காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (இன்று) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்க நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் - தமிழ்நாடு மாநிலதலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அதன் மாநில செயலாளர் நெல்லை மஜீத், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோதர் முகைதீன், டி.பி.எம்.மைதீன் கான், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நெல்லை மாவட்ட தலைவர் மவ்லவீ டி.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜீ, அதன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹீ உள்ளிட்டோரும்,
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முத்து ஹாஜி,
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, அதன் துணைச் செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் கலீல் உள்ளிட்ட நிர்வாகிகள், அனைத்து பேராசிரியர்கள் - மாணவர்கள், ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
ஜலாலிய்யா சங்க செயலாளர் ஹாஜி முஹ்யித்தீன் தம்பி (துரை), காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா ஆகியோரை உள்ளடக்கிய - சுமார் 200 காயலர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மார்க்க அறிஞர்களும், நகரப் பிரமுகர்களும், ஜமாஅத் நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
கடையநல்லூரிலிருந்து
K.M.T..சுலைமான்
படங்கள்:
K.J.ஷாஹுல் ஹமீத் |