1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் தேதியன்று, உத்திரபிரதேசம் - அயோத்தியிலுள்ள பாபரி மஸ்ஜித், சமூக விரோதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 06ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகளால் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் அந்நாளில் காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, டிசம்பர் 06ஆம் நாளான இன்று காயல்பட்டினத்தில் பெரும்பாலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பிரதான வீதி, பெரிய தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார், பேருந்து நிலைய வணிக வளாகம் போன்ற பகுதிகளில் பெரும்பாலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆட்டோ - வேன் - கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் ஓடவில்லை.
இக்கடையடைப்பு காரணமாக நகரின் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடையடைப்பின்போது நகரில் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாதிருக்க, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கள உதவி:
A.S.புகாரீ
(பதுரிய்யா ஹோட்டல்) |