காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இவர், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது முதல்வராக இருந்த மர்ஹூம் மவ்லவீ எஸ்.எம்.ஸாஹிப் தம்பி ஆலிம் மறைவுக்குப் பின், அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். அக்கல்லூரியின் ஆசிரியராகவும், முதல்வராகவும் என சுமார் 40 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார்.
அன்னாரின் ஜனாஸா சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான கடையநல்லூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. 21.12.2012 வெள்ளிக்கிழமை (நாளை) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் மறைவையொட்டி, மஹ்ழரா அரபிக்கல்லூரியில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.M.T.சுலைமான்
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 14:13 / 20.12.2012]
வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் -
சிறந்த தலைமை ஆசிரியரை இழந்து தவிக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் இன்னாள், முன்னாள் மாணவர்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமீன்.
3. Re:... posted byOMER ANAS (DOHA QATAR.)[20 December 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24626
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.அன்னாரை பிரிந்து வாடும் எங்கள் அன்பு சகோதரன் நூருத்தீன் மற்றும் உற்றார் உறவினர்கள்,மாணாக்கர்கள் அனைவர்களுக்கும் சபூர் எனும் பெருமையினை கொடுத்தருள வல்லோனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திக்கின்றோம்!
உமர் அனஸ்,
மற்றும் சோனா முஹியத்தீன்!
தோஹா கத்தார்!
4. Re:... posted bysyedahmed (GZ, China)[20 December 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 24627
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பெருந்தகை மௌலவி கலந்தர் மஸ்தான் ஆலிம் வபாத் செய்தி அறிந்து மனதுக்கு துயரம் தந்தது. நம் காயல் நகரின் மகத்தான உன்னதமான ஆலிம்களின் வரிசையில் மர்ஹூம் அவர்களும் இன்றியமையாத நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஆற்றிய மார்க்க போதனைகள் அனைத்தும் சிறந்த அந்தஸ்தை அடைத்தது. அவர்களின் பிரிவு நம் காயல் நகருக்கு ஒரு பெரிய இழப்பாகும். அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்திற்கு சபூர் சொல்லி இரங்கல் சலாத்தை தெரிவித்து கொள்கிறேன். வல்ல அலலாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன்.
5. Re:... posted byM.S.ABDULAZEEZ (Gz)[20 December 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 24628
அல்லாஹ் அன்னாரது பாவ பிழைகள் பொருத்து மஹுபிரதில் அன்னாருக்கு சுவனபதி நல்ஹிடுவாயாக ஆமீன். அன்னாரின் குஇன்னாளிலாஹி வா இன்னைலிஹி ராசிஊன். யா டும்பத்தினர்கள் உறவினர்கள் நண்பர்கள் யாருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும். நமதூருக்கு யாவருக்கும் நன்கு அறியப்பட்ட நல்ல சிறந்த மனிதர்.
6. Re:... posted byM.S.ABDULAZEEZ (Gz)[20 December 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 24629
இன்னாளிலாஹி வா இன்னைலிஹிராசிஊன். யாஅல்லாஹ் அன்னாரது பாவ பிழைகள் பொருத்து மஹுபிரதில் அன்னாருக்கு சுவனபதி நல்ஹிடுவாயாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினர்கள் உறவினர்கள் நண்பர்கள் மஹ்ழரா அரபிக்கல்லூரி மாணவர்கள் யாருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும். நமதூருக்கு யாவருக்கும் நன்கு அறியப்பட்ட நல்ல சிறந்த மனிதர் ( எனது முதல் கருத்தில் சிறு எழுத்து பிழை )
7. Re:...தந்தையின் நண்பர்... posted bymackie noohuthambi (kayalpatnam)[20 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24630
எங்கள் நெஞ்சில் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்களின் இதயத்தில் கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்களுக்கு ஒரு தனி இடம் எப்போதுமே இருந்து வந்ததை நான் அறிவேன்.
ரஹ்மானி அவர்கள் பேச்சாற்றல் சொல்லாற்றல் மிக்கவர்கள். இஸ்லாமிய சரித்திரத்தின் கருஊலதை மனக்கண் முன் கொண்டு வரும் ஆற்றல் மிக்க சொல்லின் செல்வர்..சொல்லேர் உழவர் அவர்கள். மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அவர்களின் அற்புதமான பேச்சை கேட்க குளுமியிருப்பர்கள். தமிழும் அரபியும் குர்ஆனும் ம் ஹதீசும் அவர்களுக்கு கை வந்த கலை. புகாரி ஷரீபிலும் சரி இதர மார்க்க விழாக்களிலும் அவர்கள் கலந்து கொள்கிறார்கள் உரையாற்றுகிறார்கள் என்றால் நான் செவி தாழ்த்தி அவர்கள் பேச்சை கேட்பதற்கு செல்வேன்..
அவர்கள் வபாத் செய்தி இன்று வந்தபோது மனதுக்கு கவலையாக இருந்தது. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக...அவர்களின் குறைகைளை மறைப்பானாக மன்னிப்பானாக அவர்களுக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்க வாழ்வை கொடுப்பானாக. என்று து ஆ செய்கிறோம். அல்லாஹ் கபூல் செய்வானாக.அவர்கள் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக.ஆமீன்.
மக்கி நூஹு தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள். மக்கி ஆலிம் இல்லம் No 7 சொளுக்கார் தெரு காயல்பட்டினம்.
8. Re:... posted byVSMT Hong Kong (Hong Kong)[20 December 2012] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 24631
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த செய்தி அறிந்து மனம் மிக்க வேதனை அடைகிறது..
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
ஒரு மார்க்க அறிஞ்சரின் வபாத், ஆயிரம் சாதாரண மனிதர்களின் மரணத்தை விட மேலானது.. நபிமொழி
வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களுடைய அந்தஸ்த்தை உயர்த்தி மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் - சிறந்த தலைமை ஆசிரியரை இழந்து தவிக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் அணைத்து மாணவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை தந்தருள்வானாக!
11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “ posted byAbdul Cader HK & Abul Hassan UK (Hong Kong UK)[20 December 2012] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 24635
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
السلام عليكم ورحمة الله وبركاته மதிப்புமிக்க மஹ்லரா அரபிகல்லூரியின் முதல்வரும், எனது சங்கைக்குரிய உஸ்தாதும் ,மிகச்சிறந்த நாடறிந்த நாவலரும், சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதி மிக்கவருமான கண்ணியத்துக்குரிய அல்ஹாஜ் மௌலானா, மௌலவி கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி காதிரி ஹஸ்ரத் அவர்களின் "வபாத்" செய்தி அறிந்து அதிர்ச்சியும்,மிக்க கவலையும் அடைந்தேன். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். குறிப்பாக மஹ்லரா அரபிகல்லூரிக்கும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கும், மொத்த சமுதாயமும் அடைந்துள்ள பேரிழப்பாகும்.
அவர்களின் குடும்பத்தினர், மஹ்லராவின் நிர்வாகிகள்,உஸ்தாத்மார்கள், மாணவர்கள்,மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், குற்றங்கள், குறைகளை மன்னித்து ,அவர்களின் கப்ரை சுவன சோலையாக ஆக்கி, நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மேலான சபாஅத்தை பெற்று அவர்களோடு ஜன்னதுல் பிர்தொவ்சில் குடியிருக்க நல்லருள் புரிவானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !
13. வருந்துகின்றேன். posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[20 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24637
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன். என் பள்ளித் தோழன் அப்துல்லாஹ்வின் தந்தை கண்ணியம் மிக்க ஆலிம் பெருந்தகை, மஹ்ழராவின் முதுகெலும்பாய் இருந்து நூற்றுக்கணக்கான மணவர்களை ஆலிம்களாக உருவாக்கிய மகத்தான மனிதர். கனீரெனும் குரலில் ஹதீஸ்களை சொல்லும் பேச்சாற்றல் மிக்க பெருந்தகை கலந்தர் மஸ்த்தான் ஆலிம் அவர்களின் மரணச் செய்தி பார்த்து ஒருக் கனம் ஆடிப்போய் விட்டேன்.
பள்ளி படிப்பு காலத்தில் அவர்கள் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து என் நண்பன் அப்துல்லாஹ்வோடு நட்புறவாடிய நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன்.
கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டோடு தானும் வாழ்ந்து தம் குடும்பத்தையும் வழி நடத்திய ஒரு பொறுப்புள்ள தந்தை அவர். எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை வழங்கியருள வேண்டுகின்றேன். குடும்பத்தார் மற்றும் மாணவர்கள் சபூர் செய்யும் படியும் பனிவோடு வேண்டுகின்றேன். வஸ்ஸலாம். -ராபியா மணாளன்.
16. Re:... posted byMohamed Salih (Bangalore)[20 December 2012] IP: 121.*.*.* India | Comment Reference Number: 24643
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களுடைய அந்தஸ்த்தை உயர்த்தி மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் - சிறந்த தலைமை ஆசிரியரை இழந்து தவிக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் அணைத்து மாணவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை தந்தருள்வானாக!
19. ஓர் தலை சிறந்த மார்க்க வல்லுனரை இழந்து விட்டது காயல்! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[20 December 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24646
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் - சிறந்த தலைமை ஆசிரியரை இழந்து தவிக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் இன்னாள், முன்னாள் மாணவர்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமீன்.
21. Re:... posted byJAINULABDEEN (RASTANURA-DAMMAM)[20 December 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24649
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் - சிறந்த தலைமை ஆசிரியரை இழந்து தவிக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் இன்னாள், முன்னாள் மாணவர்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமீன்.
எனது தந்தையின் நண்பர்,சிறந்த பண்பாளர்,மரியாதைக்குரிய
இந்தப் பெருமகனாரின் பிரிவு,காயல் நகரத்திற்கு மாத்திரமல்ல,
ஒட்டு மொத்த தமிழ் கூறும் இஸ்லாமிய மக்களுக்கே
பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடுகின்ற,ஹஜ்ரத் அவர்களின் மக்கள்,
எனது பள்ளித் தோழர் அப்துல்லாஹ்,எனது நீண்ட கால நண்பர்
எமது கத்தார் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் நூர்தீன்,அன்னாரது மருமகன் நண்பர் ஜெய்லானி,மஹ்ழரா
அரபிக் கல்லூரி நிர்வாகத்தினர்,முன்னாள் இந்நாள் மாணவர்கள்,
குடும்பத்தினர் மற்றும் காயல் பட்டணம்,கடையநல்லூர்
உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை
சமர்ப்பிக்கின்றேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்,மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்
பொறுத்து மேலான சுவனப் பதியை நல்கிட,இருகரமேந்தி
இறைஞ்சுகின்றேன்.
ஆழ்ந்த இரங்கலுடன்,
கவிமகன் காதர்
S/o. ஸாம் ஒலி ஊழியர் மர்ஹூம் ஸதக்கத்துல்லாஹ் ஆலிம்
மிகவும் அற்புதமான பேச்சாற்றல் கொண்ட நல்ல ஒரு மனிதர்.
இவருடைய மார்க்க பயான் எங்கு நடந்தாலும் , தவறாமல் சென்று , அவருடைய அந்த பேச்சு நடையை கேட்டு பல முறை வியந்து உள்ளேன் .
எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் - சிறந்த தலைமை ஆசிரியரை இழந்து தவிக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் இன்னாள், முன்னாள் மாணவர்களுக்கும் எனது சலாதினை தெரிவிப்பதுடன் , சபூர் என்னும் பொறுமையை கடைபிடிக்கும் படியாகவும் கேட்டு கொள்கிறேன் .
சுன்னத் வல்ஜமாத்தின் தூண் சாய்ந்துவிட்டது. கண்ணியம் மிகுந்த மஸ்தான் ஹழ்ரத் அவர்களின் வபாத் அதிர்ச்சியும் மிகுந்த கவலையும் தந்தது.
நாடறிந்த நல்லுரையாளர். நிருவாக திறமை மிக்கவர். மாணவர்களின் ஒழுக்கத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரின் பயான் (உரை ) கேட்போரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். தெளிவான விளக்கம். எடுத்து கொண்ட தலைப்பில் தெள்ள தெளிவாக உரை யாற்றும் நல்ல சன்மார்க்க பேரொளி.
அன்னாரின் இழப்பு சமுதாயதிற்கு பேரிலப்பு.அன்னாரின் மண்ணறையை எல்லாம் வல்ல அல்லாஹ் பிரகாசமாகி வைத்து நாளை மறுமை நாளில் மேலான சுவனபதியை தந்தருள் வானாக ஆமீன்.
ஹழ்ரத் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மஹலரா அரபி கலாசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், அங்கத்தினர்கள் யாவருக்கும் மேலான பொறுமையை தந்தருள் வானாக ஆமீன்
கனத்த இதயத்துடன்
M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா
29. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். posted byShahul Hameed (UAE)[20 December 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24658
ஒரு ஆலிம் மரணிப்பது ஒரு பெரும்கூட்டம் மரணிப்பதை விட மேல் (நபிமொழி )
கண்ணியம் மிகுந்த ஆலிம் ஒரு முறை சொன்னார்கள் ,
மரணம் என்பது வாழ்கையின் முடிவு அல்ல மற்றுமொரு வாழ்வின் தொடக்கம் ,
முடிவு இல்லாத ஆகிறத் பயணத்தை நோக்கி புறப்பட்டு விட்டார்கள் , சமுதாயத்தின் தூண் சுவர்கத்தின் அங்கமாகிவிட்டது,
எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் - சிறந்த தலைமை ஆசிரியரை இழந்து தவிக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் இன்னாள், முன்னாள் மாணவர்களுக்கும் எனது சலாமை தெரிவிப்பதுடன் , சபூரண் ஜமிலாவை நம் அனைவர்களுக்கும் இறைவன் தந்து அருள்வானாக ,ஆமீன்
மார்க்க ஒளியூட்டி ,வழிகாட்டிய, கலங்கரை விளக்கு - கலந்தார் மஸ்தான் ரஹ்மானி ஆலிம் அவர்கள்
நாங்கள் கே .வி .ஏ .டி . சகோதரர்கள் , மஹலராவில் - மதரசாவில் ஓதவில்லையே - தவிர , சிறுபிள்ளயிளிருந்தே, ,
அவர்கள் கைபிடித்து - அவர்களிடம் கால்மடித்து , ஹதிதுகளையும் , பிக்ஹுகளையும் , படித்தரிந்தோமே.. எங்களை , மஸ்தான் ஹழ்ரத் - பிள்ளைகள் , என்றுதானே , மஹலராவில் உள்ளோர்கள் அழைப்பார்கள்...
எங்களது திருமணத்தின் போது, கண்ணியத்திற்குரிய மர்ஹூம் சாஹிப் தம்பி ஆலிம் அவர்கள் , பாசத்திற்குரிய எனது மாமனார்
மர்ஹூம் கவிங்கர் சதக்கத்துல்லா ஆலிம் அவர்கள் , மற்றும் எங்கள் நெஞ்சில் என்றுமே நிறைந்திருக்கும் - மார்க்கத்தந்தை S.S.K. என்று கண்ணியத்தோடு அழைக்கப்படும் , மஸ்தான் வாப்பா அவர்கள் , நிகாஹ் மேடையிலே குழுமி இருக்கும் போது ,மர்ஹூம் சாஹிப் தம்பி ஆலிம் அவர்களை , நிகாஹ் செய்து வைக்க மைகிலே அறிவிக்கும்போது , சாஹிப் தம்பி ஆலிம் அவர்கள் ,"... ஹபீப் முஹம்மது , மஸ்தான் ஹழ்ரத் அவர்கள் பிள்ளை , எனவே மஸ்தான் ஹழ்ரத்தான் , நிக்காஹ் செய்து வைக்கவேண்டும் ..." என்று கூறினார்கள் .
அந்த அளவிற்கு , நாங்கள் , அவர்கள் பெறாத பிள்ளை , என்று எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று. அன்னார் உபாத்து செய்தி அறிந்து ஒருகணம் ஆடி விட்டேன் ....
அன்னாரின் இழப்பு , தமிழ் கூறும் நல்லுலகிற்க்கே பேரிழப்பாகும் ,இசுலாமிய உலகிற்கு மிஹப்பெரிய இழப்பாகும் , மஹலராவிர்க்கு....சொல்லவும் வேண்டுமா ?
மாற்றுக்கறுத்து உள்ளவர்கள் கூட , அவர்களின் பிரசங்கத்தை , ரசித்துக்கேட்பார்களே , அத்தகைய - நாவன்மை படைத்தவர்கள் - சிறந்த நட்சத்திர பேச்சாளர் ....
34. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் posted byA.W.MD Abdul Cader Bukhari (mumbai)[20 December 2012] IP: 120.*.*.* India | Comment Reference Number: 24666
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
காயல் மாநகர் ஒரு தலைச் சிறந்த ஆலிம் பெருந்தகையை இழந்து விட்டது. வல்ல அல்லாஹ் அலிம் பெருந்தகையின் சிறிய பெரிய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவுஸை கொடுத்து அருள் புரிவானாக! ஆமீன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் ஹழ்ரத் அவர்களின் மார்க்க சேவைகளை ஏற்றுக்கொண்டு, அன்னவர்களுக்கு சுவனத்தில் மேலான பதவியை கொடுத்தருள் புரிவானாக, آميــــــــن.
அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார், சொந்தங்கள், மஹ்லரா அரபிக் கல்லூரியின் நிர்வாகத்தர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவர்களுக்கும் வல்ல ரஹ்மான் மேலான பொருமையை கொடுத்தருள் புரிவானாக, آميــــــــن.
39. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[20 December 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24671
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
வல்ல ரஹ்மான் அவனின் கருணையான சுவனத்தில், பெரிய பதவியை கொடுப்பானாக.
நாவலர் என்றால் இவர்கள்தான். கம்பீரக் குரல், கூட்டத்தை வசீகரிக்கும் பாங்கு, ஒரு சம்பவத்தை விவரித்தால் நம்மை அந்த சம்பவம் நடக்கும் இடத்திற்கே அழைத்து செல்லுவது போன்று விவரிக்கும் அழகு.. !!
குடும்பத்தார், மஹலரா நிறுவாகத்தினர் ஆகியோருக்கு ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுப்பானாக.
46. Re:... posted bySUPER IBRAHIM.S.H. (RIYADH - K.S.A.)[20 December 2012] IP: 204.*.*.* United States | Comment Reference Number: 24678
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அருமை நண்பன் அப்துல்லாஹ், அவர் தம்பி, தங்கைஹள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் - சிறந்த தலைமை ஆசிரியரை இழந்து தவிக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் இன்னாள், முன்னாள் மாணவர்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமீன்!!! அவர்ஹளுடைய பயான் எப்பொழுதும் கேட்டுகொண்டே இருக்கனும் போன்று இருக்கும்.
வஸ்ஸலாம்.
மிக்க வருத்தமுடன்,
சூப்பர் இப்ராகிம், எஸ்.எச். + குடும்பதினர்ஹல்,
ரியாத். சவுதி அரேபியா.
47. Re:... posted bykader meeran sahib (ரியாத், சவுதி அரேபியா.)[20 December 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24679
நமது ஊரின் தலைசிறந்த ஆலிம் பெருந்தகையும் அஹ்லே சுன்னத்வல் ஜமாத்தின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரும் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன்.
கலந்தர் மஸ்தான் ஆலிம் அவர்கள் நல்ல தக்வா உள்ளவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர், நல்ல பண்பாளரும் கூட. ஆலிம் அவர்களின் உரையால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டாலும், நாதாக்கலான வலீமார்களின் பொருட்டாலும் ஆலிம் அவர்களின் பிழைகளை பொருத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் நமது நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுடன் நமது ஆலிம் அவர்களை இருக்க செய்வானாக ஆமீன்.
“உன்னதமான ஆலிமாகிய பெருந்தகை மௌலவி கலந்தர் மஸ்தான் ஆலிம் அவர்களின் பிரிவு நம் காயல் நகருக்கு ஒரு பெரிய இழப்பாகும். அறிவிழந்தோர் ஆயிரம் பேர் மறைந்து விட்டாலும் புகழ் ஆலிம் ஒருவர் மரணிப்பது அரும்பெரும் நஷ்ட்டம் .
கண்ணியத்துக்குரிய அல்ஹாஜ் மௌலானா, மௌலவி கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி காதிரி ஹஸ்ரத் அவர்களின் குடும்பத்தினர், மஹ்லராவின் நிர்வாகிகள், உஸ்தாத்மார்கள், மாணவர்கள், மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சபூர் செய்து கொள்ளவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், குற்றங்கள், குறைகளை மன்னித்து ,அவர்களின் கப்ரை சுவன சோலையாக ஆக்கி, நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மேலான சபாஅத்தை பெற்று அவர்களோடு ஜன்னதுல் பிர்தொவ்சில் குடியிருக்க நல்லருள் புரிவானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !
மிக்க வருத்தமுடன்,ஏ .எம் .நூர் முஹம்மத் ஜக்கரியா
&குடும்பத்தினர்கள் .வஸ்ஸலாம்.
58. முன்னுதாரணமான நாவலர் பெருந்தகை! posted byS.K.Salih (Kayalpatnam)[20 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24700
பொதுவாக மேடையில் பேசுவோர் உரத்த குரலில் பேசுவது வழக்கம். ஒலி வாங்கி இல்லாத காலத்திற்கு அது சரி. தற்காலத்தில் - அருகிலிருப்போர் மட்டுமே கேட்குமளவுக்கு பேசப்படும் பேச்சையும் ஒலி வாங்கிகள் தெள்ளத் தெளிவாக ஒலியைப் பெருக்கி அளிக்கிறது.
இந்த உண்மையைத் தெரியாமல் இன்றும் பல பேச்சாளர்கள் (அனைவருக்கும் விளங்க வேண்டும் என்பதற்காக) உரத்த குரலில் பேசுவர். இதனால் அவர்களின் சக்தி விரயமாக்கப்பட்டு, சொல்ல வந்த தகவலை - அது முழுமை பெறாத நிலையில் சொல்லி முடித்துவிடுகின்றனர்.
இப்பேர்பட்ட பேச்சாளர்களுக்கிடையில், நமதூரில் ஒரு சில மார்க்க அறிஞர்கள், அழகு தமிழில் - அச்சர சுத்தமாக - மெல்லிய குரலில் - தேவையான ஏற்ற இறக்கங்களுடன் பேசுவதைப் பார்க்கும்போது யாருக்குத்தான் அதைக் கேட்க ஆர்வம் வராது?
அப்படி இன்று பேசும் ஆலிம்கள் அனைவருக்கும் இந்த விஷயத்தில் குருவாகத் திகழ்ந்தவர்கள்தான் கண்ணியத்திற்குரிய உஸ்தாத் கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ ஹஸ்ரத் அவர்கள்.
அமைதியான குரலில், எந்த ஆர்ப்பாட்டமுமின்றி - தெள்ளத் தெளிவாக உரையாற்றும் அவர்களின் பாங்கு, முஸ்லிமல்லாத மக்களையும் கவரச் செய்ததை கண்ணாரக் கண்டுள்ளேன்...
ஹஸ்ரத் அவர்கள் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபில் உரையாற்றவுள்ள செய்தி கிடைத்துவிட்டால் போதும்! அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவேன்...
கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இரு புறங்களிலும் நிலவி வரும் இக்காலையில், ஒருவரையொருவர் குற்றங்கண்டு - குறை சொல்லி - “நீயா, நானா?” போட்டி போடும் மார்க்க அறிஞர்கள் - பேச்சாளர்களுக்கிடையில், மாற்றுக் கருத்துடையோரும் செவிதாழ்த்திக் கேட்கும் வண்ணம் தன் கருத்தை அவர்கள் சொல்லும் விதம் - மேடைப் பேச்சாளர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த பாடப்புத்தகம்.
இன்று அவர்கள் நம்முடன் இல்லை. ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆலிம்கள் உள்ளனர். சமுதாய நலன் நாடி, கொள்கை கோட்பாடுகளை விளக்க வேண்டிய இடங்களில் - யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்காமலும், பொதுவான நகர்நல - சமுதாய நல - சமூக நல காரியங்களில் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இணக்கத்துடனும், பெருந்தன்மையுடனும் செயல்பட்டு, மறைந்த ஹஸ்ரத் அவர்களுக்கும் அதன் நற்கூலிகளில் பங்கு கிடைக்க காரணமாக இருப்பது அவசியம்.
இதை என்னை விட வயதில் பெரியோருக்கு பணிவான வேண்டுகோளாகவும், என் வயதையொத்தோருக்கும், எனக்கு இளையோருக்கும் அன்பான ஆலோசனையாகவும் முன்வைக்கிறேன்.
பரிசுத்த அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் மண்ணறையை சுவனப் பூஞ்சோலையாக்கி வைத்து, அவர்களின் மறுமை வாழ்வை ஒளிமயமாக்கி, அவர்களையும், நம்மையும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர் அனைவரோடும் சேர்த்தருள்வானாக...
ஹஸ்ரத் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
59. ஆலிம்களின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு... நிரப்பமுடியாத பள்ளம். posted bySalai.Mohamed Mohideen (USA)[21 December 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24704
குல்லு நப்ஸின் தாயிக்கதுல் மௌத். நம் ஆலிம் பெருந்தகையின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு நிரப்ப முடியாத பள்ளம்.
ஒரு ஆலிமுக்காக வேண்டி வானம், பூமி அனைத்திலும் உள்ள உயிர் இனங்கள், கடலில் வாழும் மீன் இனங்களும் பிழை பொறுக்க வேண்டுகின்றன என்பார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுப்பானாக!ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross