காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா 07.12.2012 வெள்ளிக்கிழமை மாலையில், பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
பள்ளி மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையுரையாற்றினார். பின்னர், பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருச்செந்தூர் - மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே.விவேகானந்தன் சிறப்புரையாற்றினார்.
பின்னர், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியர் எம்.டேவிட் செல்லப்பா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் அப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம், ஜமால் மற்றும் முன்னாள் மாணவர் ஹிட்லர் சதக் உள்ளிட்டோர் செய்திருந்தனர். |