காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு தலைவர் ‘நாவலர்’ ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் ஹாஜியின் சகோதரி - காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த எல்.எஸ்.செய்யித் ராபியா, இன்று காலை 06.30 மணியளவில் காலமானார்.
அன்னார், மர்ஹூம் உ.ம.சிராஜுத்தீன் லெப்பைத்தம்பி என்பவரின் மகளும், மர்ஹூம் கிழுறு முஹம்மத் ஹாஜி என்பவரின் மருமகளும், மர்ஹூம் கே.பிள்ளை லெப்பை ஹாஜி என்பவரின் மனைவியும், ஹாஜி எல்.எஸ்.செய்யித் இப்றாஹீம், மர்ஹூம் ஹாஜி எல்.எஸ்.உமர் லெப்பை, எல்.எஸ்.ஜமீல், எல்.எஸ்.அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி எம்.ஏ.ஒலி முஹம்மத் என்பவரின் மாமியும், டாக்டர் கியாதுத்தீன், ஹாஜி எம்.ஏ.முஹம்மத் இல்யாஸ், டாக்டர் எம்.ஏ.செய்யித் இஸ்மாஈல் ஆகியோரின் தாயாரின் தாயாரும், ஹாஜி எம்.ஐ.ஸஜ்ஜாத் அன்வர், எஸ்.ஐ.அபூபக்கர் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 09.00 மணியளவில் காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |