செய்தி: DCW தொழிற்சாலை குறித்த டிசம்பர் 10 மனு சமர்ப்பிப்பு நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கோரி சென்னையில் உள்ள காயலர்கள் அமைப்புகளிடம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழு வாழ விடு posted byS.A.Muhammad Ali (Dubai)[10 December 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24430
இன்று dec 10 "மனித உரிமைகள் தினம்". நம் காயலின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் மனு கொடுக்க இருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
கேட்பாரற்று கிடந்த நம் உரிமைகளை தட்டி கேட்க புறப்பட்டுள்ள இந்த KEPA மென்மேலும் தனது குறிக்கோளில் தொடர்ந்து சென்று நம் உரிமைகளை மீட்டெடுக்க வாழ்த்துகிறேன்.
ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான மனித உரிமை வந்துவிடுகின்றன. உயிர்வாழ்வதற்கான உரிமை, கருத்துசுதந்திரம், கல்வி,மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம்.
நம்முடைய நிலத்தடி நீரை உறிஞ்சும்,சுகாதாரம் மற்றும் நம் வாழ்வாதாரங்களை அழிக்கும் DCW ஆலைக்கு தற்போது KEPA வை கண்டு பயம் வந்து விட்டது.
தண்ணீரில் எவ்வளவு அழுத்தினாலும் மேல்வரும் தக்கையை போல எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்நீச்சல் போடும் உங்களுக்கு இந்த மனித உரிமைகள் தினத்தில் வாழ்த்துக்களோடு நன்றியையும் காணிக்கையாக்குகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross