தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில், ஆறுமுகநேரி உட்கோட்ட அளவில், “மின்சார சிக்கனம் தேவை இக்கனம்” என்ற தலைப்பிலான கவிதைப் போட்டி, 15.12.2012 வெள்ளிக்கிழமையன்று, ஆறுமுகநேரி கே.ஏ.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆறுமுகநேரி உட்கோட்ட அளவிலான பல பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர் எஸ்.கே.முஹம்மத் நாகூர் தாலிப் முதற்பரிசைப் பெற்றார்.
அவரை பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர். |