சிறுபான்மையினர் மாணவ/மாணவியர்களுக்கான தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்) விண்ணப்பிப்பதற்கான
இறுதி நாள் 31.12.2012 அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தொழில்கல்வி/தொழில்நுட்பக்கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ/மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (Merit Cum Means Based Scholarship) புதுப்பித்தல் ஆன்லைன் (www.momascholarship.gov.in) மூலம் 31.12.2012 வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் முந்தைய ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல்வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை (புதியது) பெற்றிருப்பின் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை மாணவ/மாணவியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு தவறாமல் அனுப்புதல் வேண்டும். விண்ணப்ப படிவத்தையும் உடன் படியிறக்கம் செய்து, கையொப்பமிட்டு அத்துடன் முந்தைய ஆண்டு (2011-12) தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், வருமான சான்று (காலம் 1.4.2011 முதல் 31.3.2012வரை) வங்கி கணக்கு எண் (CBS Account No & IFS Code) விவரங்களுடன் கல்லூரி முதல்வர் / டீன்-க்கு அனுப்புதல் வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மேற்படி விண்ணப்பங்களை பரிசீலித்து, ஆன்லைன் மூலமாகவும், அதன் விண்ணப்பப் படிவங்கள் (மற்றும்) மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் முதல்வரின்/டீன் கையொப்பத்துடன்
சிறுபான்மையினர் நல ஆணையர்,
807,(5-வது தளம்),
அண்ணாசாலை,
சென்னை -600 002
என்ற முகவரிக்கு 10.1.2013 க்குள் தவறாது அனுப்புதல் வேண்டும்.
மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்/டீன் ஆகியோர்களின் கையொப்பமிடாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
மாணவ/மாணவியர்கள் தங்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சிறுபான்மையினர் நல ஆணையருக்கு கல்லூரியிலிருந்து 10.1.2013 க்குள் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
மேலும் உதவிக்கு சிறுபான்மையினர் நல ஆணையர் அலுவலக தொலைபேசிக்கு (Help Line) 044-28523544 தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி - மக்கள் தொடர்புத் துறை, சென்னை - 9. |