காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் 30.11.2012 வெள்ளிக்கிழமையன்று மாலை 04.25 மணியளவில், நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அந்நேரத்தில் ஊரிலில்லாத 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீனைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்களும், அவை குறித்த விபரங்களும் வருமாறு:-
மீண்டும் மீண்டும் இப்பொருளை கூட்டப் பொருளில் கொண்டு வருவதன் நோக்கமென்ன என்று 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேள்வியெழுப்பினார்.
ஒரு தீர்மானத்தை இன்னொரு தீர்மானம் மூலம்தான் ரத்து செய்ய இயலும் என்றும், நகர்மன்றக் கூட்ட நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்வதென்பது ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக இருக்க, இதுவரை அதனை ரத்து செய்ய தீர்மானமியற்றப்படவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
தலைவியின் நேர்மை மீது உறுப்பினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், நகர்மன்றக் கூட்டங்களை வீடியோ செய்கையில், அதன் பதிவுகளில் தனக்கு சாதகமானதை வைத்துக்கொண்டு, பாதகமானதை விட்டுவிடுவார் என்று தாங்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், தனக்கு நல்ல பெயரும் - உறுப்பினர்களுக்குக் கெட்ட பெயரும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வாரப்பத்திரிக்கையில் மலிவான விளம்பர நோக்குடன் தலைவி பேட்டியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய நகர்மன்றத் தலைவர், கூட்டப் பொருளில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து மட்டுமே கூட்டத்தில் பேசுமாறும், இதர விஷயங்களை பேசத் தேவையில்லை என்றும் கூறினார்.
பெரும்பாலான உறுப்பினர்கள் வீடியோ பதிவு வேண்டாம் என்று கருத்து தெரிவித்திருக்க, வேண்டும் என்று தலைவி பிடிவாதம் காண்பிப்பது ஏன் என்று 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், வீடியோ பதிவு செய்யப்பட்டால், தலைவரோ - உறுப்பினர்களோ, முன்னுக்குப் பின் முரணாக யார் பேசினாலும், யார் தவறிழைத்தாலும் காண்பித்துவிடும் என்றும், பெரும்பான்மை அடிப்படையில் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்துகொண்டு முன்பு நடந்த அனைத்தையும் மாற்றிச் சொல்லிவிடுவதால், உண்மையில் நடந்தது என்ன என்பதை தற்போது அறிய முடியாமல் உள்ளதாகவும், வீடியோ பதிவு இருந்தால் இக்குறை இனி வருங்காலங்களிலாவது இல்லாமல் போகும் என்றும் தெரிவித்தார்.
மன்றத்தின் பார்வைக்குத் தரப்பட வேண்டிய நகராட்சி நிர்வாக அறிக்கை எங்கே என்று 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேள்வியெழுப்பினார். அறிக்கை உடனடியாக பெறப்படாததால் இப்பொருள் குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரின் கடிதம் எங்கே என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேள்வியெழுப்பினார். கடிதம் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
பின்னர் எழுந்து பேசிய 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஊடகங்களின் மீது தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு எதுவுமில்லை என்றும், அவர்கள் ஒருதலைபட்சமாக செய்தி வெளியிடுவதுதான் பிரச்சினை என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர்களை நகர்மன்றத்தின் அனுமதி பெற்ற பின் செய்தி சேகரிக்கும் வகையில் தீர்மானம் இயற்றினால்தான், பிற்காலங்களில் அவர்களை அழைத்துப் பேச முடியும் என்றும், ஏற்கனவே இரண்டு இணையதளங்களுக்கு நகர்மன்றத் தலைவர் வழங்கிய அனுமதிக் கடிதத்தை மீண்டும் மன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்க வேண்டும் என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.
பின்னர் பேசிய நகர்மன்றத் தலைவர், செய்தியாளர்களுக்கு அனுமதியளித்து துவக்கத்தில் தான் அளித்த கடிதத்தை, உறுப்பினர்கள் விரும்பினால் ரத்து செய்து தீர்மானம் கொண்டு வரட்டும் என்று தெரிவித்தார்.
நகராட்சிக்குத் தொடர்பில்லாத அம்சம் என்ற காரணத்தால் இப்பொருளை ரத்து செய்யலாம் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
வெப்சைட் விவகாரங்கள் குறித்த பொருளை மட்டும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
இத்தொட்டி கட்டப்பட்ட நாள் முதல் தண்ணீர் ஏற்றப்படவில்லை என்றும், தண்ணீர் ஏற்ற இயலாவிட்டால் அதை இடித்தகற்றுமாறும் 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா தெரிவித்தார். அதுபோல, மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கும் இவ்வாறே கோரப்பட்டது.
மருந்தடித்து கம்பளிப்பூச்சிகளை ஒழிக்க தீர்மானிக்கப்பட்டது.
அவரவர் விருப்பத்திற்கு நகர் முழுக்க வேகத்தடைகளை எந்த வரைமுறையுமின்றி அமைத்துக்கொள்வதாகவும், நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கெங்கு வேகத்தடை தேவை என்பது குறித்து பட்டியல் தயாரித்து, அதன்படி வேகத்தடைகள் அமைக்கப்படும் என்றும் வேண்டாத வேகத்தடைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி திட்ட உதவி அலுவலர் செந்தில் குமார் தெரிவித்தார்.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

பழைய லாரியை பழுது பார்க்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இருக்கும் லாரிகளுக்கே ஓட்டுநர் பற்றாக்குறை இருக்க, புதிய லாரிகள் வாங்க வேண்டுமென்பது அவசியமற்றது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
தற்போது புதிய சாலைகளை அமைத்தால், 2ஆவது பைப்லைன் திட்டத்திற்காக மீண்டும் அவற்றை உடைக்க வேண்டியது வரும் என்றும், எனவே அத்திட்டம் நிறைவுற்ற பின்னர் நகரில் புதிய சாலைகளை அமைக்கலாம் என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் தெரிவித்தார்.
நகராட்சி நிதிநிலையை அனுசரித்து இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
DCW ஆலை, காயல்பட்டினம் நகராட்சிக்கு தொழில் வரியாக 2,13,000 ரூபாயும், கட்டிட வரியாக 7,00,000 ரூபாயும், உரிமங்களுக்காக 1,00,000 ரூபாயும் என மொத்தம் 10,13,000 ரூபாய் தருவதாகவும், அங்கு பணியாற்றும் பணியார்கள் குறித்து ஆலை நிர்வாகம் தகவல் எதுவும் அளிப்பதில்லை என்றும் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் தெரிவித்தார்.
நகராட்சிக்கு ஆலை நிர்வாகம் தர வேண்டிய தகவல்களைத் தரத் தவறினால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
DCW ஆலைக்கு நேரில் சென்று - நவ.29 அன்று காயல்பட்டினத்தில் ஓர் அமைப்பு தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் அந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
பின்னர் எழுந்து பேசிய 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, அந்த ஆலையில் சில காலம் தான் ஊதிய அடிப்படையில் பணியாற்றியதாகவும், தான் ஒன்றும் அபின் கடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அவைக்கு அவசியமில்லாத விஷயங்களை இங்கு பேச வேண்டாம் என்று கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் மற்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர், “எங்களைப் பற்றி இணையதளத்தில் அறுத்துக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கும் கட்டளையிட வேண்டியதுதானே...?” என்று கேட்டனர்.
இவ்வாறாக, இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் இத்திட்டப்படி செய்யலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
ஊஞ்சல்கள், ராட்டினங்களை அமைக்க அனுமதித்தால் கலாச்சார சீரழிவு ஏற்படும் என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார். அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே இதைச் செய்கிறார்கள் என்று ஆணையர் கேள்வியெழுப்பினார். கடைகளுக்கு தனியிடம் ஒதுக்கி வரைமுறைப்படுத்தலாம் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமில்லாத நிலையில் யாருக்கோ இரக்கப்பட்டு, ஊர் மக்களுக்கு வினையைத் தேடித்தரும் முயற்சியில் இறங்கத் தேவையில்லை என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இதே பொருள் பின்வரும் கூட்டப் பொருளிலும் வருவதால் அப்போது விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
தெரு விளக்கு மாட்டப்பட்டதாக காட்டப்பட்டுள்ள இப்பட்டியல் குறித்து யாராவது ஆய்வு செய்தீர்களா என நகர்மன்றத் தலைவர் கேட்டார். ஆய்வு செய்யுமாறு எங்களிடம் கேட்டீர்களா என 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். ஆய்வு செய்யும்படி அனைத்து உறுப்பினர்களிடமும் தான் கேட்டுக்கொண்டதாகவும், யாரும் செய்யவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டப் பொருளை யார் கொண்டு வந்தது என 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். ஆணையரிடம் கேட்குமாறு நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். ஆணையர், தானே அப்பொருளைக் கொண்டு வந்ததாகவும், மன்றம் தீர்மானித்து முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்தார். தற்போது இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லையென்றும், அரசிடமிருந்து இதுகுறித்து ஆணை வந்த பின் விவாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கணினி இயக்குநர் ஒருவருக்கான பணியிடத்தையும் இணைத்துக்கொண்டு, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதுபோன்ற கூட்டப் பொருட்களுக்கு வாகனத்தின் பதிவு எண்ணை மறவாமல் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
மரத்தை வெட்டும் விஷயத்தில் நகராட்சி தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது என்றும், துறை சார் அதிகாரிகளின் உத்தரவு பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்டர்நெட் மயமான இக்காலத்தில், ஃபேஸ்புக் போன்றவற்றில் விபரங்களைப் பெற்றுக்கொண்டு, அந்நியர்கள் தெருக்களுக்குள் நுழையும் வாய்ப்புள்ளதால் தெருக்களுக்கு பெயர்ப்பலகையை நிறுவத் தேவையில்லை என்று 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார். அதே கருத்தை 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் வழிமொழிந்தார். இதர உறுப்பினர்கள் பலர் பெயர்ப்பலகை அவசியம் நிறுவப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
அவ்வாறு பெயர்ப்பலகை நிறுவ முடிவெடுக்கப்பட்டாலும், என் வார்டிலுள்ள தெருக்களுக்கு வைக்கத் தேவையில்லை... அதற்கு நான் சம்மதிக்க மாட்டோம் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அரசுத் துறை சார்ந்த வளாகங்களில் இதுபோன்ற பணிகளை நகராட்சி செய்ய இயலாது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இப்பொருள் நிராகரிக்கப்பட்டது.
அதற்குரிய தொழில்நுட்ப வல்லுநர்கள் வருவதற்கு தாமதமாவதாகவும், விரைவில் இக்குறை சரிசெய்யப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு விளம்பரம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
கட்டிடப் பணியாளர்களை நகராட்சி பேருந்து நிலையம் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாக பகுதியில் ஒன்றுகூட வலியுறுத்தலாம் என்றும், தேவையைக் கருத்திற்கொண்டு காவல்துறையின் உதவியை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது. எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு அருகிலுள்ள நகராட்சி தினசரி சந்தையின் வெளியிலும் பல வணிகர்கள் கடைகளை அமைத்து வணிகம் செய்து வருவதாகவும், அவை தடுக்கப்பட வேண்டும் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
நகரில் வேகத்தடை அமைக்கத் தேவையான இடங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு, அவற்றுக்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இப்பொருள் குறித்த நடவடிக்கை நடைமுறை சாத்தியமற்றது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
“கொம்புத்துறையில் இரண்டு லைன்கள் உள்ளன... அதை ஒரு லைனாக மாற்ற வேண்டும்” என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அக்டோபர் மாத செலவினக் கணக்கு மட்டுமே நகராட்சி நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இக்கூட்டப் பொருளில் “அக்டோபர் 2012-ம் மாதம் வரையுள்ள” என்று வாசகம் உள்ளதாகவும், அத்தனை மாதங்களுக்குமான செலவுக் கணக்குகளுக்கும் ஒப்புதல் கேட்கும் வகையில் இப்பொருள் வாசகம் அமைந்துள்ளதால், செலவு கணக்கு காட்டப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்கு மட்டும் ஒப்புதல் வழங்கலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தலைவி விருப்பப்படி இ-டெண்டர் விட முடிவெடுக்கப்பட்ட பிறகு, ஒப்பந்தக்காரர்கள் அவ்வப்போது இணையதளம் வாயிலாக டெண்டர் விபரங்களைப் பார்க்க வேண்டும் என்றும், அவர்களுக்குத் தகவல் அனுப்பவில்லை என்பதையெல்லாம் அவர்கள் ஒரு குறையாகச் சொல்வது சரியல்ல என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், எந்த வகை டெண்டராக இருந்தாலும், அரசு விதிப்படி என்னென்ன முறைமைகள் உள்ளனவோ அவையனைத்தும் முறையாக செய்யப்பட வேண்டும் என்றும், அவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்யத் தவறினாலும் அது குற்றமே என்றும், முறைப்படி அனைத்தையும் செய்து, மறு டெண்டர் விடுவதே சரியானது என்றும் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் எவரிடத்திலும் கோரிக்கை வைக்க இயலாது என்றும், மன்றத் தலைவர் - உறுப்பினர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கோரிக்கை வைப்பதில் தவறில்லை என்றும், நகராட்சி திட்ட உதவி அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.
மன்றத்தில் தீர்மானமியற்றி, ஐக்கியப் பேரவையிடம் நிலம் கேட்டு கோரிக்கை வைக்கலாம் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
இதற்காக அரசிடம் நிலம் கேட்கலாம் என்றும், அது கிடைக்காதபட்சத்தில் - ஒரு அமைப்பு என்றில்லாமல், பரவலாக ஊரிலுள்ள அமைப்புகளுக்கு நகராட்சி நிர்வாகம் சாராமல் கடிதம் எழுதி வேண்டுகோள் வைக்கலாம் என நகர்மன்றத் தலைவர் தெரிவிக்க, அடுத்து பேசிய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், அனைத்து அமைப்புகளுக்கும் கடிதம் வழங்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர்கள் பலர், அது கடற்கரை ஒழுங்கு சட்ட விதிகளுக்குட்பட்ட (CRZ) பகுதியில் வருவதாகவும், எனவே அனுமதியளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர். பின்னர் பேசிய 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, புகாரிஷ் ஷரீஃப் பின்புறம் இதே நில மட்டத்திலிருக்கும் குடியிருப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது போல தங்கள் பகுதிக்கும் அனுமதியளிக்கலாமே என்று தெரிவித்தார்.
CRZ விதிமுறை காரணமாகத்தான் ப்ளான் அனுமதி தரப்படவில்லை என்றால், கற்புடையார் பள்ளி வட்டத்தில் அதே இடத்திலுள்ள இதர சில வீடுகளுக்கு மட்டும் அனுமதியளித்தது எப்படி என்று உறுப்பினர் ஜெ.அந்தோணி கேட்க, “அவற்றையும் கேன்சல் செய்து விடலாம்” என்று ஆணையர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய நகர்மன்றத் தலைவர், “ஆணையர் சொன்ன படி கேன்சல் செய்யலாம்... தவறாக அப்ரூவல் கொடுத்ததற்காக அவர் மீது நடவடிக்கையும் எடுக்கலாம்” என்று தெரிவித்தார்.
ஐக்கியப் பேரவையிடம் இதற்காக நிலம் கேட்கலாம் என்று தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர், வார இதழ் ஒன்றில் நகர்மன்றத் தலைவர் அளித்த பேட்டி குறித்து விமர்சித்துப் பேசினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய நகர்மன்றத் தலைவர், கூட்டப் பொருளைத் தவிர இதர விஷயங்களை கூட்டத்தில் பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.
குப்பை கொட்ட அரசிடம் முதலில் இடம் கேட்கலாம் என்றும், எடுத்ததற்கெல்லாம் மக்களிடமே அனைத்தையும் கேட்கத் தேவையில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
அரசு நூலகத்திற்கு மட்டும் தனியாரிடம் கோரிக்கை வைத்ததேன் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் நகர்மன்றத் தலைவரிடம் கேள்வியெழுப்பினார். அது தன்னிறைவுத் திட்டம் என்றும், இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்கு அரசிடம் கேட்டதன் அடிப்படையில் இடம் கிடைத்தது போல, இதற்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டு, அது கைகூடாவிடில் அடுத்தகட்டமாக நகர அமைப்புகளிடம் கேட்கலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான நிதியாதாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து பெற முயற்சிக்கலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
முறைகேடான நடவடிக்கைகள் எங்கெங்கு மேற்கொள்ளப்படுகிறது என்று ஆய்ந்தறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் 10 டன் வாங்க வேண்டிய அவசியமில்லை என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, 3 டன் ப்ளீச்சிங் பவுடர் வாங்க தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
காயல்பட்டினத்திலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் அரசு விரைவுப் பேருந்து சேவை அண்மைக்காலமாக இயக்கப்படவில்லை என்பதைக் கருத்திற்கொண்டு, நகர பொதுநல ஆர்வலர் ஒருவர் போக்குவரத்துத் துறையிடம் விசாரித்ததாகவும், காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள - நகராட்சிக்கு சொந்தமான இக்கழிப்பறை பராமரிப்பின்றி பூட்டி வைக்கப்பட்டிருப்பதால், பேருந்து ஓட்டுநர் - நடத்துநருக்கு சிரமம் ஏற்படுவதாகவும், எனவே தற்காலிகமாக இச்சேவை இயக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் இதுகுறித்து நடவடிக்கையெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு, கூட்டப்பொருட்கள் குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அக்டோபர் 2012 வரையிலான - நகராட்சியின் வங்கிக் கணக்குகள் இருப்பு விபரம்:
கூட்டத் துளிகள்...
விடுபட்ட கூட்டப்பொருள் எண்:
கூட்டப் பொருள் எண் 105க்குப் பிறகு அடுத்த பொருளுக்கு 106 என்பதற்கு பதிலாக 107 என்று கூட்டப் பொருளில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.
மாதந்தோறும் நடைபெறும் நகர்மன்றக் கூட்டங்களுக்கான கூட்டப் பொருளில் எழுத்துப் பிழைகளைப் பார்த்து திருத்தும் வழக்கம் இதுவரை காணப்படவில்லை. அவசர கதியில் தட்டச்சு செய்து, அனைவருக்கும் கூட்டப் பொருள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நகர்மன்றக் கூட்டம் நடைபெறும்போதுதான் பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
நகர சபைக்குள் ‘நக்கீரன்’:
‘நக்கீரன்’ நவம்பர் 24-27 இதழில், “லஞ்சம் வாங்காத தலைவிக்கு நெருக்கடி” என்ற தலைப்பில் ஒரு செய்தித் தொகுப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா மற்றும் நகர்மன்றத் தலைவருக்கு ஆதரவாகவும் - எதிராகவும் கருத்துக்களைக் கொண்ட பொதுமக்களில் சிலரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு - அவை அச்செய்தித் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்தித் தொகுப்பு பின்வருமாறு:-
(செய்தித் தொகுப்பை பெரிதாகக் காண - அதன் மீது சொடுக்குக!)
நடப்பு நகர்மன்றக் கூட்டத்தில், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு உள்ளிட்டோர் ‘நக்கீரன்’ இதழில் வெளியான இச்செய்தி குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
நகர்மன்றக் கூட்டம் என்பது, நகர மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக கலந்தாலோசிக்கும் கூட்டம் என்பதால், அதில் கூட்டப் பொருட்கள் தவிர வேறெதையும் குறித்து பேச வேண்டாம் என்று நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதைக் காதில் வாங்காமல் தொடர்ந்து அதுகுறித்து சில உறுப்பினர்கள் விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
கூட்டப் பொருட்கள் 100க்கும் மேல் இருப்பதாகவும், நேரம் குறைவாக உள்ளதாகவும் கூறிய நகர்மன்றத் தலைவர், கூட்டப் பொருள் தவிர வேறெந்த விஷயங்கள் குறித்தும் பேசும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
துவக்கத்தில் இதைக் கேலி செய்து விமர்சித்த உறுப்பினர்கள் சிலர், சிறிது நேரத்தில் மவுனம் காத்தனர்.
பார்வையாளர்கள்:
இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
|