Re:... posted bySEYED ALI (ABUDHABHI)[01 December 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24303
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஒழுங்காக செயல் பட்டிருந்தாலே இதுமாதிரி ஆலை ஒழுங்கீனங்கள் எத்தனையோ இதுவரை காணாமல் போய் இருக்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு அதிகாரி குறிப்பிட்டிருப்பதை படித்தேன். அப்படியானால் நம் மாநிலத்தின் வாரியங்கள் எல்லாம் என்ன இழவு லக்ஷணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. நம் வரிப்பணங்கள் எல்லாம் இவர்களுக்கு தண்டச் சம்பல்மாகத்தான் போயகொண்டிருக்கிறதா?
கூடங்குளம் விஷயத்தில் கூட சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இவர்களை மண்டையில் குட்டிய சம்பவமும் நினைவிருக்கிறது. இப்போது இவர்கள் கையில் நம்மவர்கள் டிசிடபிள்யூவின் மோசடிகளைக் குரித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
முல்லைப்பெரியார் காவிரி என்று நம் மாநிலம் தன் உரிமைகளை இழந்து நிற்க இப்போது ஆளுக்கு ஆள் கழிவு சாக்கடை தொழிற்சாலைகளை இங்கே கொண்டு வந்து நம்மை சேதப்படுத்தி கொண்டிருக்கிறார்களே. இதெர்க்கேல்லாம் காரணம் யார்?
வக்கணை பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை நமக்கு. முதலில் இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் தொலைய வேண்டும். டிஎம்கே, அஇஅதிமுக என்ற மாச்சரியகள் எல்லாம் நம்மூரிலிருந்து தொலைய வேண்டும். தனிப்பட்ட முறையில் கலைஞர் செல்வி என்று அவர்கள் போடும் பிச்சை காசுக்காக நேரத்தையும் காலத்தையும் விரயம் செய்து மேடை போட்டு கூச்சலிடுவது ஒழிய வேண்டும். நம் மாநிலத்தில்தான் இந்த கிறுக்குத்தனம் அதிகம்.
மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டாமா. ஒரு பயலும் தமிழன் என்றாலே மதிப்பதில்லை. மன்னிக்கவும் சம்பந்தமில்லாமல் நான் எதுவும் எழுதவில்லை. சிந்தித்து பாருங்கள். இப்போது நடக்கும் கேடுகளுக்கும் நம் புத்தி தடுமாற்றத்திற்கும் சம்பந்தம் நிறைய உண்டு.
இனி மேல் இவ்வளவு ஆன பிறகு இந்த தரங்கதாராவை எவன் இங்கிருந்து குஜராத்திற்கு உண்மையில் விரட்டுகிரானோ அந்த கட்சிக்குத்தான் எங்கள் ஒட்டு என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.செய்வார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross