கடந்த சில காலமாக தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிப்பு பரவலாகக் காணப்பட்டு வருகிறது. இவ்வகை காய்ச்சல் வராது தடுக்கவும், காய்ச்சல் கண்டோருக்கு சிகிச்சையாகவும், சித்த மருத்துவ அடிப்படையிலான மருந்துகள் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மருந்துகளில் ஒன்றான நிலவேம்புக் குடிநீர், தமிழகமெங்கும் வழங்கப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், சதுக்கைத் தெருவிலுள்ள பெரிய சதுக்கை வளாகத்தில், நிலவேம்புக் குடிநீர் இலவச வினியோக முகாம், இம்மாதம் 16, 17 (ஞாயிறு, திங்கள்) தேதிகளில் - காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை வழங்கப்படவுள்ளது.
இரண்டு நாட்களுக்கு - குறைந்தது இரண்டு முறை என்ற அளவில் உட்கொள்ள வேண்டிய இம்மருந்தை 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உட்கொள்ளலாம்.
குறைந்தளவிலேயே மருந்துகள் பெறப்பட்டுள்ளதால், டோக்கன் முன்பதிவு அடிப்படையில் பயனாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படவுள்ளதாகவும், முன்பதிவு செய்ய விரும்புவோர்,
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அல்அமீன் மார்க்கெட் & ரியல் எஸ்டேட்
அல்லது
காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி அருகிலுள்ள அல்தாஃப் என்டர்ப்ரைசஸ்
ஆகிய நிறுவனங்களில் டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், இம்முகாமை ஏற்பாடு செய்துள்ள அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |