காயல்பட்டினத்தில் பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காயல்பட்டினம் பெரிய நெசவு தெரு ஜமாத் தலைவர் அகம்மது ஒருங்கிணைப்பாளர்கள் ஜாகீர், புகாரி ஆகியோர் தலைமையில் பகுதி பொதுமக்கள் மக்கள் சுமார் 50பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், காயல்பட்டினத்தில் நெடுஞ்சாலையில் இருவழி போக்குவரத்தை கடந்த பிப்ரவரி மாதம் ஒருவழி பாதையாக்கி, பொதுமக்கள் குடியிருப்பு பகுதியான பெரிய நெசவு தெருவுக்கு போக்குவரத்தை மாற்றி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கு பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், 13அடி அகலம் கொண்ட ரோட்டில் போக்குவரத்து செல்ல எடுத்த முடிவை கண்டித்து போராட்டங்கள் நடந்தன.
இதையடுத்து காயல்பட்டினம் பேரூராட்சி சிபாரிசு செய்த, மாற்றுவழிப் பாதையினை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. உறுதி அளித்து 10 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த மாற்றுவழிப் பாதையினை முன்னாள் நகராட்சி தலைவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.
எனவே, மாற்றுபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவ்வழியில் போக்குவரத்து செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்
[படம் இணைக்கப்பட்டுள்ளது @ 22:25 / 31.12.2012] |