தமிழக அரசின் உத்தரவுப்படி, இம்மாதம் 20ஆம் தேதியும், பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
*** குழந்தைகளுக்கு ஏற்படும் இளம்பிள்ளை வாத (போலியோ) நோயைத் தடுக்கும் நோக்குடன், வருகிற 20.01.2013 மற்றும் 24.02.2013 ஆகிய இரு நாட்களில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளது.
*** இப்பணிக்காக, 1104 சொட்டு மருந்து மையங்களில், 4620 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்குவர்.
*** அன்றைய நாட்களில் காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
*** போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கு ஒரே வழி போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுப்பது மட்டுமே!
*** ஏற்கனவே போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், இம்முறையும் இந்த கூடுதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்தைக் கொடுக்க வேண்டும்.
*** தூத்துக்குடி மாவட்டத்தில், 1,56,578 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளது.
இந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட பொது சுகாதாரத்துறை செய்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்களில் காயல்பட்டினம் நகரில் சுமார் 14 இடங்களில் முகாம் நடைபெறும். |