காயல்பட்டினத்தில், சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகளில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA)வுடன் ஒத்துழைப்பதென, காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காக்கும் கரங்கள் நற்பனி மன்றத்தின் மாதாந்திர கூட்டம் 6/1/2013 ஞாயிறு இரவு 8.30 மணியளவில் காக்கும் கரங்கள் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு காக்கும் கரங்கள் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தலைமை தாங்கினார். மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் எச்.எல்.அப்துல் பாசித் கிராஅத் ஓதி துவங்கிவைத்தார். மன்றத்தின் துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக்முஹம்மது வரவேற்று பேசினார்.
பின்னர் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு கீழ்கானும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. நகரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, மன்ற உறுப்பினர் ஹஸ்புல்லாஹ் ஷாதுலி அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்தல்.
2. புறநகர் பகுதிகளிலும் ரத்தபிரிவு கண்டரியும் முகாம் நடத்த வேண்டும்.
3. சுற்றுப்புற சூழல் குறித்த நடவடிக்கைக்கு கெபாவுடன் ஒத்துழைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
4. ஐக்கியப் பேரவை பிரதிநிதிகளாக மன்றதலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், ஒருங்கிணைப்பாளர் ஹெச்.எல்.அப்துல் பாசித் ஆகியோர்களை நியமிப்பது என முடிவுசெய்யப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்றத்தின் நிறுவனர் எஸ்.எம்.பி.செய்யது அஹ்மது அஜ்ஹர் நன்றி கூற துஆ ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |