செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! நகரின் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எந்த ஒரு சமூக அமைப்பிலும் இணைந்து, களப்பணியாற்ற
விரும்பாமல், மற்றவர்களை காயப்படுத்தும் விதத்தில்
எழுதும் வெற்று கருத்தாளிகளின் கருத்துக்களுக்கு எவ்வித
மதிப்பும் இல்லை. எனினும், தவறான வாதங்களுக்கு பதில்
சொல்வதன் மூலம், இவர்கள் திருந்தவில்லை எனினும்,
ஊர் நலனில் உண்மையான அக்கறை கொண்ட சகோதரர்கள்
விளங்கிக் கொள்ளவே இந்த பதிப்பு.
பெரியவர்களின் வழிகாட்டுதலோடு, இளைஞர்கள் செயலாற்ற
வேண்டும் என்பதில் என்ன பிரிவினை கருத்து இருக்கிறது?
ஐக்கியப் பேரவை உள்ளிட்ட அனைத்து சமூக அமைப்புகளின்
பெரியவர்களோடும், அன்றாடம் தொடர்பில் இருப்பவர்கள்
நாங்கள். இவர்கள் அல்லாமல் பெரியவர்கள் என்று யாரைக்
கருதுவது? பிரிவினை என்று வெற்று கோஷம் எழுப்பும்
இவர்கள் ஊரின் ஒற்றுமைக்காக பெரியவர்களோடு இணைந்து
இன்று வரை என்ன செய்திருக்கின்றார்கள்? கடந்த பத்தாண்டு
காலமாக, இன்றைய இளைஞர்கள் செயலாற்றும் அனைத்து
காரியங்களிலும் பெரியவர்களின் ஆலோசனை, துஆ, மற்றும்
வழிகாட்டுதல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
கள்ள ஓட்டு போடுவதை ஆதரித்து, தேசத்தின் இறையாண்மையை எதிர்த்து கருத்து எழுதியவர்கள் (கருத்து
எண்; 11124 ) ஊரின் ஒற்றுமை குறித்து பேசுவதற்கும்,
எழுதுவதற்கும் தகுதியற்றவர்கள்.
தவமறைந்து அல்லவை செய்தல் வேட்டுவன்
புதர்மறைந்து புள்சிமிழ்த் தற்று.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross