சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 68-ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 07.12.2012 வெள்ளிக்கிழமை மாலை சகோ.எம்.எம்.மூசா சாஹிப் இல்லத்தில் வைத்து நடைப்பெற்ற அமர்வின் விபரங்கள் பற்றி, அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 68ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 07.12.2012 வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணியளவில்,சகோ.எம்.எம்.மூசா சாஹிப் இல்லத்தில் வைத்து நடந்தேறிய அமர்வுக்கு மன்றத்தின் துணைத்தலைவர் சகோ.மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாத் தலைமை ஏற்றிட அன்னவரின் புதல்வர் சகோ.முஹம்மது முஹ்லிஸ் இறைமறையை அழகுடன் ஒதிடவும் கூட்டம் இனிதே ஆரம்பமானது. கூட்ட தலைவர் நமதூரின் நிகழ்வுகளையும் மன்றத்தின் சேவைதனையும் காலத்தின் அவசியம் அறிந்து சுருக்கமாக உரை நிகழ்த்தினார்.
வரவேற்புரை:
தொடர்ந்து சகோ.எம்.எம்.மூசா சாஹிப் வந்திருந்த அனைவரையும் அகமகிழ்வுடன் வரவேற்று கொண்டார்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
தமாமில் இருந்து பணி மாற்றலாகி மீண்டும் ஜித்தா வந்துள்ள மன்றத்தின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை தொடர்பில் இருந்து வருபவரும், மன்றத்தின் துணை பொருளாளராகவும் இருந்து நற்சேவையாற்றிய அருமை சகோதரர் ஒ.எ.சி,கிஜார் சலாஹுதீன் மற்றும் பொறியாளர் எம்.எம். முஹம்மத் முஹைதீன் இருவரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்து கலந்து சிறப்பு சேர்த்தனர்.
செயற்குழு கூட்ட அறிக்கை:
சென்ற செயற்குழு கூட்டத்தின் அறிக்கை மற்றும் தீர்மானங்களை வாசித்தும இவைகளுக்கு மத்தியில் நடந்தேறிய மன்றம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளையும் விளக்கமாக எடுத்துரைத்தும் புனிதமக்கா வாழ் நம்மன்ற உறுப்பினர்கள் சார்பாக புதிதாய் துவங்கபட்டுள்ள புனித ஹஜ்ஜு,உம்ரா உதவி வழிகாட்டி குழுமத்தை சார்ந்த அன்பர்கள் குறுகிய கால கட்டத்தில் உபயோகமான ஒருசிறு கையேடுதனை உருவாக்கி ஊரிலும்,இங்கு வந்த நம் ஹாஜிகளுக்கும் விநியோகம் செய்தும் மேலும் அவர்களது கடுமையான பணிகளின் மத்தியில் நமது ஊரை சார்ந்த ஹாஜிகளுக்கு அவர்களால் முடிந்த உதவி ஒத்தாசைகள் புரிந்து கொண்டதையும், மன்ற செயலாளர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் மனமார்ந்த நன்றியுடன் பாராட்டியும் கொண்டார்.
மன்றசெயல்பாடுகள்:
நமதூர் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தாரங்கதார ரசாயன தொழிற்சாலை மத்திய மாநில அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு முற்றிலும் மாற்றமாக செயல்புரிந்து வருவதை கண்டித்து நமதூரில் KEPAஅமைப்பின் வழிகாட்டல் மூலம் கடந்த வாரம் நடைபெற்ற ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் பொதுக்கூட்டம் ஆகிய இது சார்ந்த நிகழ்வுகளையும், மேலும் நம் மன்றம் சார்பாக "புற்றுக்கு வைப்போம் முற்று" என்ற குறுந்தகடு தயாரித்து வழங்கி நமதூர் மக்களுக்கு ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம் என்றால் அது மிகையாகாது என்பதையும் இங்கே சுட்டி காட்டி இன்னும் நம் ஊருக்கு பல நலசேவைகளை இம்மன்றம் மூலம் நாம் செய்திட ஆவல் கொள்ள வேண்டும் என்ற அன்பு வேண்டுதலையும் மன்ற செயலாளர் சகோ.எம்.எ.செய்யது இபுராஹிம் கூறி நிறைவு செய்தார்.
நிதி நிலை அறிக்கை:
நிதி நிலை அறிக்கையை சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் தற்போதைய இருப்பு, வரவேண்டிய சந்தா பாக்கிகள் போன்ற விபரங்களைப்பற்றி மிக தெளிவுடன் எடுத்துரைத்தார். கூட்ட மத்தியில் சந்தா தொகைகளும் கூடுதலாக வசூலானது.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி மன்றத்திற்கு வந்திருந்த விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டும், அடுத்து விண்ணப்பங்களை முறைப்படுத்தி இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் மற்றும் அவர்கள் சார்ந்த பள்ளி ஜமாஅத் பரிந்துரையின் படி வந்த கடிதம் இவைகளை சகோ, மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாது பரிசீலித்து, இரப்பை புற்று நோயால் அவதியுறும் ஒருவருக்கும்,சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்க்கும், நீரடைப்பு நோயாளிக்கும் மற்றும் கிட்னியில் நோய் கண்டவர்க்கும் என ஆக நான்கு பயனாளிகளுக்கு மருத்துவ உதவியும் பொறியியல் கல்வி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவருக்கு உயர்கல்வி உதவியும் வழங்கிட ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நமதூரின் இன்றைய நிலவரங்கள்,மன்றம் மூலம் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் என்னென்ன, யான்பு வாழ் சகோதரர்களை சந்தித்தது போன்று, ஜித்தா நகருக்கு புதிதாய் வந்திருக்கும் நம்காயல்வாசிகள்மற்றும் மதீனா வாழ் காயலர்கள் இவர்களை சந்தித்து நம் சந்தாவை வலுப்படுத்தவேண்டிய அவசர அவசியம் குறித்து விவாதித்தும் பிறகு நம்காயல் நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப்பரிமாற்றங்களுடன் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக தீட்டப்பட்டது.
தீர்மானங்கள்:
1.நமதூர் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தாரங்கதார ரசாயன தொழிற்சாலை மத்திய மாநில அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு முற்றிலும் மாற்றமாக செயல்புரிந்து வருவதை கண்டித்து கடந்த வாரம் நமதூரில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்,மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி நம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய KEPA அமைப்பிற்கும்,இதற்காக வேண்டி எல்லா வகையிலும் நல்லாதரவு அளித்த அனைவருக்கும் நன்றியும்,பாராட்டும் தெரிவித்து கொள்கின்றோம்.
2. மன்றத்தின் அடுத்த 69 -ஆவது செயற்குழு கூட்டம் எதிர்வரும் 2013 ஜனவரி மாதம் 11-ம் நாள் வெள்ளி மாலை இன்ஷாஅல்லாஹ் மன்ற தலைவர் சகோ.குளம் எம்.எ.அஹமது முஹைதீன் இல்லத்தில் வைத்து நடைபெறும்.
சகோ.எம்.எ.சி.ஷா மீரான் சாஹிப் நன்றியுரை நவில, இறுதியாக சகோ.எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் பிரார்த்தனையுடன் கூட்ட நிகழ்வுகள் அனைத்தும் மிக இனிதே நிறைவுப் பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஹெச்.அப்துல் காதர்
துணைச்செயலாளர், மற்றும்
சட்னி.எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
செயலாளர்,
காயல் நற்பணி மன்றம், ஜித்தா
|