காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள் உள்ளிட்ட - நகரின் சுற்றுச்சூழல் மாசுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPAவின் அனைத்து நிகழ்வுகளுக்கும் நன்றியுடன் கூடிய ஆதரவளிப்பதாக, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செய்தித் துறை பொறுப்பாளர் எம்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அமீரக தலைநகர் அபூதபீ காயல் நல மன்றத்தின் ஒன்பதாவது செயற்குழு கூட்டம் - வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 14.12.2012 அன்று மாலையில், மன்றத்தின் துணைச் செயலாளர் ஆர்கிடெக்ட் ஹபீப் ரஹ்மான் தலைமையில், செயற்குழு உறுப்பினர் ஜனாப் DR. செய்து அகமது அவர்களின் இல்லத்தில் வைத்து கூடியது.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் F.சாகுல் ஹமீது அவர்கள் இறைமறை கிராத் ஓத கூட்டம் துவங்கியது.
மன்ற அறிக்கை:
இக்கூட்டத்தின் தலைவர் அவர்கள் கடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் செயல்பாடுகள் பற்றியும், வருங்காலங்களில் செய்யவேண்டிய திட்டங்களை பற்றியும் விபரமாக விவரித்தார்.
மருத்துவ கையேடு:
மன்றத்தால் வெளியிடப்பட்ட - பயனுள்ள தகவல்களடங்கிய மருத்துவ கையேடு இதுவரை கிடைக்கப்பெறாத காயல் மாநகர பொதுமக்கள் காக்கும் கரங்களின் தலைவர் ஜனாப் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களை 98423 65912 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
KEPAவிற்கு நன்றியுடன் கூடிய முழு ஆதரவு:
நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கு காரணமாகவும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாகவும் செயல்பட்டு வரும் DCW தொழிற்சாலையைக் கண்டித்து அண்மையில் KEPAவின் மூலம் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் நன்றி தெரிவிப்பதுடன், காயல் மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபடும் KEPAவின் திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் வருகை:
காவலங்காவின் மூத்த உறுப்பினர் காரி A.T.அப்துல் காதர் என்ற (AT ஹாஜியார்) மற்றும் துபாய் காயல் நல மன்ற ஆலோசனைக் குழுவின் மூத்த உறுப்பினர் V.S.A. தாவூது ஹாஜியார் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, மன்றத்தின் செயல்பாடுகளைப் பாராட்டியும், பொதுச் சேவையால் அல்லாஹ்விடம் நாம் பெறப் போகும் நற்கூலிகளைப் பற்றியும், அதனால் நாம் அடையும் மனநிறைவு பற்றியும் விவரித்து பல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 11.01.2013 அன்று அஸர் தொழுகைக்குப் பின் நடைபெறும் என மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் M.A ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ அவர்கள் அறிவிக்க, மன்றத்தின் பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் S.M.B. ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்ற செய்தித் துறை பொறுப்பாளர் எம்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி:
A.R.ரிஃபாய்
படங்கள்:
P.M.ஹுஸைன் நூருத்தீன் |