காயல்பட்டினம் நகராட்சியின் (டிசம்பர் மாத) சாதாரண கூட்டம், டிசம்பர் 19ஆம் தேதியன்று (இன்று) காலை 10.30 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கோரி - காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் அளித்த பொருளும், கூட்டப் பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |