காயல்பட்டினத்தில் நிறைவேற்றப்படவுள்ள இரண்டாவது பைப்லைன் திட்டம் தொடர்பான அவசரக் கூட்டம், 14.12.2012 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சில நகர்மன்ற உறுப்பினர்கள் தலைவரை நோக்கி சில பிரச்சினைகளை முன்வைத்ததையடுத்து காரசாரமான வாக்குவாதம் உருவானது.
இக்கூட்டம் குறித்த தகவல்களும், வீடியோ பதிவுகளும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், 21.12.2012 வெள்ளிக்கிழமை (நேற்று) ஜும்ஆ தொழுகையின்போது, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் இதுகுறித்து உரையாற்றப்பட்டுள்ளது.
அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார். முதல் குத்பாவில் உலக அழிவு குறித்து பேசப்படும் மூட நம்பிக்கைகள் குறித்தும், உலக அழிவு குறித்த இஸ்லாமிய பார்வையை விளக்கியும் அவர் உரையாற்றினார்.
இரண்டாவது குத்பாவில், டிசம்பர் 14ஆம் தேதியன்று நடைபெற்ற - காயல்பட்டினம் நகராட்சியின் அவசர கூட்டம் குறித்து விமர்சித்துப் பேசினார். அவரது உரையின் வீடியோ பதிவை, http://www.ustream.tv/recorded/27902573 என்ற இணையதள பக்கத்தில் சொடுக்கி காணலாம்.
தகவல்:
S.அப்துல் வாஹித் |