காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (இன்று) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கடையநல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவீ டி.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜீ, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உள்ளிட்ட சமுதாயப் பிரமுகர்கள் - மறைந்த மார்க்க அறிஞரின் சேவைகளை நினைவுகூர்ந்து இரங்கல் உரையாற்றினர்.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆ இறைஞ்சலுடன் கூட்டம் நிறைவுற்றது.
இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜீத், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோதர் முகைதீன், டி.பி.எம்.மைதீன் கான், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹீ உள்ளிட்டோரும்,
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முத்து ஹாஜி,
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, அதன் துணைச் செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் கலீல் உள்ளிட்ட நிர்வாகிகள், அனைத்து பேராசிரியர்கள் - மாணவர்கள், ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், அதன் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்,
காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் (கார்ப்பரேஷன்) ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, அதன் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஹாஜி ஒய்.எஸ்.முஹம்மத் ஃபாரூக்,
ஜலாலிய்யா சங்க செயலாளர் ஹாஜி முஹ்யித்தீன் தம்பி (துரை), காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா ஆகியோரை உள்ளடக்கிய - சுமார் 200 காயலர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மார்க்க அறிஞர்களும், நகரப் பிரமுகர்களும், ஜமாஅத் நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான் (காயல்பட்டினம்)
படங்களில் உதவி:
‘இ.யூ.முஸ்லிம் லீக்’ உஸ்மான் (சென்னை) |