காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்றக் கூட்டங்களில் உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக மினிட் புத்தகத்தில் தீர்மானங்களை எழுதுவதாகக் கூறி, 13 நகர்மன்ற உறுப்பினர்கள், 17.12.2012 திங்கட்கிழமையன்று காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, 18.12.2012 அன்று வெளியான ‘தினமணி’ நாளிதழ் செய்தி வருமாறு:-
அதே நாளில் வெளியான ‘தினகரன்’ நாளிதழ் செய்தி வருமாறு:-
1. Re:.கவுன்சிலர்களே! posted byAhamed Mohideen (Chennai)[18 December 2012] IP: 124.*.*.* India | Comment Reference Number: 24572
கவுன்சிலர்களே!, உங்களை விட பல மடங்கு வாக்குகள் அதிகமாக வாங்கி தான் அவர்கள் தலைவர்களாக வந்து இருக்கிறார்கள். உங்களை விட அவர்கலுக்கு பவர் கொஞ்சம் அதிகம்தான். அதற்காக வேண்டி இதற்கெல்லாம் இப்படி செய்யல்லாமா ?
இதே ஒற்றுமையை ஊர் நலனுக்காக நல்ல விசயங்களில் நீங்கள் ஒன்று இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு உதவியாக இருக்கும்..
3. Either this Or that posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[19 December 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 24574
Shame on those who have neither backbone nor guts to lodge a complaint with District Collector against one of their colleagues who talked boastfully about pocketing kick-backs from public projects.
Either
சென்னையிலிருந்து என்றோ (During Vice-President Election) வீசி எரியபட்ட எலும்புத்துண்டுகள் இன்றுவரை நன்றாக வேலை செய்கிறது.
இந்த தலைவி இருக்கும் வரை சம்பாதிக்க முடியாது என்பதை முழுவதுமாக உணர்ந்தவர்கள்.
4. அக்பர் பாதுஷாவின் அரன்மனை ரகசியம்...! பீர்பாலுக்கு மட்டுமே தெரியும்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[19 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24576
சரி...! வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துலெ ஏறின கதைதான்! ஆடம்பரம், அகம்பாவம், எம்மதமும் சம்மதம் என, தான் ஒரு இஸ்லாமியன் என்பதை மறந்து, சாமியார்களின் சகவாசம் வைத்துக்கொண்டு, பல இந்துப் பெண்களை மணந்துகொண்டு, தானே தனியாக ஒரு மதத்தை தோற்றுவித்துக் கொண்டு பிறர் தன்னைப் புகழ வேண்டும் என தன் ஆதிக்கங்களையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி சகட்டுமேனிக்கு வாழ்ந்த முகலாய மன்னன் அக்பரின் பாதுஷாவின் அரசவையில் ராஜ தந்திரங்களை சாமர்த்தியமாக கையாளுவதற்கும், காய்களை நகர்த்தி விளையாடும் அரசியல் சதுரங்கத்தில் தம் எதிரிகளைக் கவிழ்த்தி அரன்மனையைக் காப்பதற்காகவும், மன்னன் அக்பர் பாதுஷா தன் வசம் பீர்பால் என்பவனை வைத்திருந்தான்.
நம் நகரசபையில் தலைவிக்கு பக்கபலமாக ஒரு பீர்பாலும் இல்லை! சதுரங்கம் விளையாட மன்னன் அக்பரும் இல்லை! ஆனாலும் காய்கள் நகருகின்றன... இவர்கள் தூங்கும்போது கூட யோசிப்பார்கள் - நாளைக்கு தலைவிக்கு எதிராக என்ன மனு கொடுப்பதென்று...? ஆக மொத்தத்துலெ முல்லா நசுருத்தீன் கதை மாதிரி இது நீண்டு கொண்டே போகும்.
6. Re:... posted bySabeer (Bangalore)[19 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24584
சபாஷ். விசுவாசிகள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்.
ஒரு உறுப்பினர் மறைந்திருந்து (தோன்றினும்) தோன்றாமல் காட்சியளிப்பதன் மர்மம் தான் என்னவோ! உங்களது சாயமெல்லாம் எப்பொழுதோ வெளுத்துப் போச்சு. நகர்மன்றத்தை கலைக்க முயற்சிகளை யாரோ ஒரு தனிநபர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக அறிகிறேன். என்னைப் பொறுத்தவரையில் அது நல்லதொரு முயற்சி.
மீண்டும் இந்த விசுவாசிகள் எல்லாம் அவரவர் வார்டில் தைரியமிருந்தால் நின்று பார்க்கட்டும்! ஒருவர் கூட மீண்டும் உறுப்பினராக முடியாது.
7. Re:... posted byismail (HONG KONG)[19 December 2012] IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 24586
SALAM
Pls ignore these ppl, everybody know very well abt these individuals, these guys had invested huge fund for election, they want to get back with big profit and some are egoistic and they swear by the name of Almighty Allah in the stage but they will join will these looters
Insha Allah these complaint will be a boomerang these allegation will hit them very hard pls wait and watch .
I personally feel ashamed to support one guy who is against the Chairman
9. நீயா நானா posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[19 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24589
தலைவி உறுப்பினர்களை குற்றம் சாட்டுவதும் மீண்டும் உறுப்பினர்கள் தலைவியை குற்றம் சாட்டுவதும் காயல் மக்கள் அனைவரையும் பெரும் வருத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உங்களை தேர்ந்தடுத்த மக்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டார்கள்.
உலகின் அத்தனை பிரச்னைகளுக்கும் அறிவார்ந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண முடியும்.
ஒத்த கருத்தினை உருவாக்குதலும், பாகுபாடின்றி செயலாற்றுதலும், நிதானந்தவறாதிருத்தலும் ஒரு தலைவருக்கு அவசியமான பண்பு. தலைவியும் தன்னிடம் உள்ள குறைகளை திருத்த முன் வர வேண்டும்.
இறைவனுக்கும் அவனது தூதருக்கும் உங்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டவருக்கும் கீழ்ப்படியுமாறு அல் குர்ஆன் கூறுகிறது. ஆனால் நமது 13 உறுப்பினர்களுக்கும் அதிகாரி யார் என்பதுதான் நமக்கு புரியவில்லை.
உங்களுக்குள் உள்ள நீயா நானா போட்டியில் உங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து நமது ஊரின் கண்ணியத்தை காற்றில் பறக்க விடும் நீங்கள் இறைவனிடத்தில் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
"Oh you who believe, obey God, and obey the messenger and those charged with authority among you " Al Quran
10. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன !!!!!!! posted bysalai s nawas (singapore)[19 December 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 24590
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன !!!!!!!
நகர்மன்ற தலைவியை பற்றி புகார் கொடுத்தாச்சு. உங்க யோக்கியதை பற்றி நாங்கள் யாரிடம் சென்று புகார் கொடுக்கவேண்டும்? என்பதை சொன்னால் மிகவும் வசதியாக இருக்கும். உங்களை பற்றி சொல்ல ஓராயிரம் புகார்கள் இருக்கு.
11. இந்த ஒற்றுமை மக்களின் நலனுக்காக DCW வை எதிர்த்து போராடிய KEPA உடன் கலந்துக்கொள்ளாமல் ஒழிந்தது என்? posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[19 December 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24591
அஸ்ஸலாமு அழைக்கும்.
போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் பொறுப்புள்ள உறுப்பினர்களே! தங்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும் மக்கள் தெளிவாக அறியதான் மீடியாவின் வீடியோ பதிப்பு மிக மிக அவசியம்.
இதை என் மறுக்கிறீர்கள். தங்களை பேசவிடாமல் தடுகிறாரா தலைவி அல்லது தாங்கள்தான் நகர்மன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறீர்களா மற்றும் மினிட் புத்தகத்தில் பதிவதை கூட வீடியோ பதிவு செய்தால் தங்களின் குறைகள் தீர்ந்து விடுமே தவிர இதற்க்கு மாவட்ட ஆட்சியர் வந்துதான் கவனிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
தங்களின் குறைகளை தீர்க்க தங்களிடமே அழகான அதாவது வீடியோ பதிப்பு என்ற தீர்வு இருக்கும் பச்சத்தில் தங்களின் நேரத்தை வீணடிக்காமல் சரித்திர புகழ் பெற்ற இரண்டாம் குடிநீர் திட்டம் போன்ற பெரிய மக்களுக்கு பயனுள்ள விசியத்த அனுபவம் இல்லா மிக சாதரணமான தெருவில் திறந்துகிடக்கும் மூடிகளையே மூட முடியாத இன்னகராச்சியால் இக்குடிநீர் திட்டம் அறவே சாத்தியமற்றது.
இந்த ஒற்றுமையுடன் சென்னை நோக்கி புறப்பட்டு போராடி தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தை அணுகி அவர்களின் மேர்பார்வைளும் குறைத்து ஒரு வருடம் பராமரிப்பும் பெற போராடுங்கள்.
பீவி பாத்திமா ராதாவை தவிர இப்போட்டோவில் போஸ் கொடுக்கும் நகரமன்ற உறுப்பினர்களே தங்களின் மக்கள் நலன் காயலில் பல உய்ர்கள் பரிதாபமாக பிரிந்து செல்லுவதற்கு மிக முக்கிய காரணமான DCW நிறுவனத்தை காயல் மக்களின் நலனுக்காக பாடுபடும் KEPA உடன் சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுக்க தவிரயது தொடர்ச்சியாக தவறுவதும் என்?
தங்களின் திறமைகளை புத்திசாலி தனங்களை சென்னை ஏன் டெல்லி வரை சென்று DCW என்ற காயல் மக்களின் உயிர்க்கொல்லி நிறுவனத்தை நமது மண்ணில் இருந்து விரட்டும் வீரமான போட்டோக்களை நாளிதழ் மற்றும் தொலைகாட்சிகள் வாயிலாக பார்க்கத்தான் காயல் மக்கள் ஆசைபடுகிரார்கலே தவிர தங்களின் குறைகளை முறையிடுவதை மக்கள் விரும்புவது இல்லை.
எனக்கோர் சந்தேகம்! தங்களின் குறைகளே தீர்க்க முடியாத தெரியாத தாங்கள் எவ்வாறு மக்களின் குறைகளை தீர்க்கப்போகிரீர்கள் வருடம் ஒன்றை நோக்கி செல்கிறது....
12. DCW வின் பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி.... posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[19 December 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24593
அஸ்ஸலாமு அழைக்கும்.
இந்த பத்திர்க்கைகள் DCW வின் எதிர்ப்பு குரல் கொடுத்த KEPA வின் நிகழ்வுகளை மட்டும் தெளிவாக போட தவிரியது என்? இது தான் பத்திரிகை சுதந்திரமா..... இல்லை, இது தான் அவர்களின் சூழ்ச்சி.DCW வின் பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி....
13. ஆண் புலி 7 அடி பாய்ந்தால் பெண் புலி 16 அடி வரை பாயும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[19 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24599
நகர்மன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் 13 உறுப்பினர்கள் மனு!
இந்த செய்தி அறிந்ததும் முன்னால் நகர் மன்ற நகர்மன்றத் தலைவரின் நினைவு தான் வருகிறது அவர் பதவி காலத்திலும் இதே செயல்கள்தான் அன்றைய உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்...!
என்ன நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் அவர் மேல் எடுக்க எடுக்கப்பட்டது ...?
ஒரு நடவடிக்கையும் எடுக்க படவே படாது...! அவர் என்ன.. நகர்மன்றத்தில் ஊழல் செய்தாரா...? ஒப்பந்தக்காரர் யாரிடமும் கையூட்டு பெற்று ஒப்பம் செய்து கொடுத்தாரா...?
சரி.. உங்கள் புகாருக்கு வருகிறேன்... தலைவர் மினிட் புத்தகத்தில் தவறாக பதிகிறார்.. இது உங்கள் குற்றச்சாட்டு ...!
என்ன செய்தியை தவறாக மினிட் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்...? அதை மக்கள் மன்றத்தில் பார்வையாளர்கள் மற்றும் இணையதளத்தின் மூலம் நகரில் இல்லாத காயல் நகர் மக்கள் அறியும் படி உங்கள் ஆதாரத்தை வெளியுடுங்கள்..
இது ஏதோ.. DCW மேட்டரை நகராட்சி எடுக்க வேண்டிய சில தீர்மானங்களை திசை திருப்ப சூழ்சிகள் நடப்பதாக உணர முடிகிறது..
அடுத்து இந்த உறுப்பினர்கள் சென்னை சென்று அங்குள்ள தலைமை பொறுப்புள்ள அதிகாரிகளையும் சந்தித்து தலைவருக்கு எதிராக மனு கொடுக்க சென்று இருபதாகவும் சில நம்ப தகுந்த செய்திகள் வருகிறது...
தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டை தவிர வேறு எந்த குற்றச்சாட்டும் தலைவரை (பதவி) பாதிப்பு செய்ய முடியாது...முடியாது.. முடியாது... மக்கள் தேர்ந்தெடுத்து கொடுத்த பதவி... உறுப்பினர்கள் அல்ல...!
ஆண் புலி 7 அடி பாய்ந்தால்..! பெண் புலி குட்டி 16 அடி வரை பாயும்...!
நீதி வெல்லும் .... அநீதி தோல்வியே தரும்... சமீபத்தில் ஊடக நீதி மன்ற தீர்ப்பு இதற்க்கு சாட்சி...
14. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன், (அல்கோபார்)[19 December 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24600
மிகவும் தாமதமாக நிகழ்ந்த நிகழ்வு இது.
பல காலங்களுக்கு முன்பே இது மாதிரி மனு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஹைர். வல்ல ரஹ்மான் நாடியவைதான் நடக்கும். அனைத்தும் நன்மையாக அமைய துஆ செய்வோம்.
ஆனால், இந்த நிகழ்வில் மரியாதைக்குரிய சகோ. லுக்மான் அவர்களை எதிர்ப்பார்க்கவில்லை.
அன்று, சகோ. ஆபிதா அவர்கள் வாக்கு சேகரிக்க சென்ற சமயம், தனக்கும் ஓட்டு கேட்டுவிட்டு, அந்த வார்டில் போட்டியிடும் சகோ. லுக்மான் காக்காவிற்கும் ஓட்டு போடும் படி கேட்டார்கள். பல சகோதரர்கள், உங்களுக்கு மட்டும் ஓட்டு கேளுங்க என்று கூறியதும்..
" லுக்மான் காக்கா மாதிரி நல்ல ஆட்கள் தான் நகர்மன்றத்திற்கு வரனும், நமக்கும் உறுதுணையாக, ஊழலுக்கு எதிராக நிற்பார்கள்" என்று கூறியது, இன்று என் மனதில் நிழலாடுகிறது.
16. Shameful Act!!! posted byHaafil Zainul Abideen (Dammam)[20 December 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24605
நம் மக்களுக்காகவும் நம் ஊருக்காகவும் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கும் பொழுது உங்களுக்கு மட்டும் எப்படி புத்தி இப்படியெல்லாம் வேலை செய்கிறது? இதனால் நீங்கள் சாதிக்க போவது என்ன? இல்லை என்றால் நீங்கள் உங்கள் வார்டு மக்களுக்காக செய்த நன்மைகள் தான் என்ன? ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்பார்கள். கூத்தாடி யார் கூத்தாடியின் கைத்தடிகள் யார் யார் என்பதையும் காயல் நகர மக்கள் நன்றாக அறிவார்கள்.
திருந்துங்கள். மக்கள் உங்களை நம்பி வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காதீர்கள்.
17. Re:...நேற்று இன்று நாளை! posted byOMER ANAS (DOHA QATAR.)[20 December 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24608
தம்பி ஜியா,நேற்றைய நிகழ்ச்சியினை நீ பதிந்து விட்டாய்!
இன்றைய நிகழ்வுகளை நாம்(பஞ்சாயத்தில்)பார்த்து விட்டோம்!
நாளை நம் ஊர் மீண்டும் வெளிச்சம் பெற நாம் ஏன் இதற்காக ஒன்றுபடக் கூடாது?
கலைத்திடுவோம் நம் பஞ்சாயத்தை!
நாம் இனி மேலாவது ஒன்று படுவோம் வெற்றி காண்போம்!
தகுதி உள்ளவர்களை மட்டும் ஒன்றாய் இணைந்து தேர்ந்து எடுப்போம்!
ஓ எங்கள் மாவட்ட ஆட்ச்சியரே!
உறுப்பினர்களின் மனுவை மற்றும் ஏற்றுக்கொள்ளாமல்,மொத்தமாக எங்கள்(கட்டை) பஞ்சாயத்தை கலைத்து உத்திரவு இடுங்கள்!
எங்களை நாங்களே திருத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாய் எங்களுக்கு அமையும்!
18. தூத்துக்குடி வரை போய் சொந்தக் காசில் சூனியம் ?? posted bySalai.Mohamed Mohideen (USA)[20 December 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24610
ஒரு வரி கமெண்ட்.... தூத்துக்குடி வரை போய் சொந்தக் காசில் (படியளக்கும் பகவானின் காசோ என்னவோ) சூனியம் வைத்திருக்கிறார்கள்.
எவ்வளவுதான் நகர்மன்ற கூட்டங்களில் அசிங்கமாகவும் கேவலமாகவும் அடவாடித்தனமாகவும் நடந்து கொண்டால் கூட சிரித்துக் கொண்டே மக்கள் பணி செய்யும்... தானும் லஞ்சம் வாங்காமல் மற்றவர்களையும் லஞ்சம் வாங்கவிடாமல் பொது மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழும் நகராட்சி தலைவர் மீதே நாங்கள் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளோம். பொதுமக்களாகிய உங்களால் என்னத்தை செய்ய முடியும் என்று ஏலனத்துடன் பார்ப்பது போல தெரிகின்றது. அநேகமாக இவர்களுக்கு மிகப்பெரிய " ஆப்பு " ஒன்று பொது மக்களிடமிருந்து வரும் வரை இவைகள் தொடரும் போல தெரிகின்றது.
ஊரில் உள்ள சின்ன குழந்தைக்கு கூட தெரிந்த ஒரு விஷயம். துனைதேர்தல் கூத்துக்கள் முதல் நக்கீரனில் வெளிவந்த செய்தி வரை அனைத்தையும் அறிந்திருக்கும் நம் கலெக்டருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. அநேகமாக இது, திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக மாறும் அபாயம்... உசார் !!
DCW அல்லது ஊர் நன்மையான விசயங்களுக்காக போயிருந்தால் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு ஸ்மைலிங் முகத்துடன் போஸ் கொடுக்கலாம்.
Moderator: கருத்தாளர் வேண்டுகோளுக்கிணங்க சில வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
19. Re:... posted bysulaiman (abudhabi)[19 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24614
அஸ்ஸலாமுஅழைக்கும்,
நமது நகராச்சி மன்ற தலைவி அவர்கள் தனக்கு தோன்றியதை, நகராச்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துக்களை பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுக்கலாம்! அது நாடு முழுவதும் அறியபடலாம் ,இதை குற்றம் காணமல் ஏற்றுகொள்வார்கள். நகராச்சி மன்ற உறுப்பினர்கள்,தலைவி பற்றி தாங்கள் அறிந்ததை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவாக கொடுத்தால் குற்றம் காண்கிறார்கள். மீண்டும் பழைய பல்லவியை,புளித்துப்போன கற்பனை கதைகளை கருத்துகளாக தட்டிவிடுகிறார்கள், மடியில் கணம் இல்லையென்றல் மனதில் எதற்கு பயம் ??? புகார் மனுவை ஏற்று தாரளமாக விசாரணை நடத்தட்டும்.தலைவி அவர்கள் அதைஎதிர்கொள்வார்கள்,அப்பொழுதுதான் அவர்களின் நிர்வாக திறமையை?? எல்லோரும் அறிவார்கள்.என்று கருத்து பதிவதுதனே சிறந்த செயலாக இருக்கும்,இதற்க்கு மாறாக மனுகொடுத்தவர்களை வசைமாரி பொழிவது ஏனோ? இன்னும் புகழ்பாடிகளின் குரல்கள் ஒலிப்பது ஏன்???
20. Re:... posted bykader meeran sahib (ரியாத், சவூதி அரேபியா )[19 December 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24615
நமது நகராட்சியின் இந்த 13 உறுப்பினர்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது. இவர்களும் மக்களின் நலனுக்காக செயல்படாமல் நகராட்சி தலைவியேயும் செயல்படவிடாமல் தடுக்கின்றார்கள்.
இந்த 13 உறுப்பினர்களும் நகராட்சி தலைவியே பற்றி கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டார்கள். இவர்களுக்கு வாக்களித்து இவர்களை நகராட்சியில் அமர்த்திய பொதுமக்களாகிய நாம் நமக்கு இவர்கள் மன்ற பொறுப்பில் அமர்ந்த நாளில் இருந்து நமக்காக ஒன்றுமே செய்யாத இவர்களை பற்றி யாரிடம் மனு கொடுப்பது?
நகராட்சி பொறுப்பில் அமர்ந்த நாளில் இருந்து காயல் மக்களுக்காக செய்த சேவை என்ன? ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மாத நகராட்சி கூட்டத்திலும் இந்த உறுப்பினர்கள் பிரச்சனைகளை உண்டு பண்ணி நகமன்ற மாத கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதே இவர்களின் வேலையாக போகிவிட்டது. நமதூருக்கு இந்த மாதிரி உறுப்பினர்களை வைத்து எந்த ஒரு லாபமும் இல்லை நஷ்டம் தான் அதிகம்.
ஒரு சமயம் நகர்மன்றதை கலைத்து மீண்டும் தேர்தல் வைத்து அதிலே இந்த உறுப்பினர்கள் நின்றால் நிச்சயமாக தோற்பது உறுதி.
21. காயல் மானம் தூத்துக்குடியில் கப்பல் ஏறுகிறது...! posted byM.N.Sulaiman (Bangalore)[20 December 2012] IP: 14.*.*.* India | Comment Reference Number: 24617
நகர்மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திருப்தியில் மீடியா விற்கு போஸ் கொடுக்கும் இந்த 13 நாயன்மார்களும், நம் தலையில் நாமே சேற்றை வாரி இறைக்கிறோம் என்ற உள்ளுணர்வு கூட இல்லாமல் இருக்கிறார்கள்.
இன்று தலைமைக்கு எதிராக தூத்துக்குடி வரை சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நீங்கள், கடந்த நவம்பர் மாதம், நம் நகரின் அணைத்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய DCW வை கண்டித்து நடத்திய கண்டன ஆர்ப்பாரட்டதின்போது எங்கு சென்றீர்கள் (உறுப்பினர் பீவி பாத்திமா அவர்களை தவிர).
மக்கள் நலன் தவிர்த்து, தங்களுக்கு இட்ட பணிகளை தலைமையை எதிர்த்து செவ்வனே செய்கிறீர்கள். யாரையோ திருப்திபடுத்துவதற்காக தாங்கள் செய்யும் அணைத்து சூழ்ச்சிகளையும் இறைவன் நன்கறிவான்.
"பிராது" கொடுக்கணும்னு வந்தாச்சு...பின்னே என்ன மறைந்து கொள்வது...?
மாவட்ட ஆட்சியரிடம் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்த நகர் மன்ற உறுப்பினர்களே, உங்கள் மீது நடவடிக்கை கோரி உங்களை தெரிவு செய்த ஜமாஅத்தார்கள், உங்கள் ஜமாஅத்தில் மனு கொடுத்து உங்களை நகரமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து திரும்பபெற செய்தால் என்ன செய்வீர்கள்? எதையும் செய்வதற்கு முன் யோசித்து செய்தால் நல்லது. சுயமாக முடிவு செய்யுங்கள். யாருடைய சொல்லையும் கேட்டு அதன்படி நடக்காதீர்கள்.
இந்த விஷயத்தில் ஐக்கிய பேரவையின் நிலை என்ன? நகர் மன்றத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கண்டுகொள்ளாமல் இருப்பது என முடிவு செய்து விட்டார்களோ என நம்பத்தோன்றுகிறது. நகர் மன்ற தலைவர் நமது வேட்பாளர் இல்லையே என நினைக்கிறார்களோ என்னவோ? DCW விவகாரத்திலும் ஐக்கிய பேரவை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
அன்புள்ள நகரமன்ற உறுப்பினர்களே உங்களை உறுப்பினர்களாக தெரிவு செய்தது நமது கயல்பட்டணதிற்கு நல்ல பல வேலைகள் செய்வீர்கள் என்றுதான் உங்களை தேர்வு செய்து அனுப்பினார்கள். தயவுசெய்து இவைகளை உணர்ந்து செயல்பட அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவானாகவும். வஸ்ஸலாம்.
24. Re:... posted byMuhammad Ibrahim (Guangzhou (China))[20 December 2012] IP: 183.*.*.* China | Comment Reference Number: 24623
நம்ம ஊரு மக்கள் தலைவரை தேர்ந்து எடுக்க காட்டிய அக்கறையில் கவுன்சிலர் தேர்வில் கோட்டைவிட்டு விட்டோம். யப்பா ஒரு பெண் கவுன்சிலர் வீடியோவில் என்னா ஆட்டம் போடுறாப்பா!
26. வீடியோ பார்த்த பிறகு மனதில் பட்டவை! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[20 December 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24659
அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் பதிந்துள்ள முன் கருத்துக்களையும் எந்த மாற்றங்களும் இல்லாமல் அமோதித்து வீடியோ பார்த்த பிறகு மனதில் பட்டவைகள்.
1. 3 வது வார்ட் பெண் உறுப்பினர் ஏன் அனைத்து நிகல்வுகளிலும் இஸ்லாமிய கலாச்சாரத்தை புறக்கணித்தும் தெருச்சண்டை போட்டுக்கொண்டும் மிக அசிங்கமாக தொடர்ச்சியா கூட்டம் முதலாவது முதல் இன்றுவரை அப்படியே தன்னை திருத்தாமல் நடந்து வருகிறார்? இவரை தேர்ந்தெடுத்து சிபாரிசு செய்த ஜமாஅத் ஏன் இன்னும் இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? இவரின் கணவர் கூட ஏன் கட்டுபடுத்தவில்லை.
இவர் மக்கள் பிரச்சனைகளை பேசட்டும் ஆனால் அதை நாகரிகமாக பொறுமையுடன் கோபத்தை கூட நமது கலாச்சாரத்திற்கு உட்பட்டு வெளிபடுத்தட்டும் ஒன்றும் தவிறில்லை.அன்பான சகோதரியே தங்கள் மீது மரியாதைக்கொண்டு தான் பதிவு செய்கிறேன். தங்களை போன்ற பேச்சாற்றல் மிகுந்த உறுப்பினர் தேவை தான். தங்களின் பேச்சு முறைகளை மாற்றிக்கொள்ளுங்கள்.
2. நகர்மன்ற தலைவி அவர்களே!
தாங்கள் வகிக்கும் பொறுப்பு அதிக மன அழுத்தம் மற்றும் கோபம் வரவழைக்கும் பொறுப்பு. நீங்கள் முழுமையான தகுதி எப்போது பெறுவீர்கள் என்றால் தங்களின் கோபத்தினை முழுக் கட்டுபாட்டிற்கு கொண்டுவரும்போதுதான். இது இலகு கிடையாது. எங்களை போன்றவர்கள் இலகுவாக கருத்தை பதிவு செய்துவிடலாம். ஆனால் நேரடியாக எதிர்கொள்வது ஓர் கடினமான விசியம்தான். இருந்தாலும் தாங்கள் சபையில் உள்ளவர்களை தவிர்த்து வெளியில் உள்ள எவரையும் குறித்து பேசுவது நல்லதல்ல. அதாவது அடுத்தவரின் மனைவி பற்றி. அனைவருக்கும் தெரியும் நகர்மன்றம் என்றால் மக்களுக்காக நடக்கும் மன்றம் என்று. இதில் அவசரப்பட்டு எனது வீட்டு சொந்த பிரச்சனையா என்று வினவவும் அதற்க்கு உறுபினர் நான் என்ன உன் வேலைகாரனா என்று வாதாடுவதும் இப்படியாக நகர்மன்றம் திசை மாறிப்போக தங்களின் முன்கோபமும் ஒர்காரனமாக அமைந்து விடுகிறது...
கமிசனர் பொறுப்பில் உள்ள மினிட் புத்தகம் வெளியே சென்றால் அவர்மேல்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானம் இயற்ற வேண்டுமே தவிர வீணான விவாதங்கள் அவசியமில்லை.
3. அன்பான உரிபினர்கலே!
என்னை போன்ற நடு நிலமைவாதிகள் இது போன்ற வீடியோ பதிவு கண்டபிறகுதான் நிலைமைகளை உணரமுடிகிறது. தங்களின் பிடிவாதமான மறுப்பு வெறுக்கத்தக்கது.
தலைவி அவர்கள் கூறும் கருத்தாகிய உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட அஜெண்டாகளில் எது சாத்தியமோ அதைதான் எடுக்க முடியும் என்று தன்னிச்சையாக கூறுவது ஏற்புடையது அல்ல! இருப்பினும் இதற்க்கு காரணம் தங்களின் தொடர் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கோஸ்ட்டி சேர்த்து மக்கள்னலனில் அக்கறை இல்லாத காரணங்களால் தாங்கள் பெருபான்மையாக இருந்தாலும் தங்களின் மோசமான மக்கள்களுக்கு சாதகமான போக்கில் இல்லாத காரணத்தால் பெருபான்மை என்ற நியாமான விசியத்தை தலைவி அவர்களால் கடைபிடிக்க இயலாத தர்மசங்கடத்தை திணிக்கிறீர்கள் என்பது மக்களாகிய எங்களால் நன்கு உணரமுடிகிறது!
உங்கள் கூற்றுப்படி பார்த்தால் திரு சுகு போன்றவர்கள் கோசா பெண்களையும் நமது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு மாற்றமாக அல்லது மக்களுக்கு மிக பாதிக்க கூடிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு அது மெஜாரிட்டி என்ற விதத்தில் தங்களின் சரியான நீதமான நேர்மையான செயல்கள் இல்லாததால் [கோசா பெண்களை பற்றி பேசியபோது மொவ்னம், DCW விவாகாரத்தில் மக்களுடன் சேராதவை இன்னும் பல.....] தலைவியின் தன்னிச்சை முடிகள் எடுக்க தாங்களே காரணம்....சிந்தீப்பீர்! செயல் படுவீர்......
27. Re:... posted byPalappa Jalali (Kayalpatnam)[20 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24661
யாரிடம் ரீல் விடுகின்றார்கள் இவர்கள்?
நகர்மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாற்றாக எந்த நகர்மன்ற தலைவராவது மினிட் புத்தகத்தில் எழுத முடியுமா?
இதென்ன பால் கணக்கு புத்தகமா? அரை லிட்டர் கால் லிட்டர் கூடியது, குறைந்தது என்று எழுதுவதற்கு.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எந்த ஒரு தீர்மானமோ, மினிட் புத்தகமோ நகர்மன்ற ஆணையர் பார்வைக்கும் ஆர்டிஎம்ஏ பார்வைக்கும் உட்பட்டதே. மேலும் இதன் பின்னர் மானிட்டரிங் கமிட்டி வேறு ஆய்வு செய்யும்.
எவ்வளவு கவனமாக கையாள வேண்டியது மினிட் புத்தகம். நமது நகர்மன்ற தலைவி மீது இந்த விசயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.
அப்படி மினிட் புத்தகத்தை சரிபார்க்க வரும்போது எவ்வித குறையும் இல்லை என்று மானிட்டரிங் கமிட்டி முடிவு செய்யும்போது இவர்களின் நடவடிக்கை கோரிக்கை புஜ்ஜியமாகிவிடும். இதுதான் நடக்கப்போகிறது.
காயல்பட்டண நகர் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்யும் நகர்மன்றத்தின் பொன்னான கூட்ட நேரங்கள் வீணடிக்கப்படுகின்றன. இந்த அம்புகள் எப்போதுதான் உணர்வார்களோ தெரியவில்லை.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றவர்களில் மறைந்திருக்கும் நபர் கேட்டார். ஒரு ”ம” வும் பிடுங்க முடியாது. எந்த கோர்ட்டுக்கு போனாலும் மீடியா மன்றத்திற்குள் நுழைய முடியாது என்று தெனாவெட்டாக கூறினார். பாவம் அதனால்தான் என்னவோ வெட்கப்பட்டு புகைப்படத்தில் முகம் காட்டவில்லையோ? என நினைக்க தோன்றுகிறது.
இதில் ஓர் விசயம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது நகர்மன்ற தலைவிதான் அவமானப்படுத்தப்பட்டதை அடுத்து அவராக முந்திக்கொண்டு புகார் மனு அளித்திருக்கலாம். அவர் அதை கையாளத் தவறியதால் இந்த நபர்கள் முந்திக் கொண்டார்கள்.
இந்த நடவடிக்கை கோரிக்கை மனுவில் எதுவும் நடக்கபோவதில்லை. அதை விடுத்து நகர்மன்ற நடவடிக்கைகளில் தலைவியுடன் ஒத்துழைத்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவ வேண்டும். இல்லாவிட்டால் ”ஆப்பு” தான்.
நகர்மன்றத்தை கலைப்பதற்கு கோருவதை அல்லது நீதிமன்றத்தை அனுகுவதை தவிர வேறு வழியில்லை. பூனைக்கு யார் தான் மணி கட்டுவார்கள்? இன்ஷா அல்லாஹ் விரைவில் நடக்கலாம்.
மக்கள் பணியில்
பா.மு.ஜலாலி பி.எஸ்.இ.
மக்கள் சேவா கரங்கள்
காயல்பட்டணம்.
28. Re:ஒரு சக்தி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது posted bySabeer (Bangalore)[20 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24694
நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தலைவி மேல் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்துள்ளீர்களே! உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள எங்களுக்கு உங்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நாங்கள் யாரிடத்தில் முறையிட? ஒன்று செய்யலாம்.
வாக்காளாகள் அனைவரிடத்திலும் ஒரு சர்வே எடுங்கள். அதில் கீழ்க்காணும் வாசகத்தை குறிப்பிடவும்.
1) ___வது வார்டு உறுப்பினரின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?
ஆம் / இல்லை.
2) நகர்மன்றத் தலைவரின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?
ஆம் / இல்லை.
இதற்கு ஏதாவது அமைப்பு முன்வந்து தெருவாரியாக அதற்கென நபர்களை நியமித்து சர்வே எடுத்தால் இவர்களின் யோக்கியதை என்னவென்று தெரியும்.
அனைவரும் ஒன்றுபட்டு இந்த DCW விசயத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தீர்கள் என்றால் இந்த ஊர் உங்களை வாழ்த்தும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகி விட்டது. 'உங்களை ஒரு சக்தி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது'
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross