காயல்பட்டினம் நகராட்சியில் செய்திகளை சேகரிக்க - காயல்பட்டணம்.காம் இணையதள நிருபர்களுக்கு - எந்த தடங்கலும் ஏற்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று (டிசம்பர் 14; வெள்ளிக்கிழமை) ஆணையிட்டது.
இது குறித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன:
தினமலர் (டிசம்பர் 15; தமிழக பதிப்பு) ...
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (டிசம்பர் 15; தமிழக பதிப்பு) ...
1. என்றாவது ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்!என்பது எவ்வளவு உண்மை பார்த்தீங்களா...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[16 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24509
ஊடகத்தின் குரல்வளையைக் கடித்துக் குதற சில குள்ளநரிக் கூட்டங்கள் ஊளையிட்டன. உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர்களால் சட்டப்படி ஆணை பிறப்பிக்கபட்டதால் இனி உம்மை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பார்கள். போய் ஜமாய்யும்...!
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது என யாரோ சொன்னது இக் கூட்டத்தினருக்கு தெரியாது போலும்!
3. Re:... posted byFareed (Dubai)[16 December 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24515
That's good. I like ur way of fighting. Pray allah for ur team members spirit and it should increase day by day to fight against all the wrong doings and help for public. Pray allah for ur team members unity and health in the future. Aameen
4. Re:...ஊடகம் ஒரு அவ்டதம் posted bymackie noohuthambi (kayalpatnam)[16 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24517
இப்படி ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரியாதே. ஆச்சரியமாக இருக்கிறது. விகிலீக்ஸ் என்ற ஊடகம் உலகில் திரைமறைவில் நடக்கும் விஷயங்களை அம்பலபடுதியது. கேஜ்ரிவால் என்பவர் எல்லா ஊழல்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். நமது அரசே தகவல் அறியும் சட்டம் என்று ஒன்றை கொண்டு வந்து யானை தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டது போல் காங்கிரஸ் அரசின் ஊழல்களை அம்பலபடுதுகிறது. இப்படி இருக்கும்போது, இந்த காயல் ஊடகங்களை எப்படி கட்டுப்படுத்த நினைத்தார்கள்.
இப்போது ஊரில் ஆறு ஊடகங்கள் வந்து விட்டன. 2013 ஜனவரி 1 முதல் kayalfasaadh.com என்று ஒரு புதிய வலை தளம் வரவிருப்பதாகவும் அதற்கு இப்லீஸ் என்பவர் தலைவராக இருப்பார் என்றும் துணை தலைவருக்கு ஆள் தேர்வு நடப்பதாகவும் பேசிக்கொள்கிறார்களே உண்மையாலுமா?
எத்தனை ஊடகங்கள் வந்தாலும் அதை வரவேற்போம். ஆனால் செய்திகளை திரித்து கூறுவது, இருவருக்கிடையே பகையை வளர்ப்பது, விமர்சகர்கள் தாறுமாறாக அநாகரிமாக தனி நபர்களை சாடுவது இவை இல்லாமல் உண்மைக்கு முதலிடம் கொடுத்து, ஊருக்கு நல்லதையே செய்ய ஆரோக்கியமான பட்டி மன்றங்கள் நடத்தினால் மக்கள் வரவேற்பார்கள் என்பது அடியேனின் கருத்து.
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை
தான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.
முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே,
உரிமைகளை பெறுவதெல்லாம் கடமையை செய்வதனாலே....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross