காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (இன்று) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவை முன்னிட்டு, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரி வளாகத்தில், 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
மஹ்ழரா அரபிக்கல்லூரி - மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மறைந்த மார்க்க அறிஞர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீயின் மகன் அப்துல்லாஹ் முன்னிலை வகித்தார்.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், துவக்கமாக இரங்கல் உரையாற்றினார். அடுத்து, கல்லூரி ஆசிரியர்களால் இயற்றப்பட்ட இரங்கல் பாடலை கல்லூரி மாணவர்கள் உருக்கத்துடன் பாடினர்.
அவரைத் தொடர்ந்து, கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபும் - ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
பின்னர், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ இரங்கல் பாடல் பாடினார். அவரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், அல்ஜாமிஉல் கபீர் - சிறிய குத்பாப ள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ முஹம்மத் இஸ்மாஈல், மவ்லவீ ஹாஃபிழ் யாஸர் அரஃபாத் மஹ்ழரீ, மவ்லவீ அஷ்ரஃப் அலீ ஆகியோரும் இரங்கல் உரையாற்றினர்.
மறைந்த மார்க்க அறிஞரின் வாழ்நாள் சேவைகளையும், உரையாற்றும் முறைகளையும் சிலாகித்துப் பேசிய அவர்கள், மாற்றுக் கருத்துள்ளோரைக் கூட மனம் நோகும் சொற்களால் ஒருபோதுமத் பேசியதில்லை என்று அழுத்தமாகத் தெரிவித்தனர்.
கல்லூரியில் ஒரு முதல்வராக அல்லாமல், ஒரு தந்தையாகவும், நிர்வாகிகளுடன் ஒரு உடன்பிறந்த சகோதரராகவுமே அவர் வாழ்ந்து வந்ததாக கல்லூரியின் பேராசிரியர்கள் கூறினர்.
இத்தனை நாட்களாக மஹ்ழராவில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், “நாழிர் ஹஸ்ரத் அவர்களே!” என்று தமது உரையின் துவக்கத்தில் அழைத்து உரையைத் துவங்கியதாகவும், முதன்முறையாக அந்த சொல்லைத் தவிர்த்து உரையாற்றுவதற்கு மனம் ஒப்ப மறுப்பதாகவும் ஓர் ஆசிரியர் தெரிவித்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கண் கலங்கினர்.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ செய்யித் முஹம்மத் துஆ இறைஞ்சலுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், அதன் நிர்வாகிகளான ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா, ஹாஜி ஜெஸ்மின் கலீல், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
ஜாவியா அரபிக் கல்லூரியைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ, மவ்லவீ முஹம்மத் ஹல்ஜீ ஃபாஸீ, அதன் நிர்வாகிகளான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், அதன் பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், சென்னை - காயல்பட்டினம் ஐக்கிய சங்க பிரதிநிதி காயல் அமானுல்லாஹ், துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், அதன் மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிறுவனர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், சென்ட்ரல் பள்ளிகளின் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மஸ்னவீ, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்களான மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, மஸ்ஜித் மீக்காஈல் பள்ளி நிர்வாகி ஹாஜி முஹ்யித்தீன் தம்பி (துரை), அஹ்மத் நெய்னார் பள்ளியின் முத்தவல்லி ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கவுரவ ஆலோசகர் மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், அதன் பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், அதன் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, அதன் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
கள உதவி:
K.M.T.சுலைமான் |