Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:20:53 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9774
#KOTW9774
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 11, 2012
சுகாதார சுற்றுச்சூழலுடன் - வரும் கல்வியாண்டில் காயல்பட்டினத்தில் CBSE பாடத்திட்ட அடிப்படையில் புதிய பள்ளி துவக்கம்! டிச.12 அன்று கட்டிடப் பணிகள் துவக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5809 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சுகாதாரமான சுற்றுச்சூழலுடன், வரும் 2013 - 2014 கல்வியாண்டில், CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில், காயல்பட்டினத்தில் WISDOM PUBLIC SCHOOL என்ற பெயரில் புதிய பள்ளி துவக்கப்படவுள்ளது.

இதுகுறித்து, அப்பள்ளியை நிர்வகிக்கவுள்ள Vision Educational Trust சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-



WISDOM PUBLIC SCHOOL
Run By Vision Educational Trust, Kayal Patnam – 628204
A Great Place to Grow … Towards a disciplined and moral generation

வல்ல இறைவனின் திருவருளால், காயல்பட்டணம் மற்றும் சுற்றுப்புற மக்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்த CBSE பாடத்திட்ட பள்ளி இன்ஷாஅல்லாஹ் வரும் 2013-14 கல்வியாண்டில் “WISDOM PUBLIC SCHOOL” என்ற பெயரில் VISION EDUCATIONAL TRUST, KAYALPATNAM அறக்கட்டளையால் துவக்கப்படவுள்ளது.

PRE KG முதல் V STD வரை இயங்க உள்ள எமது பள்ளியில் பின்வருமாறு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன:-

• AC வசதியுடன் ‘ ஸ்மார்ட் ‘ வகுப்பறைகள்
• சர்வதேச தர விளைடயாட்டு உபகரணங்களுடன் மொண்டசேரி கல்வி முறை
• SPOKEN ENGLISH WITH NATURAL ACCENT
• தடையில்லா - மரபுசாரா மின் வசதி
• சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
• சுகாதாரமான சுற்றுச் சூழல்
• தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்


பள்ளி கட்டிடப்பணிகள், இன்ஷாஅல்லாஹ் - 12.12.'12 அன்று (நாளை) காலை 11.00 மணியளவில் துவக்கப்படவுள்ளது என்பதை அன்புடன் அறியத் தருகிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
J.செய்யித் ஹஸன் (ட்ரஸ்டி)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah) [11 December 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24451

வாழ்த்துக்கள் .. இறைவன் வெற்றியை தருவான்...

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by L.A.K.Buhary (Hong Kong) [11 December 2012]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 24454

அல்ஹம்துலில்லாஹ்..! மிக சரியான தருணத்தில், சகல வசதிகள் அமையபெற்ற,தேவையான பாடத்திட்டத்தில்,நகரின் எல்லைக்குள் புதியதோர் பாடசாலை அமைய பெற்றமை நமது நகர மக்கள் உட்பட சுற்று வட்டாரத்து மாணவர்களுக்கும் கூட இது ஒரு வரபிரசாதம்.

கல்விஇன்றியமையாதது, என்றென்றும் அழியா செல்வம் என்று தூய உள்ளத்துடனும்,தியாக மனப்பாங்குடனும், இப்பள்ளியை உருவாக்கிய அனைவர்களுக்கும் இம்மையிலும்,மறுமையிலும் அதற்கான நற்கூலி ஏக இறைவன் புறத்திலிருந்து கிடைக்கட்டும் என்று பிரார்த்திப்போம். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. காயல் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி,
posted by NIZAR (KAYALPATNAM) [11 December 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 24456

காயல் மக்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தி என்று சொன்னால் அது மிகையில்லை. இத இததான் நம் மக்கள் வெகுகாலமாக எதிபார்த்து இருக்கிறார்கள். நம் ஊரில் எத்தனை மெட்ரிக் பள்ளிகள் இருந்தாலும் கமலாவதி என்ற CBSE ஸ்கூலுக்கு நிகரான கல்வி மற்றும் ஆங்கில அடிப்படை அறிவுகளை மாணவர்களுக்கு வழங்க முடியாதது நிதர்சன உண்மை. நம் ஊரு மெட்ரிக் மாணவர்களுக்கும் கமலாவதி மாணவர்களுக்கும் இடையே நிறைந்த வேறுபாடுகளை காணமுடியும், பொதுவாக அங்கு படிக்கிற மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல், புரியும் தன்மை தானாகவே வருகிறது.காரணம் தகுதியான ஆசிரியர்களை கொண்டதால் நல்ல ஆங்கில சுற்று சூழலை பெறுகிறது.

இந்த மாயை காரணத்தில் தான் மாசு விதி முறைகளை பேணாமல் மக்களுக்கு அமிலகளிவுகளை கடலிலும்,காற்றிலும்,கலந்து காயல் நகரை துவம்சம் செய்யும் இந்த ஆலையின் பள்ளியில் காயலின் அழகிய குழந்தைகள் நூற்றுகணக்கில் படிக்கிறார்கள்,இப்பொழுது நம் ஊரில் அமைய இருக்கம் CBSE ஸ்கூல் இந்த பள்ளிக்கு மாற்று வழியாக இருக்கும் என நம்புகிறேன்.அழகிய கட்டிட வசதியுடன் அமைய இருக்கும் இந்த பள்ளிக்கூடம் நல்ல ஆங்கில சுற்று சூழலை மாணவர்களுக்கு வழங்க ஆரம்பத்தில் இருந்தே அதற்கான முயற்சியை ஏற்படுத்தவேண்டும்.

ஆசிரியர் சேர்க்கையில் மிகுந்த கவனம் செலுத்துவதின் மூலமே ஸ்கூலின் தரத்தை உயர்த்தமுடியும்,குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்களை அமர்த்தி கடமைக்கு ஸ்கூல் நடத்தும் பாணியில் இல்லாமல்,மிக தரம் வாய்ந்த ஆசிரியர்கள்,அணைத்து வசதிகளையும் ஒன்றிணைந்த வெளி இடங்களை காயல் மாணவர்கள் நினைத்தும் பார்க்காத அசத்தலான பள்ளிக்கூடமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்களை அதன் நிர்வாகிகளுக்கு தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:..
posted by Yasir Thajudeen (Riyadh, Saudi Arabia) [11 December 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24459

Assalamu Alaikum,

This is one of the important mile stone for the Kayalpatnam students and for the people living in our neighbouring areas. As our native does not have CBSE syllabus parents are given no choices other than Kamalavathi. We all aware that the campus of Kamalavathi is not a suitable place for education considering the health of our generations. But still to give them a good base of education from the root the children are forced to go with and the parents choice is too.

Insha Allah with this initiative, we can gradually decrease the numbers of Kayalites in Kamalavathi in a couple of years. At the same time the Management should keep in mind to give them the best of the best education with all the extra curricular activities and the Islamic studies. Both the education & the extra curricular will shape them for a bright future to come out with flying colours.

We request the trustees to run classes till grade 12 in the coming future. I wish all the activities go smooth for the smoother life of our childrens,

Once again congrats to all for their big effort and wish them a successful years ahead.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:... நல்லதோர் ஆரம்பம்
posted by Seyed Ismail (Singapore) [12 December 2012]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 24466

அஸ்ஸலாமு அலைக்கும்...

மாஷா அல்லாஹ்.. மிக்க சந்தோஷம்.. நமது ஊரிலேயே CBSE படிக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், நாம் ஏன் நமது மழலை செல்வங்களை வெளியூர் அனுப்பி...
காயல் கலாச்சாரத்தை மறக்க வைத்து ...
தொழுகையை மறக்க வைத்து...
காலை குறான் பள்ளியை மறக்க வைத்து...
மாலை விளையாட்டை மறக்க வைத்து...

அப்படி வெளியே சென்று படிக்கும் மாணவர்கள் வேஷ்டி கூட சரியாக அணிய தெரியாத நிலை பரிதாபம் தான்...

இந்த வாய்ப்பை நாம் அனைவரும் பயன்படுத்தி கொள்வோமாக... வல்ல அல்லாஹ் நம் குழந்தைகளை நம் சந்ததிகளை அழகிய மார்க்க நெறியில் வளர்த்திட உதவி புரிவானாக...

ஒரு சின்ன யோசனை: ஏன் ஏற்கனவே இருக்கும் ஒரு பள்ளியை CBSE பள்ளியாக மாற்ற முயற்சி பண்ண கூடாது? இந்த கேள்வி தவறு என்று நினைத்தால் மன்னிக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [12 December 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24468

வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இந்த நாள் இனிய நாள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [12 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24470

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இன்றைய நாள் வரும் என்று கணிக்கப்படும் 12 .12 .12 இந்த நாளில் நல்லதொரு செய்தி வந்துள்ளது.

.DCW இன் கோரப்பிடியிலிருந்து நமது ஊரை காப்பாற்றும் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், நமது இளம் குருத்துக்களையும் அங்கு ஆங்கில கல்வி மோகத்தில் இணைத்து தொழுகை வணக்க வழிபாடுகளுக்கு தடை கற்களாக இருக்கும் நிலையை போக்க இப்படி ஒரு கல்வி நிலையத்தை ஆரம்பிக்க இன்று கால் கோள் விழா நடத்தும் அந்த பள்ளி நிறுவன தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே என்பதை விட அவன் மூமீன் ஆவதும் முனாபிக் ஆவதும் நமது சமுதாயம் வளர்ப்பதிலே என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

எல்லா மக்களும் இந்த பள்ளி வெகு விரைவில் ஆரம்பிக்க, இஸ்லாமிய நெறிமுறைகளுடன் செயல்பட அல்லாஹ்விடம் து ஆ கேட்போம். அவர்கள் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்போம்.

தெளிவான திட்டம். விடா முயற்சி கடும் உழைப்பு, இறை நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை இவை நான்கும் இருந்தால் வாய்ப்புகளுக்கு வானமே எல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நல்ல கல்வி - கூடமாக நாளை வரும் சந்ததிகளுக்கு இந்த பள்ளிக்கூடம் அமைய வாழ்த்துகிறோம்...
posted by பங்குதாரர்கள் - ஸ்டார் ரெடிமேட்ஸ் (KAYALPATNAM) [12 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24471

இக்காலத்திற்கு ஏற்றார் போல் நமது நகரில் இந்த CBSE பாடத்திட்ட அடிப்படையில் புதிய பள்ளி துவங்கபடுவதை அனைவர்களும் வரவேற்கிறார்கள்...

இரசாயன கழிவின் கெடான சுவாசத்தில் இருந்து விலகி வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தொழுகையும் கடைபிடித்து - சுகாதாரமான சுற்றுச் சூழல் மிகுந்த பசுமை நிறைந்த சுவாசத்தில் - மார்க்க அறிவும் - ஒழுக்கமும் - சேர்ந்த நல்ல கல்வி - கூடமாக நாளை வரும் சந்ததிகளுக்கு இந்த பள்ளிக்கூடம் அமைய வாழ்த்துகிறோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஆசிரியர் சேர்க்கையில் மிகுந்த கவனம் தேவை...
posted by பங்குதாரர்கள் - ஸ்டார் ரெடிமேட்ஸ் (KAYALPATNAM) [12 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24472

சகோதரர் NIZAR அவர்களின் கருத்து மிக மிக முக்கியமான ஓன்று இதுவே எனது பதிவும்...

ஆசிரியர் சேர்க்கையில் மிகுந்த கவனம் செலுத்துவதின் மூலமே ஸ்கூலின் தரத்தை உயர்த்த முடியும்...!

நமது நகரில் நல்ல தருணத்தில் நல்ல தரமான CBSE பாடத்திட்ட அடிப்படையில் புதிய பள்ளி ஆரம்பம் செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி...

நாளைய இளைய தலைமுறைகள் நல்லபடி பயன் பெறட்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நச்சு கலந்த காற்றின் கோர பிடியில் இருந்து வெளியேற வேண்டும்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM) [12 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24473

நமது ஊரில் CBSE பாடத்திட்ட அடிப்படையில் புதிய பள்ளி துவக்கமா..! அதற்க்கு இன்று கட்டிடப் பணிகள் துவக்கமா..! மாஷா அல்லாஹ்..

இதை தான் நான் பல ஆண்டுகளாக விரும்பினேன்...

நமது சகோதர பிள்ளைகள் அமில கழிவுகளால் வெளியேறும் நச்சு கலந்த காற்றின் கோர பிடியில் இருந்து வெளியேற இந்த பள்ளிக்கூடம் விரைவில் ஆரம்பமாக பட வேண்டும் அதற்க்கு நாம் அனைவர்களும் ஓன்றுபட்டு ஒத்துழைக்க பாடுபட வேண்டும்...

பள்ளி கூடத்தின் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

என்றும் ஊர் நலன் நாடும்... உங்கள் சகோதரன்...
M.S.M. சம்சுதீன்
நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வாழ்த்துக்கள்.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [12 December 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24474

மாஷா அல்லாஹ், நிர்வாகத்தினரின் நல்ல திட்டங்களை அல்லாஹு வெற்றியாக்கி தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...மனமார வாழ்த்துகிறேன்
posted by M.E.L.NUSKI (Riyadh -KSA) [12 December 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24476

எழிலுடன் துவங்க இருக்கும் பள்ளி காலத்தின் கட்டாயம். DCW (கமலவதி பள்ளியில்) இருந்து நமது மாணவர்கள் நீங்கி நமதூர் மாணவ மாணவிகள் தரமான கல்வி பெற இறைவனால் அளிக்கப்பட்ட நல்ல ஒரு வாய்ப்பு.

அன்பான வேண்டுகோள். தயவு செய்து வெள்ளிகிழமை விடுமுறை அளியுங்கள். அடுத்து குறைந்த லாப நோக்குடன் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அளிக்க சிறந்த ஆசிரியர்களை நியமியுங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும் வள்ளல் நபி நாயகம் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துவா பாரக்கதாலும் துவங்கும் கல்வி நிறுவனம் நீடூழி காலம் செழித்து ஓங்கி வளர அருள் புரிவானாக

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...வாழ்த்துக்கள்
posted by Palappa Muhiyyadheen Abdul Kader, (Chennai(Mannady)) [12 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24477

எனது அன்பிற்க்கினிய சகோதரர்களான நன்நோக்கு கல்வி அறக் கட்டளையின் நிர்வாகிகளுக்கு இதய்ங் கனிந்த அஸ்ஸலாமு அழைக்கும்.

விமர்சகர் ஜனாப் நிஜார் அவர்களின் கூற்றுப்படி தரமான ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும். அதோடு நின்று விடாமல் அவர்களின் அந்த தரத்திற்கேற்ற ஊதியத்தைக் கருத்திற்கொண்டு செயல்படுவதோடு ஏழை எளிய மக்களுக்கும் இந்தத தரமான கல்விக் கிடைக்க வேண்டும் என்பதைப் பிரதானமான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அன்பு சார் வேண்டுகோளையும் இந்த நல்ல தருணத்தில் அடியேன் பதிவு செய்கின்றேன்.

இந்த அறப் பணியான கல்விச் சேவையில் ஈடுபடும் கல்வியாளர்களுக்கும், சான்றோர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும், கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நல்லாசியாலும், நாயகத் தோழர்களின்(ரலியல்லாஹு அன்ஹும்) நற்க் கிருபையாலும், இமாம்கள்(ரலியல்லாஹு அன்ஹும்), இறை நேசச் செல்வர்களின்(ரலியல்லாஹு அன்ஹும்), ஆகியோர்களின் துஆ பறக்கத்தாலும் எல்லா நலமும், வளமும், கிடைத்து பல்லாண்டு வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் எனது வாழ்த்தையும்,விழைவையும் நிறைவு செய்கின்றேன்.

இப்படிக்கு
பாலப்பா முஹிய்யதீன் அப்துல் காதர்,
மண்ணடி,
சென்னை -௧
தொடர்புக்கு-9751501712 044 -25266705


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...வாழ்த்தி , வரவேற்போம்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [12 December 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24478

சுகாதாரமான சுற்றுச்சூழலுடன், வரும் 2013 - 2014 கல்வியாண்டில், CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில், காயல்பட்டினத்தில் WISDOM PUBLIC SCHOOL என்ற பெயரில் துவக்கப்படவுள்ள புதிய பள்ளிக்கு எனது வாழ்த்திக்கள் ...

நமது ஊரின் இன்றைய கால சூழ்நிலையில் இது மிகவும் பயனுள்ளதாக நமது பிள்ளை செல்வங்களுக்கு அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை . நாம் தான் இந்த அருமையான வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் . மிக தரம் வாய்ந்த ஆசிரியர்கள் கண்டிப்பாக தேவை . அப்போது தான் படிப்பின் தரமும் கூடும் .

இந்த ஸ்கூல் நமது ஊரின் எந்த இடத்தில் அமைய உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by EASA SHAFEEQ (RIYADH) [12 December 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24482

பள்ளி தொடங்க உள்ள அன்பு உள்ளங்களுக்கு மனதார வாழ்த்துக்கள்

இஸ்லாதின் அடிப்படை இல் இப்பள்ளி செயல் பட வாழ்த்துக்கள்

மேலும் இஸ்லாமியரின் புனித நாளான வெள்ளிக்கிழமை விடுமுறை நாலாஹா அமைய பெற்று ஊரின் பிற பள்ளிகளுக்கும், மாவட்டதின் உள்ள பிற பள்ளிகளுக்கும் ஓர் உதாரணமாக அமைய வாழ்த்துக்கள்

كلكم راع وكلكم مسؤول عن رأيته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Ahamed Bin Farook (Chennai) [12 December 2012]
IP: 130.*.*.* United States | Comment Reference Number: 24484

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)...

மாஷா அல்லாஹ்.. ஒரு ஒழுக்கமிக்க இளைய சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டிய சரியான தருணம் இதுதான். மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று.

இஸ்லாமிய அடிப்படையில் இந்த பள்ளி சீரிய நடை போட்டு மாவட்டத்தில் முதல் தரமான இஸ்லாமிய முன்மாதிரி பள்ளியாக உருவாவதற்கு என்னுடைய (குடும்பத்தாரின்) வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. கற்றவருக்கு காணும் இடமெல்லாம் சிறப்பு.
posted by s.s.md meerasahib (riyadh) [12 December 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24485

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நிர்வாகிகளுக்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

பல குடும்பம்களில் கணவன்- மனைவிக்கு இடையில் நடக்கும் தர்க்கம்களுக்கு (கமலாவதியில் மக்களின் படிப்பை நிறுத்த) முற்றுப்புள்ளி வைத்துள்ளீர்கள்.

CBSE பாடத்திட்ட அடிப்படையில் புதிய பள்ளி துவக்கம்! டிச.12 அன்று கட்டிடப் பணிகள் நல்லமுறையில் தடையின்றி நடந்தேறி முடிவடைய நமது சக்திவாய்ந்த சலவாத்து உங்களின் பள்ளிக்கு அர்ப்பணம்.

اَللَّهُمَّ صَلِّ صَلَوةً كَامِلَةً وَسَلِّمْ سَلاَمًا تَامًّا عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍنِ الَّذِي تَنْحَلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ وَتُقْضَى بِهِ الْحَوَائِجُ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيمِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ فِي كُلِّ لَمْحَةٍ وَنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْــلُومٍ لَك வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Good News on 12/12/12
posted by Jahir Hussain VENA (Bahrain.) [12 December 2012]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 24486

நல்வாழ்த்துக்கள்.. எல்லாம் வல்ல இறைவன் உங்கள் இந்த நல்ல காரியம் வெற்றிகரமாக அமைய துணை செய்வானாக... ஆமீன்...

Dear Management Members,
வெள்ளி கிழமை விடுமுறை நாளாக அறிவித்தால் நன்றாக இருக்கும். ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Fasi Ismail (Hetang, China) [12 December 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 24487

Masha Allah... Can the management announce whether it's going to be Boys or Girls only.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...வாழ்த்துக்கள்
posted by Abdul Hadhi (Jeddah) [12 December 2012]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24489

வாழ்த்துக்கள்.. எல்லாம் வல்ல இறைவன் உங்கள் இந்த நல்ல காரியம் வெற்றிகரமாக அமைய துணை செய்வானாக... ஆமீன்...

அப்துல் ஹாதி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [17 December 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24532

வாழ்த்துக்கள்.. எல்லாம் வல்ல இறைவன் உங்கள் இந்த நல்ல காரியம் வெற்றிகரமாக அமைய துணை செய்வானாக... ஆமீன்...

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved