தீவிரவாதிகள் ஊடுருவலை முறியடிக்க கடலோரப் பகுதிகளில் ஆபரேஷன் ஹம்லா 2 பாதுகாப்பு ஒத்திகை துவங்கியது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரை சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
தமிழகம், ஆந்திரா மற்றும் புதுகை கடலோர பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பாக ஆபரேஷன் ஹம்லா-2 பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 06.00 மணி முதல் துவங்கியது. இதில் டம்மி வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் 3 முதல் 5 பேர் ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் முக்கிய இடங் களை வெடிபொருட்கள் வைத்து தகர்க்கவோ அல்லது தாக்கவோ முயற்சிக்கலாம் முயலலாம் என்றும் அவர்களை கண்டறிந்து பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் கடலோர காவல்படை, மரைன்போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார், மத்திய மாநில உளவு துறையினர், கியூ பிராஞ்ச் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். டம்மி தீவிரவாதிகள் காயல்பட்டினம் கடற்கரை வழியாக ஊருக்குள் வந்து தரை வழியாகச் சென்று திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியை தாக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகள், செக்போஸ்ட்களில் பாதுகாப்பு துறையினர் விழிப்புடன் கண்காணிப்பதோடு தீவிர சோதனையும் நடத்தி வருகின்றனர். துறைமுகம், மீன்பிடி துறைமுகம், பழைய துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை வரை இந்த ஒத்திகை நடப்பதால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |