காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் இளநிலை ஆங்கில ஆசிரியர் எஸ்.ஏ.என்.மீராத்தம்பியின் (தொடர்பு எண்: +91 94877 75765) தந்தை - காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெருவைச் சேர்ந்த செய்யித் அஹ்மத் நெய்னா இன்று அதிகாலை 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 62.
அவர், மர்ஹூம் அஹ்மத் மீராத்தம்பி என்பவரின் மகனும், மர்ஹூம் மாமுனா லெப்பை ஆலிம் என்பவரின் மருமகனும், மர்ஹூம் ஏ.எம்.டி.முத்து ஷாஹுல் ஹமீத் (தொப்பிக் கடை) என்பவரின் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை அஸ்ர் பாங்கு ஒலிக்கும் நேரத்தில், காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தொழுகை நிறைவுற்ற பின்னர் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
5. Re:... posted byFirdous (Colombo)[04 January 2013] IP: 223.*.*.* India | Comment Reference Number: 24889
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் பிழைகளை பொறுத்து நிரந்தர உலகின் சிறப்பான இடத்தை வழங்குவானாக. அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களது குடும்பினதர்களுக்கு சப்ரன் ஜமீலா தருவானாக!
10. Re:... posted bysyedahmed (GZ, China)[04 January 2013] IP: 14.*.*.* China | Comment Reference Number: 24895
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை கொடுப்பானாக ஆமீன். அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன்.
எனது பள்ளி நண்பன், ஆசிரியர் மீராதம்பி உடைய அருமை தந்தை வஃபாத்தான செய்தி அறிந்தேன். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். வல்லோனாம் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவத்தை பொறுத்து, "ஜென்னத்துல் ஃபிர்தௌஸ்" என்னும் மேலான சுவனத்தை வழங்குவானாக. மேலும் அன்னாரின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் "சபுரன் ஜமீலா" எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்.
17. inna posted bysulaiman (saudi)[05 January 2013] IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24906
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் பிழைகளை பொறுத்து நிரந்தர உலகின் சிறப்பான இடத்தை வழங்குவானாக. அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களது குடும்பினதர்களுக்கு சப்ரன் ஜமீலா தருவானாக!
22. கலகலப்பானவர்... posted byS.K.Salih (Kayalpatnam)[06 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24922
எல்லோரோடும் இனிமையாகப் பழகுபவர்...
பொது காரியங்களில் ஒரு வேலை செய்யப்பட வேண்டுமானால், அது என்ன வேலையாக இருந்தாலும் - யாரையும் எதிர்பாராமல் முதல் ஆளாக இருந்து செய்பவர்... அதற்காக எந்த கவுரவமும் பாராதவர்... எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராதவர்...
ஐ.ஐ.எம்.இல் இஃப்தார் நிகழ்ச்சி, உள்ஹிய்யா நிகழ்ச்சிகளைப் படமெடுக்க செல்லும்போதெல்லாம் அவரோடு நான் செய்யும சேட்டைகள் ஏராளம்... ஒருநாள் கூட கோபப்பட்டுப் பேசி நான் பார்த்ததில்லை....
தன்னலம் பாராத இந்த சேவகரின் மறைவு நமக்கு பேரிழப்பு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை! வல்ல அல்லாஹ் அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை அளித்தருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross