நகர்நலப் பணிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து, நகர்நல அமைப்புகள் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், 25.12.2012 செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சி - நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். முஸ்லிம் லீக் நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
அறிமுகவுரை:
தொடர்ந்து, கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
KEPA கோரிக்கை:
பின்னர், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய கோரிக்கைகளை காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) சார்பில் அதன் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா விளக்கிப் பேசினார்.
பேரவை கோரிக்கை:
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாடு தொடர்பான கோரிக்கைகளை விளக்கி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பிரபு சுல்தான் பேசினார்.
பின்னர், இரு அமைப்புகளின் சார்பிலும் தலைவர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
மனு அளிப்பு:
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் கோரிக்கை மனுவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம், KEPA தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ்வும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மானிடம், அதன் துணைத்தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கரும் வழங்கினர்.
பின்னர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் பொதுச்செயலாளர் பிரபு சுல்தான் - பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம் கோரிக்கைகளை வழங்கினார்.
சாதனை மாணவர்களுக்கு பரிசு:
அதனைத் தொடர்ந்து, நகர முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்டு வரும் - சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறையின் பேச்சுப் பயிற்சி வகுப்புகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு முஸ்லிம் லீக் தலைவர்கள் பரிசுகளை வழங்கினர்.
மாணவரணி நிர்வாகிகள் அறிமுகம்:
பின்னர், முஸ்லிம் லீக் மாணவரணியான - முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்.) நகர கிளைக்கு நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தலைவர்கள் வாழ்த்துரை:
அதனைத் தொடர்ந்து, வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
காயல் மகபூபுக்கு வரவேற்பு:
தொடர்ந்து, அண்மையில் ஹாங்காங், மலேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூபை, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நன்றியுரைக்குப் பின், கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ஹாஜி பிரபுத்தம்பி, எம்.ஏ.எஸ்.ஜரூக், எல்.எம்.இ.கைலானீ உள்ளிட்டோரும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைத்தலைவர்களான டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ, மூத்த செயற்குழு உறுப்பினர் மக்கீ நூஹுத்தம்பி உள்ளிட்டோரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி - நெல்லை - குமரி மாவட்ட நிர்வாகிகளும், காயல்பட்டினம் நகர நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |