காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (இன்று) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவை முன்னிட்டு, அவரது முன்னாள் மாணவர்கள் சார்பில் ஐக்கிய அரபு அமீரகம் - துபை - டி.ப்ளாக் வளாகத்தில், 21.12.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஙாயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.
பின்னர், மறைந்த மார்க்க அறிஞரின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி, ஈஸால் தவாப் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மறைந்த மார்க்க அறிஞரின் முன்னாள் மாணவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ, ‘முஹிப்புல் உலமா’ அஹ்மத் மஃரூஃப் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.
உரையாற்றிய அனைவரும், மறைந்த மார்க்க அறிஞரின் சேவைகளையும், மத்ரஸாவில் அவர் பாடம் பயிற்றுவித்த முறைகளையும் விளக்கிப் பேசினர்.
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா துஆ இறைஞ்சலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்வுகளில், மறைந்த மார்க்க அறிஞர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீயிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ, ஹாஃபிழ் எஃப்.ஷெய்கு ஸலாஹுத்தீன்,
ஹாஜி எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், டாக்டர் பி.எம்.செய்யித் அஹ்மத், ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி கே.எம்.முஹம்மத் அப்துல் காதிர், எஸ்.எம்.ஏ.முஹம்மத் ஈஸா, ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத், செய்யித் இப்றாஹீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஹாஃபிழ் F.ஷெய்கு ஸலாஹுத்தீன்
படங்கள்:
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ S.A.இஸ்ஹாக் லெப்பை மூலமாக,
ஹாஃபிழ் A.A.C.ஹாஃபிழ் அமீர் |