறும் செய்தியாக தருவதோடு ஒதுங்கி விடாமல்... DCW வின் அத்துமீறலை எதிர்த்து போராட வேண்டும் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தி, போராட்ட குழுவினருடன் ஒன்றிணைந்து ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்து.... அவர்களோடு வியர்வை சிந்தி வரும் நமதூர் இணைய தளங்களின் நிர்வாகிகள் / செய்தியாளர்கள் (குறிப்பாக சகோ MS சாலிஹ், SK சாலிஹ், முஜாஹித் அலி) & விடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!

இது ஊடகங்களின் காலம். இது போன்று, நன்மையான ஆக்கப்பூர்வமான அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி 'தொடர்ந்து' நமதூர் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி வளமான காயலை உருவாக்கிடுங்கள் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (6/12/2012) [Views - 2382; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved