காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இத்தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்களைக் கண்டித்தும், அதன் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய - மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களை வலியுறுத்தியும், காயல்பட்டினம் உள்ளிட்ட - தொழிற்சாலையைச் சுற்றியுள்ள ஊர்களில், 2013 - ஜனவரி 15ஆம் தேதிக்குள் 1 லட்சம் கையெழுத்து சேகரித்தல் உட்பட சில தீர்மானங்கள் - 24.12.2012 அன்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நலக் கமிட்டியினர் - நகர்மன்ற அங்கத்தினர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, 01.01.2013 அன்று நடைபெற்ற KEPA செயற்குழுக் கூட்டத்தில் ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிப்பதற்கான செயல்திட்டமும் வடிவமைக்கப்பட்டது.
முன்னதாக, 28.12.2012 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினத்திலுள்ள அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஜாமிஆ மகுதூம் - மகுதூம் ஜும்ஆ பள்ளி, மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஆகிய நான்கு ஜும்ஆ பள்ளிகளிலும் கையெழுத்து சேகரிப்பு நடைபெற்றது.
சிறிய குத்பா பள்ளியில்...
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில்...
மகுதூம் ஜும்ஆ பள்ளியில்...
KEPA செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, 04.01.2013 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் மீண்டும் நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
சிறிய குத்பா பள்ளியில்...
அதுபோல, நகரில் ஆங்காங்கே நடைபெற்ற திருமண அழைப்பு நிகழ்ச்சிகளிலும், மக்கள் அதிகளவில் செல்லும் சாலைகளிலும் கையெழுத்து சேகரிப்பு நடைபெற்றது.
KEPA அங்கத்தினர் களமிறங்கி கையெழுத்து சேகரிப்புப் பணியில் ஈடுபட்டனர். அனைத்து பள்ளிவாசல்களிலும், பொது இடங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டுச் சென்றனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
A.K.இம்ரான் |