துபாய் காயலர்களின் குளிர்கால ஒன்றுகூடல்!
துபாய் காயலர்களின் குளிர்கால ஒன்று கூடல் நிகழ்ச்சி - டிசம்பர் 28, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது இது குறித்து சாளை சேக் சலீம் (துணைத் தலைவர், துபாய் காயல் நலமான்றம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தற்போது அமீரகத்தில் மிகவும் மனோரஞ்சிதமான தட்பவெப்ப நிலை நிலவி வருவது எல்லோரும் அறிந்த ஒன்றே. இந்த இன்பமான கால நிலையில் துபாய் வாழ் காயலர்கள் விளக்கு தாவூத் ஹாஜி அவர்களின் சொந்த அழைப்பின் பேரில் துபாயில் அமைந்துள்ள கிரீக் (துபாய் கிரீக் பார்க்) பூங்காவில் விடுமுறை தினமான வெள்ளிக்கிழமை 28/12/2012 அன்று ஒரு ஓன்று கூடல் சிறப்பாக சுமார் 50 பேர்கள் கலந்துகொள்ள நடைபெற்றது.
காலையில் விருந்தினர்களை முன்னின்று வரவேற்ப்பதர்க்காக தாவூத் ஹாஜி அவர்கள் காலை 10 மணி முதல் பூங்காவின் நுழைவாசலில் நுழைவுச்சீட்டுடன் காத்திருந்தார்கள். வருகை தந்தோருக்கு சீட்டுகள் விநியோகிக்கபட்டு பலகாரம் தேநீர் பரிமாறப்பட்டது.
இந்த ஓன்று கூடலிற்கு சிறப்பு விருந்தினர்களாக சவூதி அரேபியா ரியாத்தில் இருந்து அமீரகத்திற்கு வருகை புரிந்திருந்த இத்ரீஸ் மற்றும் RMS சாகுல் ஹமீது அவர்கள் குடும்பம் சகிதம் வந்திருந்து சிறப்பித்தனர்.
ஜும்மா தொழுகைக்குப் பிறகு கோழி மற்றும் கறி - கரி அடுப்பில் சுடப்பட்டு (BBQ ) எல்லோருக்கும் மணக்க மணக்க பறிமாறப்பட்டது. சாப்பாட்டிற்குப் பின் குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் விளையாட்டில் ஈடுபட்டிருக்க, அஸர் தொழுகைக்குப்பின் தேநீர் மற்றும் காரம் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
நேரம் ஆக ஆக குளிர் கூடி வந்ததால் மக்ரிப் தொழுகையுடன் ஓன்று கூடல் சிறப்பாய் நிறைவேறியது.
2. சுடும் கறியின் வாசனை கம,கம,கம ... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[29 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24811
துபாயில் சுடும் கறியின் கம கம வாசனை எங்களை ஈர்த்து எல்லை தாண்டி யான்போவிற்க்குள் வந்து விடும் போலுள்ள உணர்வையடைகிறேன்!
அருமை நண்பர் தாவூது ஹாஜி அவர்கள் அணுபொலுதும் கலக்குவார்கள். அது காயலாக இருந்தாலும் சரி, கடல் கடந்த கலணியாக இருந்தாலும் சரி. எப்பொழுதும், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற நிரப்பமான நிய்யத்!
3. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[29 December 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24814
வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்...!!
மகிழ்ச்சி, ஒற்றுமை, ஒன்று கூடல், அகத்திலும் முகத்திலும் சிரிப்பு...!!! இது தானே. இந்த அனைத்தையும் உங்களிடம் கண்டதில் எங்களுக்கும் ஆனந்தம்.
கறி கரியால் சுடப்பட்டு பரிமாறப்பட்டது - என்று மட்டும் போட்டால் பத்தாதா.? அது என்ன " மணக்க மணக்க..! " - படிக்கின்றவர்களுக்கு கடுப்பை கிளப்புறதே இந்த கேம் அங்கிள் உடைய வேலை.
என்ன RMS சாகுல் ஹமீத் மாமா.. துபாய்க்கு சென்றதும் ஆளே மாறிவிட்டீர்கள். பாட்டிலும் கையுமாக இருக்கின்றீங்க..!! கோபம் வேண்டாம். குடிதண்ணீர் பாட்டிலைதான் சொன்னேன். உங்களுக்காகதான் தாவூத் ஹாஜி ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்தார்களோ..!
4. அங்கே சுட்டகரி,இங்கே கலரி கரி posted byNIZAR (KAYALPATNAM)[29 December 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 24817
துபாய் காயலர்களின் குளிர்கால ஒன்றுகூடல் செய்தியும் புகைப்படங்களும் சுட்ட கரி வாடையை கொண்டுவந்தது.
இங்கிருந்து துபாய்க்கு எழும்பும் தோலுமா போறவங்க வரும்போது எக்ஸ்ட்ரா பாடியோட வருவதக்கு இதை போன்ற சந்தோசமான சூழ்நிலையும், தரமான சாப்பாடுதான் என்பது விளங்குதுங்க.
இங்கே ஒரு வாரத்துக்கும் மேலாக கலரி கரிதாங்க, எப்பா போட்டு தாக்குறாங்க, எங்க பார்த்தாலும் தொடர் திருமணம், பந்தல், தோரணை என்று ஊரு களைகட்டி இருக்குதுங்க, ஆனால் சுட்ட கறிக்கு துபாய்தாங்க என்பதை பார்க்கமுடிகிறது.
ரொம்ப நாள் களித்து என் அருமை நண்பன் அப்து சுக்கூர் பார்த்ததில் சந்தோசம், வலை குடாவில் வளமான வாழ்க்கை தொடர வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross