தங்கத்தால் இமயம் செய்து தந்திடினும் தாயன்புக்கு ஈடேது இவ்வுலகில்...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[02 December 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24305
சேர்மன் ஐ.ஆபிதா அவர்களின் இக் கட்டுரை வெளிவந்த நாள் முதல் இன்று வரை நான் படிக்கவே இல்லை! சரி இது ஏதோ பஞ்சாயத்து மேட்டராக இருக்கும். ஒன்ணு டெண்டர் விடுறதெ பத்தி இருக்கும் அல்லது திடக்கழிவு குறித்து இருக்கும் என வாசிப்பதை தவிர்த்து வந்தேன். இன்று எனக்கு விடுமுறை நாள் சரி என்னதான் எழுதியிருக்காங்கன்னு பார்ப்போமே? என அரை மனதோடு வாசிக்கத் துவங்கினேன்.
கட்டுரையைப் படித்து முடித்ததும் இதயம் கனத்தது. கண்கள் கசிந்தன. இது ஒரு தாயின் குமுறல் மட்டும் அல்ல! ஆயிரக்கணக்கான தாய்மார்களின் உள்ளத்தின் கொதிப்பு! ஒரு பத்து நிமிடங்கள் தனியாகப் போய் உட்கார்ந்து விட்டேன். அவர்களின் ஆதங்கம், ஒரு தாய்க்கே உரித்தான அக்கறை, சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக எடுத்துரைத்த விதம், மனதைத் தொட்டு சிந்தையில் ஊடுருவிய வார்த்தைகள். மகளுக்கு உணவை மறந்தாலும் மருந்தை மறக்காமல் கொண்டு வந்த நிகழ்வு, அந்த பிஞ்சு மழலைகள் படும் பாடு, இவையாவும் என் மனக்கண் முன் வந்து நின்று என்னைக் கொல்லாமல் கொன்றது.
யா அல்லாஹ் இந்த தாய் மற்றும் இது போன்ற தாய்மார்களின் குமுறல்களை நீ செவியுற்று எங்கள் சந்ததிகளின் சீரான வாழ்வுக்கு வழி காட்டு வல்லோனே!
அநியாயம் செய்து வரும் DCW அரக்கனை அடியோடு எம் மண்ணிலிருந்து எடுபட்டுப் போகச் செய்தருள் நாயகனே!
மழலைகள் படும் பாட்டையும், பெரியவர்கள் படும் சொல்லவொண்ணாத வேதனைகளும், வீட்டுக்கு வீடு புற்று நோயின் குடிபுகல் மூலம் விலைமதிப்பில்லா இன்னுயிரை இழந்து வருகின்றோமே? இதற்கோர் முடிவை உன் புறத்திலிருந்து இறக்கியருள் ரஹ்மானே!
எம்மையும் எமதூர் மக்களையும் உன் மேலான பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து, வரும் பிணிகளிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும், முசீபத்துக்களில் இருந்தும் காப்பாற்றியருள் கருணையாளனே! ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்! யா அர்ஹமர்ராஹிமீன்!
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross