السلام عليكم ورحمة الله وبركاته posted byM.S.Kaja Mahlari (Singapore)[02 December 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24315
மாஷாஅல்லாஹ். மிகவும் அருமையான ,அவசியமான தீர்மானங்கள். அணைத்து தீர்மானமும் செயல்வடிவம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக !
அடுத்து DCW தொழிற்சாலையின் மூலம் ஏற்படும் மாசு, சுற்றுப்புற சூழல்கள், பயங்கர நோய் நொடிகள் என அனைத்துவித ஆபத்துகளும் தடுக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் பல்வேறு வழிகளில் நமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகிறோம்.
அதே போன்று அவர்களால் நடத்தப்படும் "கமலாவதி ஆங்கில மீடியா " பள்ளியில் நமதூர் மாணவ, மாணவிகளை அங்கிருந்து விலக்கி கொள்ளவேண்டும். இதுவும் நாம் காட்டும் எதிர்ப்புமாகும்.
அங்கு படிக்கும் நமதூர் முஸ்லிம் மாணவர்களுக்கும் ஜும்மா தொழுகை இல்லை. முஸ்லிம் மாணவர்களுக்கு அந்நிய மத கலாச்சாரம் மறைமுகமாக போதிக்கப்படுகிறது.
பல லட்ச ரூபாய் பணங்கள் நமதூரில் இருந்து மாதா மாதம் அவர்களிடம் குவிகிறது.
ஏன்? நமதூரில் திறமையான ஆங்கில வழி பாடசாலைகள் இல்லையா? அங்கு நமது மாணவ,மாணவிகளை சேர்க்கலாம். மார்க்க அறிவும், ஒழுக்கமும், இஸ்லாமிய கலாச்சாரமும் கிடைக்குமல்லவா?
நமதூரில் இயங்கும் பாட சாலைகளின் பயனை, அதன் தரத்தை உயர்த்த நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமல்லவா? தயவுசெய்து இதனை அனைவரும் சிந்தித்து நமது அணைத்து பிள்ளைகளையும் அங்கிருந்து அகற்றி நமது எதிர்ப்பை அதன் மூலம் காட்ட அதற்கென ஒரு "தீர்மானம்" போட்டு, அதனை செயல்படுத்தவேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான முயற்சியை நாம் எடுப்பதற்கும் ,அதனை செயல் படுத்துவதற்கும் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross