காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலை - அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்புரிந்துவருவதை கண்டித்து - 29.11.2012 வியாழக்கிழமையன்று, காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெற்றன.
இப்போராட்ட நிகழ்ச்சிகள், நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களிலும், தனியார் தொலைக்காட்சிகள் அடங்கிய காட்சி ஊடகங்களிலும், இணையதளங்களிலும் செய்திகளாக வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் அமைப்பின் அதிகாரப்பூர்வ வார இதழான - உணர்வு பத்திரிக்கையில் - போராட்ட செய்திகள் வெளிவந்துள்ளன.
தொகுப்பு:
ஹாஜி N.S.E.மஹ்மூது,
துணைத்தலைவர், KEPA. |