காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (நாளை) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில முன்னாள் துணைத்தலைவராகவும், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் துணைத்தலைவராகவும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவராகவும், சமுதாய சேவையாற்றிய - பெருமதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய பெருந்தகை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ அவர்கள் காலமான செய்தி நம் யாவரையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது தலைசிறந்த நாவாற்றலால், சன்மார்க்க பரப்புரை பணிகளை நிறைவாகச் செய்து, உள்நாட்டிலும் - வெளிநாடுகளிலுமுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் தனக்கென தனி இடத்தைப் பெற்றுத் திகழ்ந்த இப்பெருந்தகை அவர்களது மண்ணறையை அல்லாஹ் சுவனப் பூஞ்சோலையாக்கி வைத்தருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.K.ஸாலிஹ்
செய்தித் தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தூத்துக்குடி மாவட்டம்/b> |