ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூர் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில், அதன் புதிய தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் (அபு பாய்) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் .(வரஹ்)
எமது அமைப்பின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் நோக்குடன், மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் - 02.12.2012 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ அவர்கள் தலைமையில், ஹாஜி ஜஹாங்கிர் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. ஹாஜி எஸ்.ஐ.அஹ்மத் முஹ்யித்தீன், ஹாஜி எஸ்.எல்.உஸைர் மவ்லானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகளை செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூ தாஹிர் (அபு பாய்) விளக்கிப் பேசினார்.
வருகை தந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களின் நிறைவான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மறைந்த தலைவருக்கு இரங்கல்:
எமது மன்றத்தின் தலைவராக இருந்த ஹாஜி முஸ்தஃ/பா கமால் அவர்களின் மறைவுக்கு மன்றத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.
தீர்மானம் 2 - புதிய செயற்குழு:
புதிய நிர்வாகக் குழுவை அங்கீகரித்தும் அவர்களின் பதவிக் காலம் இன்ஷாஅல்லாஹ் 31.12.2013 வரை என்றும், அதன் பின்னர் புதிய நிர்வாகக்குழுவை தேர்ந்தெடுக்கவோ அல்லது இக்குழுவுடைய பதவி காலத்தை நீட்டிக்கவோ பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானித்து, பின்வருமாறு புதிய செயற்குழுவை ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கிறது:
தலைவர்:
ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் (அபு பாய்)
துணைத் தலைவர்கள்:
ஹாஜி எஸ்.ஐ. அஹ்மத் முஹ்யித்தீன்
ஹாஜி எஸ்.எம்.தாஹிர்
செயலாளர்:
ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத்
துணைச் செயலாளர்கள்:
‘அன்பில்’ அலாவுத்தீன்
பி.எம்.லுக்மான் மவ்லானா
பொருளாளர்:
ஒய்.எச்.எம்.ஷாஹுல் ஹமீத்
துணைப் பொருளாளர்கள்:
ஹாஃபிழ் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
ஓ.எல்.ஷெய்கு அப்துல் காதிர்
ஒருங்கினைப்பாளர்கள்:
ஹாஃபிழ் ஏ.இம்தாதுல்லாஹ்
எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர்
செயற்குழு உறுப்பினர்கள்:
ஹாஃபிழ் பி.மீரா ஸாஹிப்
ஏ.எம்.அப்துர் ரஹ்மான்
கே.ஷாஹுல் ஹமீத்
எம்.ஐ.கலீலுர்ரஹ்மான்
மவ்லவீ எம்.டி.அபுல் காஸிம் மஹ்ழரீ
ஹாஃபிழ் எஸ்.எம்.நுஸ்கீ
ஹாஜி எம்.டி.ஜபரூத் மவ்லானா
ஹாஜி எம்.எஸ்.ஹஸன் நெய்னா
என்.எம்.ஸூஃபீ ஹுஸைன்
தீர்மானம் 3 - விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழு:
கல்வி மற்றும் மருத்துவ உதவி கோரி நம் மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்ய,
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ,
ஹாஜி எஸ்.எம்.காதர்,
ஹாஜி எம்.எல்.ஸதக்கத்துல்லாஹ்
ஆகியோரை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கறது.
தீர்மானம் 4 - KEPA அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு:
தனியார் தொழிற்சாலை மூலம் நமதூருக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுகளைக் களைய நடவடிக்கை எடுக்கும் KEPA அமைப்பிற்கு முழு ஓத்துழைப்பு அளிப்பது எனவும், இது குறித்து நமதூர் மற்றும் சுற்றுவட்டார மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வமைப்பிற்கு வேண்டுகோள் விடுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 5 - மன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி:
jakwa2012@gmail.com என, மன்றத்திற்கு தனி மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தவும், இனி வருங்காலங்களில் மன்றத்தின் அனைத்து தொடர்புகளும் இதன் மூலமே மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.ஐ.கலீலுர் ரஹ்மான் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ துஆ ஓத, ஸலவாத் - கஃப்பாரவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பில், அதன் தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் (அபு பாய்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |