காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (இன்று) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - மஹ்பூப் சுப்ஹானீ பெண்கள் தைக்கா வளாகத்தில் இயங்கி வரும் அல்மத்ரஸத்துன் நஸூஹிய்யா சார்பில் அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவியர் இணைந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வரும், எமது மத்ரஸத்துன் நஸூஹிய்யாவின் முதல்வருமான மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ அவர்கள் 20.12.2012 வியாழக்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும், தாருல் பகா அளவில் சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹ வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம்வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியை கொடுத்தருள்வானாக, ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு எங்களது இரங்கலைத் தெரியப்படுத்திக் கொள்வதுடன், அனைவரும் ஸபூர் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |