ஆட்டோ ஓட்டுநர்கள், பெண்களிடம் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆறுமுகநேரியில் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் பகுதிகளில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக காவல்துறைக்கு தெரிவிக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் - ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமை தாங்கினார்.
துணை ஆய்வாளர்கள் ராஜகுமாரி, சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினத்தின் 15 ஆட்டோ ஸ்டாண்டுகளைச் சேர்ந்த சுமார் 125 ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*** ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்ட விரோத செயல்கள் நடப்பதாகத் தெரிந்தால், அதுபற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரவேண்டும்.
*** மாணவியர், இளம்பெண்கள் மற்றும் அனைத்து தரப்பு பெண்களிடமும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
*** பள்ளிக்குச் செல்லும் சிறுவர் - சிறுமியரை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக ஆட்டோவில் ஏற்றி செல்லக்கூடாது.
*** ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட உரியய ஆவணங்கள் இல்லாமலோ, குடி போதையிலோ ஆட்டோ ஓட்டுபவா;கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
*** கண்டிப்பாக சீருடை, பெயர் பேட்ஜ் அணிந்திருக்கவேண்டும்.
*** ஒவ்வொரு டிரைவரும் தங்களது போட்டோவுடன் கூடிய அனைத்து விபரங்களையும் தனித்தனி படிவங்களில் நிரப்பி 2 நாட்களுக்குள் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. |