காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலை - அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்புரிந்துவருவதை கண்டித்து - 29.11.2012 வியாழக்கிழமையன்று, காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெற்றன.
பொது கூட்டத்தின் இறுதியில் தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று -
காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 2 நடந்த KEPA ஆலோசனைக்கூட்டத்தில், நகர்மன்ற அங்கத்தினரிடம் சமர்ப்பிக்கவேண்டிய விபரங்கள் குறித்து முடிவுசெய்யப்பட்டு - டிசம்பர் 7 வெள்ளிக்கிழமை அன்று மாலை - நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் விபரங்கள் அடங்கிய கடிதம், நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.
|