காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்து, கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, 10.12.2012 திங்கட்கிழமையன்று, சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக அதிகாரிகளிடம் சென்னை வாழ் காயலர்கள் ஒன்று திரண்டு, இதுகுறுித்து முறையிட்டனர்.
இத்தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கி, ‘புதிய தமிழகம்’ இதழில் 3 பக்கங்களில் படங்களுடன் - பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது:-
|