Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:10:28 PM
செவ்வாய் | 8 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1895, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:19
மறைவு18:04மறைவு22:07
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9923
#KOTW9923
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 8, 2013
புதிய குடிநீர் திட்டத்திற்கான பணி ஆணை (Work Order) நகராட்சியால் வழங்கப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2632 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டத்திற்கான பணி ஆணை நகராட்சியால் நேற்று வழங்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-

காயல்பட்டினத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க புதிய குடிநீர் திட்டப்பணிகளை துவக்கிட பணி ஆணையை (WORK ORDER) - 07.01.2013 திங்கட்கிழமையன்று, இப்பணிகளுக்கான ஒப்பந்ததாரரான - சென்னையைச் சார்ந்த Shriram EPC Ltd என்ற நிறுவனத்தின் துணைப்பொது மேலாளர் - காதர் நவாஸ் கானிடம் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் வழங்கினார்.





காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், நகராட்சி பணி மேற்பார்வையாளர் செல்வமணி ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

இந்நிகழ்வின் வீடியோ ஒளிப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!

முன்னதாக இதற்கான ஒப்பந்தத்தில் காயல்பட்டினம் நகராட்சியின் சார்பாக, ஆணையர் ஜி.அஷோக் குமார் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக அதன் துணைப்பொது மேலாளர் காதர் நவாஸ் கான் ஆகியோர் கைச்சான்றிட்டனர்.

அவ்வேளையில் - பணிகள் அனைத்தையும் மே 2014க்குள் முடித்திட உறுதி அளித்த Shriram EPC Ltd நிறுவனத்தின் துணை மேலாளர் உறுதி அளித்தார். மேலும் - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கோரிய படி, இத்திட்டப் பணிகளின் துவக்கப் பணியாக நகரினுள் குடிநீர் விநியோக முறையை புதிதாக அமைத்திட முன்னுரிமை வழங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த திட்டம் மத்திய அரசின் UIDSSMT (Urban Infrastructure Development Scheme for Small and Medium Towns) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது. மொத்த திட்டத் தொகையில் 80 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் காயல்பட்டினம் நகராட்சியும் பங்களிக்கும். அதன்படி காயல்பட்டினம் நகராட்சியின் பங்கு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும். திட்டம் துவக்கப்பட்டு 18 மாதங்களுக்குள் (மழை காலங்களையும் சேர்த்து) நிறைவு செய்யப்படவேண்டும்.

சுமார் 28 கோடியே, 30 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள இப்பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு ஜூலை 28 அன்று நாடு முழுவதும் - தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும், தமிழகம் முழுவதும் தின மலர் நாளிதழிலும் வெளியிடப்பட்டது. இ-டெண்டர் முறையில் வெளியிடப்பட்டு, ஆவணங்களை ஆகஸ்ட் 01 முதல் செப்டம்பர் 03 வரை - இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பதற்கு முன்னர் விளக்க கூட்டம் (Pre-Bid Meeting) ஆகஸ்ட் 23 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்றது.

செப்டம்பர் 04 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் - ஒப்பந்தப் புள்ளிகள், ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. சென்னையைச் சார்ந்த Shriram EPC Limited மற்றும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சார்ந்த Megha Engineering and Infrastructure Limited. இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்திருந்தனர்.

இவ்விரு நிறுவனங்களில் குறைந்த ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பித்த Shriram EPC Ltd நிறுவனத்தின் தொகை - மதிப்பீட்டு தொகையை விட 10 சதவீதத்திற்கும் கூடுதலாக இருந்ததால், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இதுகுறித்த பேச்சுவார்த்தையை அந்நிறுவனத்துடன் நடத்தியது. அதன் பிறகு அந்நிறுவனத்தால் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளி, மதிப்பீடு அளவை விட 10 சதவீதற்கு சற்று குறைவாக இருந்தது.

அரசு விதிகளின் படி, மதிப்பீட்டு தொகையை விட 5 சதவீதத்திற்கு கூடுதலான ஒப்பந்தப் புள்ளிகளுக்கு மட்டுமே நகராட்சியால் ஒப்பந்தம் வழங்க முடியும். 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதலான ஒப்பந்தப்புள்ளிகள், உயர் அதிகாரிகள் அடங்கிய Tender Award Committee மூலமே அனுமதி வழங்கப்படவேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன், இது குறித்து சென்னையில் கூடிய Tender Award Committee, Shriram EPC Ltd நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை ஏற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனம், பாதுகாப்புத் தொகையை சமர்ப்பித்துள்ளதையடுத்து தற்போது ஒப்பந்தம் கைச்சான்றிடப்பட்டு பணிகள் துவக்கப்படவுள்ளன.

[கிழமை திருத்தப்பட்டுள்ளது @ 10:52 / 08.01.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.N.Sulaiman (Bangalore) [08 January 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24934

சிறு திருத்தம், 07.01.2013 திங்கள் கிழமை....

Moderator: Corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னல்லாஹ்மா ஸாபிரீன்
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU) [08 January 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24937

இன்னல்லாஹ்மா ஸாபிரீன்"
பொறுமையானவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்ற அல்குரானின் வசனம் இந்த அகிலத்தில் அர்த்தமற்றதாகிவிடாது!.

பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும், உண்மையுடனும் முயன்றுகொண்டே இருந்தோம் அதனுடைய பலனை படைத்தவன் தரத்துவங்கிய சுவடுகள் எங்களை குளிரவைக்கும் சந்தோஷ சுவடுகளே!

இறைவன் உதவியால் எல்லாப்பணிகளும் நிறையுற்று நமதூரின் தண்ணீர் பற்றாகுறை என்ற பேச்சே பறந்து போய் விடட்டும்!

இந்த நல்ல செய்தியை உங்கள் இணயதளத்தில் வீடியோ படத்துடன் பார்த்து பரவசம் ஆனேன்!

மீடியாவும், வீடியாவும் எவ்வளவு பயனுள்ள செய்திகளை உடனுக்குடன் இவ்உலகத்திற்கு தெரிவிக்க உதவுகிறது. இந்த மீடியோவை, வீடியோவை வேண்டாம் என்று கூறும் நபர்களை கண்டுகொள்ள வேண்டாம், அவர்கள் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் பின்னால் உண்மையான இதயங்கள் எப்பொழுதும் அணிவகுத்து நிற்ப்போம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by மஹ்மூது ரஜ்வி (தம்மாம்) [09 January 2013]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24948

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவரின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டதை அறிந்து மிக்க மகிழ்ச்சி இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! இத்திட்டம் முழுமை பெறவும் அல்லாஹ் அருள்புரிவானாகவும் ஆமீன்.



நன்றி!வஸ்ஸலாம்.

மஹ்மூது ரஜ்வி
தம்மாம், சவூதி அரேபியா.
Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [09 January 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24956

நமது காயல் மாநகருக்கு மிக பெரிய பயனை தர உள்ள இந்த மிக முக்கியமான & நல்ல ஒரு பயன் உள்ள திட்டம் ,வல்ல நாயன் அருளால் நல்ல முறையில் செயல் வடிவில் வந்து , நமது காயல் நகர அணைத்து மக்களும் நல்ல வகையில் விரைவில் பயன் பெற எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் இதமழை!  (8/1/2013) [Views - 2518; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved