சுகாதாரமான சுற்றுச்சூழலுடன், வரும் 2013 - 2014 கல்வியாண்டில், CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில், காயல்பட்டினத்தில் WISDOM PUBLIC SCHOOL என்ற பெயரில் புதிய பள்ளி, காட்டு மகுதூம் பள்ளியை அடுத்து அமைந்துள்ள செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி எதிரில், வரும் 2013 - 2014 கல்வியாண்டில் துவக்கப்படவுள்ளது.
12.12.2012 புதன்கிழமை (இன்று) காலை 12.00 மணியளவில், கட்டிடப் பணிகள் முறைப்படி துவக்கப்பட்டது. பள்ளியை நிர்வகிக்கவுள்ள Vision Educational Trust அறங்காவலர்கள் ஒன்றிணைந்து முதல் கல்லை எடுத்துக்கொடுக்க, அறக்கட்டளை தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அதனை அஸ்திவாரத்தில் வைத்து, கட்டிடப் பணியை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கட்டிடப் பணிகளை பொறுப்பேற்று செய்யவுள்ள பொறியாளரிடம் அறக்கட்டளை நிர்வாகிகளால் முன்பணம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், விஷன் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், அறங்காவலர்களான ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, செய்யது மரைக்கார். அமீன் அப்துல் காதிர், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வரும் கல்வியாண்டில், Pre KG முதல் 05ஆம் வகுப்பு வரை செயல்படும் என்றும், மாணவர்களுக்கும் - மாணவியருக்கும் தனித்தனி வளாகத்தில் இருபால் கலப்பின்றி வகுப்புகள் செயல்படும் என்றும் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|