DCW தொழிற்சாலையின் அத்துமீறலுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில்,
இம்மாதம் (டிசம்பர் 2012) 10ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் - காயலர்களை
திரளாக அழைத்துச் சென்று மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கோரி, சென்னை - மண்ணடியிலுள்ள ஜும்ஆ பள்ளிகளில் வெள்ளியன்று (டிசம்பர் 7) அறிவிப்பு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக - வெள்ளியன்று மாலை, சென்னையில் உள்ள காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் தலைவர் கத்தீப் சலீம் ஹாஜியிடம், KEPA சார்பாக - சென்னை வாழ் காயலர்கள், மனு சமர்ப்பிப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஆவனம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் - காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (Kayalpattinam Chennai Guidance Centre - KCGC) நிர்வாகிகளை சந்தித்தும் இக்கோரிக்கை வைக்கப்பட்டது.
|