கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தால் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட புதிய செயற்குழு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில் சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்பு மற்றும் அதனை ஆதரித்தோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் புதிய தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் (I – wave systems) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் .(வரஹ்).
எமது அமைப்பின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் நோக்குடன், மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் - 09.12.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 04.00 மணி முதல் 05.30 மணி வரை, லால்பாக் வெஸ்ட் கார்டனில் ஜனாப் எஸ்.டி.ஷேக்னா தலைமையில், ஜனாப் எம்.எச்.மொக்தூம் முன்னிலையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் மக்கீ இஸ்மாயில் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகளை தலைவர் ஜனாப் அப்துல் ரஹீம் விளக்கிப் பேசினார். பின்னர், மன்றத்தில் புதிதாக இணைந்துகொண்ட 3 உறுப்பினர்கள் சுய அறிமுகம் செய்துகொண்டனர்.
வருகை தந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களின் நிறைவான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 புதிய செயற்குழு தேர்வு:
பெங்களூரு காயல் நல மன்றத்திற்கு பின்வருமாறு ஏகமனதாக புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது:-
ஆலோசனை குழு:
ஜனாப் அப்துல் ரஹீம் M.M (முன்னாள் தலைவர்) (Crescent Design)
ஜனாப் S.D ஷேக்னா
ஜனாப் M.H மொக்தூம்
ஜனாப் அப்துர் ரஹ்மான் P.M.T (Glad Media)
தலைவர்:
ஜனாப் ஜெய்த் நூருத்தீன் P.S.A.S (I – wave systems)
துணைத் தலைவர்கள்:
ஜனாப் முஹம்மது இப்றாஹீம் (Honeywell)
ஜனாப் செய்கு முஹம்மத் ஸாலிஹ் K.K.S (ETA Star Property Developers)
செயலாளர்:
ஜனாப் சுலைமான் M.N (ETA Engg)
துணைச் செயலாளர்கள்:
ஹாஃபிழ் ஷேக் அப்துல்லாஹ் முஜாகிர் M.A (ETA Melco)
ஹாஃபிழ் மக்கி இஸ்மாயில் (ETA Melco)
பொருளாளர்:
ஜனாப் மொஹிதீன் அப்துல் காதர் S.O.H (குலாம்) (ETA Constructions)
துணைப் பொருளாளர்கள்:
ஜனாப் ஷேக் சுலைமான் (Juniper Networks)
ஜனாப் வாவு முஹம்மத் M.M (ETA Melco)
ஒருங்கினைப்பாளர்கள்:
ஜனாப் மன்னர் அப்துர் ரஹ்மான் B.A (I – wave systems)
ஜனாப் அப்துல் காதர் S.M.N (I – wave systems)
ஜனாப் இப்ராகிம் நௌசாத் (Café Coffee Day)
இப்புதிய செயற்குழுவின் பொறுப்புக் காலம் 31.12.2013 வரை என்றும், அதன் பின்னர் அடுத்த புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது இக்குழுவின் பொறுப்புக் காலத்தை நீட்டிக்கவோ பொதுக்குழுவுக்கு அதிகாரமளிப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - நன்றியும், பாராட்டும்:
நமதூராம் காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தாரங்கதாரா ரசாயன தொழிற்சாலை, மத்திய மாநில அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு முற்றிலும் மாற்றமாக செயல்புரிந்து வருவதைக் கண்டித்து கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தி, நம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) அமைப்பிற்கும், இதற்காக வேண்டி எல்லா வகையிலும் நல்லாதரவளித்த அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3: அடுத்த கூட்டம் குடும்ப ஒன்றுகூடல்:
மன்றத்தின் அடுத்த - 7ஆவது பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இன்ஷாஅல்லாஹ் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மன்றக் கூட்டம்:
இனி வருங்காலங்களில், மன்றத்தின் ஆலோசனைக் கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - துளிர் பள்ளி வாழ்த்து:
21.08.2012 அன்று துளிர் பள்ளியில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் இயங்கி வரும் அடுமனைப் பிரிவில், மாவு பிசையும் கருவி வாங்குவதற்காக, பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் ரூபாய் 65,000 தொகை அனுசரணையளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் , பெங்களூரு காயல் நல மன்றத்தின் உறுப்பினர்களான சுலைமான், மஸாஹிர் அமீன், பத்ரிய்யா கலீல் ரஹ்மான், ஷேக் அப்துல்லாஹ், கே.கே.எஸ்.ஸாலிஹ், சுப்ஹானீ ஆகியோரும் பங்கேற்றனர்.
இவ்வகைக்காக மன்றத்தைப் பாராட்டியும், நன்றி தெரிவித்தும் துளிர் நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துளிர் நிர்வாகத்திற்கு மன்றம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், அதன் சேவைகள் தொடர வாழ்த்துகிறது.
தீர்மானம் 6 - புதுமண தம்பதியருக்கு வாழ்த்து:
அண்மையில் புதுமண வாழ்வு காண இருக்கின்ற மன்ற உறுப்பினர்கள் மகபூப் சுபுஹனி BE., MBA மற்றும் ஷேகன லெப்பை B.E ஆகியோருக்கு மன்றம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
அத்துடன், வல்ல அல்லாஹ் இத்தம்பதியருக்கு குறைவில்லா நல்வாழ்வையும், இருலோகத்திற்கும் பயன்தரும் கண்குளிர்ச்சியான மக்கட்செல்வங்களையும் நிறைவாகத் தந்தருள இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 7 - ஜக்வா அமைப்பின் புதிய செயற்குழுவுக்கு வாழ்த்து:
ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழுவிற்கு இக்கூட்டம் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக, நன்றியுரைக்குப் பின் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நன்றி கூற, ஹாஃபிழ் மன்னர் அப்துர் ரஹ்மான் B.A துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் பலர் தம் மனைவி, மக்களுடன் கலந்துகொண்டனர். கூட்ட நிகழ்ச்சிகள் நிறைவுற்றதும் அவர்கள் தமக்குள் கலந்துரையாடி மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே மறுபுறத்தில் பெண்கள் தனியாக அமர்ந்து கதைத்தனர். குழந்தைகள் துள்ளி விளையாடி மகிழ்ந்தனர்.
கூட்டத்தில், 40 உறுப்பினர்களும், 7 பெண்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இவ்வாறு பெங்களூரு காயல் நல மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
(துணைத் தலைவர்)
M.N.சுலைமான்
(செயலாளர்)
B.A.மன்னர் அப்துர் ரஹ்மான்
(ஒருங்கிணைப்பாளர்)
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |