இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை - MSF காயல்பட்டினம் கிளை சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து இலவச வினியோக நிகழ்ச்சி 25.12.2012 செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளயவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் எதிரிலுள்ள - நூர் கன்ஸ்ட்ரக்ஷன் கேர் நிறுவன அலுவலத்தில் நடைபெற்றது.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோரும் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கினர்.
முன்னதாக, மேடையில் அங்கம் வகித்த அனைவருக்கும் முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் அதன் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர அமைப்புக்குழு உறுப்பினர் எச்.எல்.அப்துல் பாஸித் ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர். மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்ட மாவட்ட - நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர். |