காயல்பட்டினத்தில் சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்புக்கு ஆதரவளிப்பது, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ மறைவுக்கு இரங்கல் உள்ளிட்ட தீர்மானங்கள், ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
துபை காயல் நல மன்றத்தின் டிசம்பர் 2012 மாத செயற்குழு கூட்டம் 28/12/2012 வெள்ளிக்கிழமை அன்று அஸ்ர் தொழுகைக்குப்பின் அல் தவாரில் அமைந்துள்ள மன்றத்தின் தலைவர் J S A புஹாரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராவன்னா அபுல் ஹசன் ஹாஜியார் தலைமை தாங்க நூஹு சாஹிப் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓத கூட்டம் ஆரம்பித்தது.
கூட்ட நிகழ்வுகள் / நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. மஹ்லரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலவி கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்களின் வஃபாத்திற்கு மன்றத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் அவர்களின் இழப்பால் வாடும் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் அன்னாரின் மக்பிரத்திர்க்காக துஆ செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. மன்றத்தின் மருத்துவ உதவிக்குழு இன்னும் ஆறு மாதங்களுக்கு MICRO KAYAL லின் சேவையை உபயோகப்படுத்துவது என்றும் பின்னர் ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் அதனை பரிசீலித்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும்.
3. மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தின் நிறை குறைகள் விவாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் எப்படி கையாளவேண்டும் என்ற வழிமுறைகளும் விவாதிக்கப்பட்டது.
4. ஊரில் KEPA தலைமையில் நடைபெற்று வரும் மாசுக்கட்டுப்பாடு சம்பந்தமாக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு மன்றம் ஒத்துழைப்பு நல்குவது.
5. தாயகத்தில் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் மையம் அமைப்பது சம்பந்தமாக சென்னையில் நல்லவிதம் இயங்கிவரும் KCGC இடம் கருத்துக்கள் கேட்டு அவற்றை செயலாககம் செய்வது.
6. ஏற்கனவே கலந்தாலோசித்த படி ஊரில் ஒரு கூட்டுறவு பல்பொருள் அங்காடி அமைப்பது சம்பந்தமாக ஒரு குழு அமைக்கப்பட்டு வெகு விரைவில் அந்த குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேநீர் விருந்திற்குப் பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |