Re:... posted byCnash (Holy Makkah)[01 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24296
ஓய்வு பெற்ற பிறகும் DCW நிறுவனத்திற்கு ஓய்வின்றி உழைக்க துடிக்கும் நண்பர்களே, நீங்கள் ஓய்வு பெற்று சுகமாக
இருக்கிறீர்கள் ஒத்துகொள்கிறோம், எங்களையும் எங்கள் சந்ததியிரனையும் தான் உங்கள் சுகத்திற்காகவும், உங்கள்
முதலாளியின் பணத்தாசைக்காக வேண்டி காவு கொடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்ததான் இந்த
போராட்டம். .நீங்கள் விசுவாசத்தை காட்டுவதற்கு வெளியிட்ட நோட்டீஸ் ஆகா இருந்தாலும் உங்களை பயன்படுத்தி
இருந்தாலும் சரி! பொருளாதாரம்தான் உங்களின் நோக்கம் என்றிருக்கும்போது, எங்கள் மண்ணையும் எங்கள் மக்களின்
உயிரையும் காப்பதில்உள்ள எங்கள் மக்களின் நோக்கம் உங்கள் அற்ப நோக்கத்தை விட ஆயிரம் மடங்கு உன்னதமானது
எனபதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.
நீங்கள் செய்யும் அட்டுழியங்களை நாங்கள் மட்டும் சொல்லவில்லை, எத்தனையோ ஆய்வுக்கு பிறகும்,
ஆராய்ச்சியாளர்களின் முடிவிற்கும் பிறகுதான் தெளிவு பெற்று வீதிக்கு வந்து போராடுகிறோம், ஆண்டாண்டு
காலம் எங்களை முட்டாளாக்கி கொண்டிருக்கமுடியாது. இவ்வளவு விளக்கம் கொடுத்திருக்கும் நீங்கள் எங்கள்
கடலை சிகப்பாக்கி எங்கள் ஊரின் அழகிய சூழலை நாசமாக்கி கொண்டிருப்பதைபற்றி ஏன் வாய்திறக்கவில்லை.
கேரளா மாநிலம் கொச்சியில் அமைத்துள்ள CENTRAL MERINE FISHERIES RESEARCH INSTITUTE CMFRI )1995 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் உங்கள் DCW நிறுவனம் வருடந்தோறும் நவம்பர் முதல் ஜனவரி மாத மழைகாலங்களின் அந்த தொழிற்சாலையின் திரவ கழிவுகளை காயல்பட்டினம் கடலின் கலப்பதாகவும், இதனால் அத்தொழிற்சாலையை சுற்றி உள்ள கடல் பகுதிகளின் கடல்மீன்கள் நட்சுதன்மையால்
இறந்து ஒதுங்குவதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளதே அது பொய்யா? அவர்களுக்கு என்ன காழ்புணர்ச்சி உங்கள் மீது!!!
உங்கள் நிறுவனத்திற்கு முன் பலகையில் "உயிரை கொன்று உணவாக உண்ணாதே" என்று போர்டு போட்டு கொண்டு
இத்தனை லட்சகணக்கில் கடல் உயிரை கொலை செய்கிறீர்களே அது உங்கள் பார்வையில் உயிராக தெரிவதில்லையா?
வாயில் துணி கட்டி, வழியை பெருக்கி கொண்டு உயிருக்கு தீங்கு செய்ய மாட்டோம் என்று உங்கள் முதலாளிகள் மத
கோசம் போட்டு கொண்டு, இப்படி கடல் உயிர்களை கொள்ளுவது தான் நியதியா?
இறந்துபோன மீன்களை ஆராய்ந்த போது அதன் வயிற்றில் நச்சு தன்மை கொண்ட MERCURY போன்ற உலோகங்கள்
உட்கொள்ளபட்டிருக்கின்றது என்று அதே CMFRI இன் ஆய்வு சொல்லுகிறதே!! அதற்கு என்ன பதில்? இப்போது
அழித்துவிட்டதாக சொல்லும் மெர்குரி பயன்பாட்டை, கடந்த 40 வருடங்களாக கடலின் கரைத்து நச்சு
தன்மையாக்கியதற்க்கு யார் பொறுப்பு? பயன்பாட்டை நிறுத்தி விட்டோம் என்று சொன்னபின்னும் கூட எடுக்கபட்ட
ஆய்வின் மெர்குரி மற்றும் நச்சு உலோகங்கள் வரையறுக்கபட்ட அளவைவிட அதிகமாக கழிவில் கண்டெடுக்கபட்டுள்ளதே
அதற்கு உங்கள் பதில் என்ன?
எல்லாவற்றிலும் அழிவு உள்ளது என்பது எங்களுக்கும் தெரியும் பறக்கும் விமானத்தில் பணிக்கதான் செய்கிறோம்,
ஆனால் வானிலை சரி இல்லை விமானம் கோளாறு என்று தெரிந்தும் ஒரு விமானி விமானத்தை இயக்கினால்
தெரிந்து கொண்டே ஏறி சாவை விலைக்கு வாங்க நாங்கள் மூடர்கள் அல்ல!
உங்களைபோல தான் சில வருடங்களுக்கு முன் பீடியை அரசு தடைசெய்த போது தங்கள் பொருளாதாரம் வாழ்வாதாரம்
பாதிக்கபடுவதாய் சில முதலாளிகளின் தூண்டுதலின் அப்பாவி மக்கள் போராட்டம் நடத்தினர், அவர்கள் சாவை
அவர்களே சுவாசிப்பது தெரியாமல்!!! பாவம் அவர்கள் படிப்பறிவில்லா மக்கள் !! ஆனால் நீங்கள் அப்படி இல்லை
படிப்பை அறிந்து, பாதிப்பையும் அறிந்து அதே சமயம் மிக பெரிய பலனை அறிந்தவர்கள்.
உங்களுக்கோ உங்கள் வாரிசுகளுக்கோ எந்த நோயும் இல்லாமல் நலமுடன் வாழ்வதாக சொல்லி இருக்கிறீர்கள்
சந்தோஷம்!! ஆனால் வேலை செய்யும் உங்களுக்கு சகல விதமான பாதுகாப்பு உபகரணங்கள் , மருத்துவ வசதிகள்
வழங்கப்பட்டு இருப்பது போல் எங்கள் அப்பாவி மக்களுக்கு இல்லையே!! கூடங்குளம் அனுமின் நிலையத்தால் பலன்
பணிபுரிபவர்க்கு தான் ஆனால் பாதிப்பு அப்பாவி மக்களுக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே!
உங்களுக்கு ஏதும் ஏற்பாட்டால் கூட அந்நிறுவனம் காப்பீடு வழங்குகிறது, பொருளாதார தேவைகளுக்கு நீங்கள்
விருப்பபட்டு பணிபுரிகிறீர்கள். எங்களுக்கு என்ன அவசியம் நோயை வாங்குவதற்கு!!
கழிவுகள் உங்கள் பகுதியில் கலக்கபடவில்லை, எங்கள் கடலின் கலக்கபடுகிறது!! உங்கள் இடம் சோலையாகவும்
சொர்க்கமாகவும் இருந்தால், கடலின் கலக்கும் அந்த கழிவுகளை உங்கள் பகுதியில் கலக்க விட்டோ அல்லது
உங்கள் நிறுவனத்தில் மறுசுழற்சி செய்தோ உபயோகித்து பாருங்கள். எங்கள் மக்களின் உயிரோடு விளையாடுவதை
நிறுத்தி கொள்ளுங்கள்.
இந்த DCWவால் காயல்பட்டினத்தில் எத்தனை இளைஞர்கள் பயன் பெற்றார்கள் என்று புள்ளிவிகித கணக்கு சொல்ல
முடியுமா? யாருக்கு வேலை கொடுக்கபட்டு வருகிறது என்பதை ஒப்பிட்டு பார்ப்போமா? அப்படியே நாங்கள்
பயனடைந்து இருந்தாலும் சுற்றுபுறத்திக்கும், உயிருக்கும் ஆபத்து என்றால் அப்படி ஒரு பயன் எங்களுக்கு தேவை
இல்லை? உயிரை விலையாக்கி பயன் யாருக்கு வேண்டும்?
காயல் நகராட்சி ஏதோ இந்த DCW கொடுக்கும் வரியில் தான் ஓடுவது போன்று சொல்லி இருக்கிறீர்களே?
காயல் நகராட்சியின் மொத்த வருமானம் என்ன தெரியுமா .. ஆண்டுக்கு 4 கோடி ...உங்கள் DCW அளிக்கும் வரி
வெறும் 6% மட்டுமே ...கட்டாத காலி மனை வரி கணக்கு எல்லாம் நோட்டீஸ் அடிச்ச உங்களுக்கு தெரியுமா?
இந்த இளைஞர்கள் மற்றும் பெரியோர்களால் எங்களையும் எங்கள் மக்களையும் பாதுகாக்க அமைக்கபட்ட அமைப்பு
எங்கள் பெரியோர்கள் ஊர்மக்கள், மற்றும் மாற்றுமத சகோதரர்கள் எல்லோருடைய ஆதரவும் இதற்கு இருக்கிறது,
பெரியோர்கள் ஆதரிக்க வில்லை, ஊர்மக்கள் ஆதரிக்க வில்லை என்று நோட்டீஸ் மூலம் சிண்டு முடிந்து விட
வேண்டாம் , இன்று வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் கடையடைப்பு மூலம் ஊர்மக்களின் ஆதரவை
அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இது எங்கள் உரிமை போராட்டம் .... வாழ்வுரிமை போராட்டம்..
இறுதி வெற்றி அல்லாஹ்வின் உதவியால் பாதிக்கபட்ட எங்கள் மக்களுக்கே! இன்ஷா அல்லாஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross