காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம் 19.12.2012 புதன்கிழமையன்று நடைபெறுவதாக இருந்தது. கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 6 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், 3 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டதால், கூட்டத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அப்போது தெரிவித்தார்.
இந்நிலையில், காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. |