காயல்பட்டினம் வண்ணாக்குடி கடைத் தெருவில் - எல்.கே.மேனிலைப்பள்ளியருகில் பல காலமாக தேங்கிக் கிடந்த குப்பை இன்று காலையில் அகற்றப்பட்டது.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் நகராட்சிக்கு அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், அங்குள்ள குப்பைகளை அகற்றிட நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் உத்தரவிட்டதன் பேரில், இன்று காலை 10.30 மணியளவில் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றினர்.
துப்புரவுப் பணிகளை, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், ஆணையர் ஜி.அஷோக் குமார், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
|